Saturday, 14 August 2010

Honey Badger

உருளும் டயர்களை உருவாக்கியவர்

ரப்பர் டயர்கள் இல்லாமல் இன்றைய உலகப் போக்குவரத்து இல்லை. விண்ணில் பறக்கும் விமானங்கள் முதல், தரையில் ஓடும் இரு சக்கர வாகனங்கள், பேருந்துகள், பலசரக்கு வாகனங்கள் வரை டயர்களே அவற்றின் கால்கள்.



ரப்பரை வல்கனைசிங் மூலம் தயாரித் தால், அதனை எத்தனை அதிகமான வெப்பத் திலும் உருகாமல் வைத்திருக்கலாம் என்று முதலில் நிரூபித்தவர், அமெரிக்கரான சார்லஸ் குட் இயர்.


வல்கனைஸ்டு ரப்பர் பிறந்ததே யதேச்சை யாகத்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?


சிறுவயது முதல் ரப்பர் மீது ஆர்வம் கொண்டிருந்த சார்லஸ்குட் இயர், அதில் ஏதாவது சோதனைகள் செய்து கொண்டே இருந்தார். ரப்பரை எரிப்பது, பலவித பொருள்களைச் சேர்ப்பது என்று விதவிதமாகச் சோதனை செய்து பார்த்துக் கொண்டிருந்தார். ரப்பரை தீயில் இடும்போது எழும் துர்நாற்றம் தாங்கவில்லை என்று அக்கம்பக்கத்தினர் காவல் துறையில் புகார் செய்ய, காவல் துறையினர் அவரைத் துரத்திய கதையும் நடந்தது.


பின்னர் நியூயார்க் சென்ற குட் இயர், அங்கு ஒரு வாடகை அறையில் தனது பரி சோதனையைத் தொடர்ந்தார்.


ஒருநாள், ரப்பரையும் கந்தகத்தையும் கலந்து குட் இயர் ஆய்வு செய்து கொண் டிருந்தபோது அது சிதறி, எதிர்பாராமல் பக்கத்தில் இருந்த சூடான அடுப்பின் மீது சிதறிவிட்டது. பின்னர் அதை குட்- இயர் யதேச்சையாக எடுத்துப் பார்த்தபோது, ரப்பர் அதற்குரிய பிசுபிசுப்பான தன்மை இல்லாமல், ஒட்டாமல், மிருதுவாகவும், வளைந்து கொடுக்கும்தன்மை கொண்டதாகவும் இருந்தது. எந்தக் கடும் வெப்பத்திலும், குளிரிலும் அந்த ரப்பர் இந்தத் தன்மையை இழக்கவில்லை.


குட் இயரின் இந்தக் கண்டுபிடிப்பு ஒரு புதிய புரட்சியாக அமைந்தது. தனது கண்டுபிடிப்பால் குட் இயர் பெருஞ்செல்வம் சேர்த்தபோதும் பலரின் சூழ்ச்சிகளால் கடைசியில் எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்து, கடனாளியாகவே இறந்தார்.

ஈஸ்டர் தீவு

ஈஸ்டர் தீவு (Easter Island) என்பது பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கே அமைந்துள்ள பொலினீசியத் தீவாகும். இது சிலியின் ஆளுகைக்கு உட்பட்ட சிறப்பு மண்டலம் ஆகும். ராப்பானூயி மக்களினால் அமைக்கப்பட்ட மோவாய் (moai) என அழைக்கப்படும் பல நினைவுச் சின்னங்கள் இத்தீவின் சிறப்பாகும். இது உலகப் பாரம்பரியக் களமாகும்.
பெயர்







"ஈஸ்டர் தீவு" என்பது முதன் முதலாக இங்கு வந்திறங்கிய டச்சுப் பயணியான ஜேக்கப் ரகவீன் என்பவரால் கொடுக்கப்பட்டது. இவர் இத்தீவில் 1722 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு நாளன்று வந்திறங்கினார்.






இத்தீவின் தற்போதைய பொலினீசியப் பெயர் "ராப்பா நூயி" (Rapa Nui அல்லது "பெரும் ராப்பா" எனப்பொருள். பிரெஞ்சு பொலினீசியாவின் பாஸ் தீவுகளில் இருந்து 1870களில் இங்கு குடியேறிய ராப்பா மக்களின் நினைவாக இப்பெயர் இடப்பட்டது
புவியியல்



ஈஸ்டர் தீவு






ஈஸ்டர் தீவு உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட குடியேற்றத் தீவுகளில் ஒன்றாகும். இது சிலியில் இருந்து 3,600 கிமீ (2,237 மைல்) மேற்கேயும், பிட்கேர்ன் தீவில் இருந்து 2,075 கிமீ (1,290 மைல்) கிழக்கே அமைந்துள்ளது.
 
வரலாறு







ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு சிறிய தனித் தீவு, முதன்முதல் பார்த்தவர்களிலிருந்து இன்றுவரைப் பார்ப்பவர்களின் விழிகளை வியப்பில்லாழ்த்திக் கொண்டிருக்கிறது. தென்கிழக்கு பசிபிக் தீவுகளில் ஒன்று, இதன் பொலினிசியப் பெயர் ரப்பா நுயி (Rapa Nui). தற்சமயம் சிலியின் அரசுக்குட்பட்ட சிறப்பு பகுதி. கி.பி 1722 டச்சைச் சேர்ந்த ஜேக்கப் ரகவீன் (Jacob Roggeveen) ஈஸ்டர் தினத்தில் இந்த தீவுக்கு வந்தார், வந்த இடத்தில் இந்த தீவின் பெயரை கேட்டு தீவுவாசிகளைச் சிரமப்படுத்தாமல் "ஈஸ்டர் தீவு" என்று நாமகரணம் சூட்டிவிட்டார். ஜேக்கப் எதனைப் பார்த்து திகைத்தாரோ அவை இன்னமும் நம்மை திகைப்படைய வைக்கின்றன, அது மோவாய்கள் (Moai).


1990களில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 15 மோவய்கள்






மனித முகம் போல் தோற்றமுடைய மோவய்கள் என்ற பிரமாண்டமான நூற்றுக்கணக்கான கற்சிலைகள் தீவெங்கும் காணப்படுகின்றன, உயரம் சராசரியாக 10 மீட்டர், எடை 80 டன். ஒரு மர்மமான கற்கால நாகரீகத்தின் நினைவாக எஞ்சியிருப்பது மோவய்கள் தவிர ஒன்றுமில்லை. யார் இந்த சிலைகளைச் செய்தார்கள் ?, எதற்காக இந்த சிலைகளைகள் ?, செய்தவர்கள் எங்கே ? அவர்களுக்கு என்ன ஆனது? எல்லாவற்றையும் தோண்டிக்கொண்டிருந்த தொல்பொருள் ஆய்வாளர்களையே தோண்டியது இந்தக் கேள்விகள். விஞ்ஞானம் வளரவளர பதிலலித்தது மெதுவாக.






ஈஸ்டர் தீவு, ஒரு தனித்தீவு அருகில் நிலப்பரப்பு கிழக்கில் தென் அமெரிக்கா மேற்கில் பொலினீசிய தீவுகள் ஆனால் இரண்டும் இருப்பதோ ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில். பெரும் நிலப்பரப்பான தென் அமெரிக்காவிலிருந்து வந்திருக்ககூடும் என்று நம்பப்பட்டு வந்ததை மாற்றியவர் எரிக்கா. ஒவ்வொரு இனத்துக்கும் மரபியல் நியதி (genetic code) வேறுபடும். அதன் படி ஈஸ்டர் தீவுவாசிகளின் எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்ட டி. என். ஏ ஜெனடிக் கோட் ஒத்துப்போனது பொலினேசிய கோட். அந்த நாளில் சாதாரண படகுகள் மூலம் அவர்கள் கடந்த தூரம் மலைக்க வைக்கிறது, உலகின் நடந்த மாபெரும் கடல் வழி இடப்பெயர்ச்சி.



இந்த இடப்பெயர்ச்சி கிபி ஏழாம் நூற்றாண்டில் நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது, அதற்குப்பின் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு யாரும் இந்த தீவுக்கு வரவில்லை. தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகள் அங்கே நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்திருந்ததையும், வேளாண்மை, மீன்பிடித்தல் முக்கிய தொழிலாக இருந்ததையும் மக்கள் தொகை 12,000 ஆக இருந்திருக்கலாம் என்றும் உறுதிப்படுத்தின.






பிரமாண்டமான கற்சிலைகள், எப்படி ஒரு கற்கால மனிதர்களால் இதை செய்யமுடிந்தது? எப்படி அவர்கள் இதை தீவைச் சுற்றி நகர்த்தினார்கள் என்பது முதல் ஆச்சரியம். அடுத்தது ரானோ ரரக்கூ (Rano Raraku), இந்த மொவய்கள் செதுக்கப்பட்ட கற்சுரங்கம் முன்னூறுக்கும் மேற்ப்பட்ட மொவய்கள் பல்வேறு நிலைகளில் இன்றும் காணப்படுகின்றன எடை 80 டன்னிலிருந்து 250 டன் வரை. பத்து மைல் தூரம் வரை தீவைச்சுற்றி நகர்த்தியிருக்கிறார்கள்.






மூதாதையர்களின் வாழும் முகங்கள் இதைத்தான் மொவய்கள் குறிக்கின்றது. இந்த மோவய்களுடன் காணப்படுவது மனிதனும் பறவையும் சேர்ந்த ஒரு உருவம் (பறவை மனிதன்).






எது இந்த தீவுவாசிகளை இந்த நாள் வரை பேசவைத்ததோ அதுவே ஈஸ்டர் தீவுவாசிகளுக்கு சவக்குழியும் தோண்டியது. ஒவ்வொரு முறையும் சிலைகளை நகர்த்த ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன, ஒரு கட்டத்தில் இந்தத் தீவின் வனப்பகுதி முற்றிலும் அழிந்தது. பெரும் மழைகள் வண்டல் மண்ணை அடித்துச் செல்ல விவசாயம் பொய்த்தது, மீன் பிடிக்க படகு செய்ய மரம் இல்லாததால் தீவுவாசிகள் பெரும் உணவுப்பிரச்சனைக்கு ஆளானார்கள். நாகரீகம் பின்னோக்கி சுழலத்துவங்கியது "நரமாமிசகாலம்" தொடங்கியது. ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு இறந்தார்கள். கூடவே மோவய்களையும் முடிந்தவரை சிதைத்தார்கள். மக்கள் தொகை பெருமளவு குறைந்தது.






எஞ்சியிருந்தவர்கள் மெதுவாக பழைய வாழ்க்கைக்கு திரும்பத்தொடங்கியிருந்த போது ஜேகப் ஈஸ்டர் தீவில் காலடி எடுத்துவைத்தார். கூடவே தீவுவாசிகளையும் பிடித்துக்கொண்டு போனார்கள், சிலை செய்ய இல்ல அடிமைகளாக. ஒரு சிலர் சில ஆண்டுகளுக்குப்பின் தப்பி வந்தார்கள், வந்தவர்கள் கொண்டுவந்தது சின்னம்மை. இது போன்ற வியாதிகளை அறிந்திராத தீவுவாசிகள் வாழ்க்கையின் இறுதி அத்யாயத்தை அது எழுதியது. ஒரு கற்காலத்திலேயே தேங்கிப்போன ஒரு நாகரீகம் தடயமில்லாமல் அழிந்தது.






ஒரு சிறிய தீவில் மரங்களை முற்றிலும் அழித்தன் மூலம் சுற்றுப்புற சூழலை மாற்றினார்கள். சிலை செய்வதற்காக தங்கள் வாழ்வாதாரங்களையே அழித்தார்கள். குறைந்த அளவுடைய மற்றும் பதிலியில்லாத வளங்களை எப்படி கையாள்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை. சகமனிதனின் வன்மம் தப்பிபிழைத்தவர்களையும் அழித்தது[2].


[தொகு] நிலவியல்






ஈஸ்டர் தீவு ஒரு எரிமலை உயர் தீவு ஆகும். இது முக்கியமாக மூன்று அழிந்த எரிமலைகளைக் கொண்டுள்ளது: டெரவாக்கா (507 மீட்டர்) தீவிம் முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. பொய்க்கே மற்றும் ரானோ காவு என்ற மற்றைய இரண்டும் இத்தீவுக்கு ஒரு முக்கோண வடிவைக் கொடுக்கின்றன.











 
 
 
 

ஆபிரஹாம் லிங்கன், ஜோன் கென்னடி இருவரினதும் வாழ்க்கைடயில் நடந்த ஒற்றுமை

லிங்கன் 1860 இலும் கென்னடி 1960 இலும் அமெரிக்க ஜனாதிபதியானார்கள். சரியாக 100 வருட வித்தியாசம்.

இருவரும் ஆபிரிக்க இனத்தவர்களின்(கறுப்பினத்தவர்) உரிமைகளில் தீவிரமாக ஆழ்ந்திருந்தனர்.


இருவரும் வெள்ளிக்கிழமை தத்தம் மனைவியரின் அருகிலிருக்கும் போது சுட்டுக்கொள்ளப்பட்டனர்.


இரு மனைவியரும் வெள்ளை மாளிகையில் வாழும் போது குழந்தை பெற்று, பிறந்ததும் குழந்தை இறந்தது.


லிங்கன், கென்னடி இருவரும் தலையின் பின் பகுதியில் குண்டு பட்டு இறந்தார்கள்.


லிங்கன் இறந்தது ஃபோர்ட் அரங்கில், கென்னடி இறந்தது லிங்கன் என பெயர்கொண்ட காரில். அக் கார் ஃபோர்ட் கொம்பனியால் செய்யப்பட்டது.


இருவரும் இறந்ததும் ஜன்ஸன் எனும் பெயர்கொண்டவர்கள் உடனே ஜனாதிபதியாக பதவியேற்றார்கள்.

அன்று ஜன்ஸன், லின்டன் ஜன்ஸன்.

அன்று ஜன்ஸன் பிறந்தது 1808, லின்டன் ஜன்ஸன் பிறந்தது 1908. அதே 100 வருட இடைவெளி.


லிங்கனின் செயலரின் முன்பெயர் ஜான்!, அதே வேளை கென்னடியின் செயலரின் பின் பெயர் லிங்கன்!!!


இருவரையும் கொண்டவர்கள் பிறந்த ஆண்டுகள், ஜோன் வில்க்ஸ் 1839. ஹர்வி 1939. அதே 100!!!


கொண்டவர்கள் இருவரும் தென்மாநில தீவிர வாதிகள்.


இருவரும் பிடிபட்டு வழக்கு தொடர முன் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.


லிங்கனை கொண்டவன் அர‌ங்கத்தில் கொண்டுவிட்டு ஒரு கிடங்குக்குள் ஓடினான். கென்னடியை கொண்டவன் கிடங்கிலிருந்து கொண்டுவிட்டு தியேட்டரை நோக்கி ஓடினான்.


லிங்கன், கென்னடி இருவரினதும் ஆங்கில எழுத்துக்கள் 7. தற்காலிகமாக பதவியேற்றவர்களினது ஆங்கில எழுத்துக்கள் 13!


கொன்றவர்களின் பெயர்களின் எழுத்துக்களும் 15!!!

சிவாஜி

நட்புக்கரம் நீட்டி வரவைழத்த ஒளரங்கசீப், நயவஞ்சகமாகத் தன்னையும் தன் மகைனயும் கைதுசெய்து சிறையில் அடைப்பான் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திராத மராட்டிய மாவீர‌ன் சிவாஜி, அடிபட்ட புலி போல ஆக்ரா சிறையில் உறுமிக்கொண்டு இருந்தார். மகன் சம்பாஜியிடம், ‘‘ஒவ்வொரு வியாழனும் ஏராளமான பழங்கள் வைத்து பூஜித்து, அதைத் தானம் செய்வது



வழக்கம் என்று சிறை அதிகாரிகளிடம் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்’’ என்றார்.






‘‘தந்தையே! நாம் பெரும் ஆபத்தில் இருக்கிறோம். இப்போது எதற்காக பூஜை?’’


என்று மகன் கேட்க, ‘‘மகனே! நீ அச்சத்தின் பிடியில் அகப்பட்டுவிட்டாய் என


நினைக்கிறேன். அச்சப்பட்டவர்கள் வெற்றி பெற்றதாகச் சரித்திரம் கிடையாது. நான் இங்கிருந்து தப்பிக்கத்தான் வழி சொல்கிறேன்’’ என்றார் சிவாஜி.


‘‘முகலாயர்களிடம் இருந்து தப்புவதா... அது முடியுமா?’’ என மீண்டும் மகன்


சந்தேக‌த்துடன் கேள்வி எழுப்ப, ‘‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’ என்றார் சிவாஜி உறுதியோடு!






அதன்பின், சிறைகுப் பழக்கூடைகள் வருவதும் போவதும் வழக்கமாயிற்று. அந்தக் கூடைக்குள் அமர்ந்துதான் சிவாஜியும் சம்பாஜியும் ஒருநாள் தப்பித்தார்கள்.






பூனேவுக்கு அருகே, 1630-ல் சிவானி கோட்டையில் பிறந்தார் சிவாஜி. தந்தை ஷாஜி, பூனே சுல்தானின் படைப்பிரிவில் மேஜராகப் பணியாற்றி வந்ததால், தாய் ஜீஜாபாய் மற்றும் தளபதி ஷாயாஜியின் மேற்பார்வையில் வளர்ந்தார் சிவாஜி. சிறு வயதிலேயே குதிரை ஏற்றம், வாட் போர், வில் வித்தை, குஸ்தி போன்ற வீர‌ தீர விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டினார். இந்துக்கைள அடக்கி ஆண்ட முகலாய ஆட்சியின் மீது அவருக்கு இயல்பாகேவ


வெறுப்பு இருந்தது. தாய் ஜஜீ போய் சொன்ன வீர‌ க் கதைகளும், சுவாமி ராமதாசரின் ஆசீர்வாதமும், இந்து சாம்ராஜ்யம் நிறுவ சிவாஜிக்கு ஆர்வமும் ஊக்கமும் தந்தன.


‘‘மாபெரும் படை கொண்ட முகலாயர்கைள என்னால் வெல்ல முடியுமா?’’ என்று சிவாஜி கேட்டேபாது, அவரது தாயும், சுவாமி ராமதாசரும் ஒரு சேரச் சொன்ன பதில்... ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’.






பூனாவுக்கு அருகே மலைகளில் வசித்து வந்த ‘மாவலி’ மக்களிடமிருந்து


இளைஞர்கைளத் திரட்டி, ‘கொரில்லா’ படை அமைத்தார் சிவாஜி. முகலாயர்களின் பிடியில் இருந்த ரோஹிதேசுவரர் ஆலயத்தையும், தேரான் கோட்டையையும் கைப்பற்றினார். சிவாஜியின் இந்த வெற்றி, இந்துக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தேவ, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரது படையில் இணைந்தார்கள். அதன்பின் குபா கோட்டை, இந்திரபுரி, ஜாவ்லி என கிட்டத்தட்ட முந்நூறு கோட்டைகள் சிவாஜி வசமாயின. ஒவ்வொரு முறையும் போருக்குப் புறப்படும் முன், தனது படையினரிடம், ‘‘தோல்வியில்லை, தோல்வியில்லை... துணிந்தவனுக்குத் தொல்வியில்லை’’ என்று உற்சாகக் குரல் கொடுப்பார் சிவாஜி.துணிந்து கிளம்பும் அந்தப் படை வெற்றி வாகை சூடி வரும்.






ஒருமுறை, சிவாஜியின் கோட்டை முன் பெரும் கடெலன முகலாயர் படை


நின்றது. போரைத் தவிர்க்க விரும்பினால், சிவாஜி நிராயுதபாணியாக தன்னிடம் பேச்சு வார்த்தை நடத்த வரேவண்டும் என அழைப்பு விடுத்தான் தளபதிஅப்சல்கான். தனிமையில் போக‌வண்டாம் என அனைவரும் தடுத்தபோதும்,






‘‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’ எனப் புன்னைகத்தவாறு பகைவனைத்


தேடிப் புறப்பட்டார் சிவாஜி. ஆயுதமின்றித் தனிமையில் வந்த சிவாஜியைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தஅப்சல்கான், ‘‘உன்னிடம் சமாதானம் பேசவா இத்தனை படையுடன்வந்திருக்கிறேன்’’ என்றபடி சரேலென‌ தன்னுடைய வாளை உருவி, சிவாஜியின் மார்பில் செலுத்தினான். உள்ளே கவசம் அணிந்திருந்த சிவாஜி, கண் இமைக்கும் நேரத்தில் அப்சல் மீது பாய்ந்து, தன் கைகளில் மறைத்து வைத்திருந்த விஷம் தேய்த்த புலி நகங்களால் அவைனக் கீறிக் கொன்று போட்டார். தலைவன் இல்லாத படைகளைப் பந்தாடியது மராட்டிய சேனை. மாபெரும் வீர‌னாக, ‘சத்ரபதி’ என முடிசூடினார் சிவாஜி.






1680-ம் ஆண்டு மரணமைடயும் வரையில், சிவாஜியைத் தோல்வி என்பது


நெருங்கவே இல்லை.

தோமஸ் அல்வா எடிஷன்

அமெரிக்காவில் இரும்புத் தாதுவுக்குத் தேவையும் விலையும் மிக அதிகமாக இருந்ததால், பாறைகளில் இருந்து இரும்புத் தாது பிரித்தெடுக்கும் கண்டுபிடிப்பில், 1897-ம் வருடம் இறங்கினார் எடிசன். அவரது கண்டுபிடிப்பைச் செயல்படுத்த பெரிய நிறுவனங்கள் முன்வந்தன. ஆனால், அவற்றை நிராகரித்து தனது முழு செல்வத்தையும் முதலீடுசெய்து சொந்தமாகத்தொழிற்சாலை தொடங்கினார் எடிசன்.



மலைகளை உடைக்க, உடைத்த பாறைகளைக் கற்களாக்க, கற்களை மணலாக்க, மணைலப் பிரிக்க என எல்லாவற்றுக்கும் பெரிய அளவில் இயந்திரங்களை நிறுவினார். ஒரு டன் இரும்புத் தாது ஆறரை டொலருக்கு


விற்பனையான நேரத்தில், நான்கு டொலர் அடக்க விலையில் எடிசன் உற்பத்தி செய்தார். விற்பனை தொடங்கிய நேரத்தில் அமெரிக்காவின் மிசாபா மலைப் பகுதிகளில் உயர் ரக இரும்புத் தாது பெருமளவு இருப்பது கண்டுபிடிக்கப்படவே, இரும்பு விலை மடமடவென ஒரு டன் மூன்று டொலராகக் குறைந்தது. நஷ்டமடைவது தவிர வேறு வழியில்லை எனத் தெரியவந்ததும், உடனே தொழிற்சாலைய மூடினார்.



எடிசனிடம் அவரது நண்பர்கள், ‘‘சிலருடன் கூட்டு சேர்ந்திருந்தால், ஒரேய‌டியாக நஷ்டமடைந்து இருக்க வேண்டியதில்லையே’’ என்றார்கள். ‘‘நஷ்டம் ஏற்படும் ஒரு வழியைத் தெரிந்து கொண்டது எனக்கு லாபமே! தோல்வி என்பது வீழ்ச்சியல்ல...படிப்பினையே!’’ என்றபடி மீண்டும் தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார் எடிசன். கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான கொங்கிரீட் கலவையைக் கண்டுபிடித்து, உடனே தயாரிப்பில் இறங்கி, மூன்றே வருடங்களில் இழந்த சொத்தைவிட அதிகமாகச் சேர்த்தார்.





அமெரிக்காவில் சாமுவேல் எடிசன் மற்றும் நான்ஸி எலியட் தம்பதியின்
நான்காவது மகனாக, 1847-ம் வருடம் பிறந்தார் தோமஸ் ஆல்வா எடிசன்.
தலை பெரிதாக இருந்ததால், ‘மண்டு, மூளைவளர்ச்சி குறைந்தவன்’ என
ஆசிரியரும் மாணவர்களும் கிண்டல் செய்யவே, பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டுத்தாயிடமே பாடம் பயிலத் தொடங்கினான் சிறுவன் தோம‌ஸ். ஊரில் விளையும் பொருட்களை புகை வண்டியில் நகரத்துக்குக் கொண்டு சென்று விற்பனை செய்தும், நகரத்தில் இருந்து பத்திரிகைகள் வாங்கி வந்து மற்ற ஸ்டேஷன்களில் விற்பனை செய்தும் சம்பாதித்தான்.



உள்நாட்டுப் போர் காரணமாக, பத்திரிகைகளுக்கு நல்ல வரேவற்பு இருப்பதை அறிந்து, ரெயில்வெ அதிகாரிகளின் உதவியுடன் புகை வண்டியிலேயே இயந்திரத்தை வைத்து, நகரத்துச் செய்திகளை அச்சடித்து ‘வீக்லி ஹெரால்ட்’   பத்திரிகையை விற்கத் தொடங்கினான். ஆசிரியர், அச்சடிப்பவர், விற்பைனயாளர் என எல்லா வேலையையும் செய்த எடிசனுக்கு அப்போது வயது 15. எடிசன் தன் முதல் கண்டுபிடிப்பாக 1868-ல் பதிவு செய்த ‘வாக்குப்பதிவு இயந்திரம்’ அரசினால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தந்தி மற்றும் பங்குச்சந்தை சாதனங்களைத் தொடர்ந்து மின்சார விளக்கைக் கண்டுபிடித்ததும், உலகமே இவரைத் தலையில் வைத்துக் கொண்டாடியது. பாடும் மற்றும் பேசும் ஃபோனோகிராஃப் இயந்திரம் இவரை பெரும் கோடீஸ்வரனாக்கியது. ஒலியைப் போலவே ஒளியையும் பதிவு செய்ய முடியும் என ‘சினிமாவைக் கண்டுபிடித்ததும், ‘கண்டு பிடிப்புகளின் தந்தை’ எனப் புகழாரம் கிடைத்தது!




1914-ம் வருடம் அவரது சோதனைச் சாலையில் மிகப் பெரிய தீ விபத்து
ஏற்பட்டது. ஆறுதல் சொல்ல வந்த நண்பர்களைப் பார்த்து, ‘‘தீ எவ்வளவு அழகாக எரிகிறது பாருங்கள்... ரசாயனப் பொருட்களைத் தவறான விகிதத்தில்கலந்துவிட்டேன் என்பைத, 67-வது வயதில் எனக்குக் கற்றுக்கொடுத்த இந்த தோல்வியும் எனக்குப் படிப்பினையே’’ என்றார் எடிசன் சிரித்தபடி.


தனது 81-வது வயதில் மரணமடையும் வரை 1,093 கண்டுபிடிப்புக்களை எடிசன் பதிவு செய்ய முடிந்ததற்குக் காரணம், தோல்விகளை வீழ்ச்சியாகக் கருதாத இவரது தன்மையே!

புரூஸ்லீ



‘‘இருவரும் சண்டை போடுவோம்; நான் ஜெயித்தால், உன் பள்ளியை இழுத்து மூடி விடேவண்டும். நீ ஜெயித்தால், நான் சொல்லிக் கொடுப்பைத நிறுத்திக் கொள்கிறேன். என்ன, சவாலுக்குத் தயாரா?’’ என்று கொக்கரித்தார் குங்ஃபூவில் புகழ் பெற்ற ஆசிரியரான வோங்க் ஜாக்மென். அமெரிக்காவின் ஆக்லாந்து நகரில் புதிதாகத் தற்காப்புக் கைலகைளக் கற்றுத் தரும் பள்ளியைத் திறந்திருந்த புரூஸ்ல, எவ்விதத் தயக்கமும் இன்றி, சவாலுக்குச் சம்மதித்தார். சண்டைக்கு வந்து, பத்தே நொடியில் தோல்வியைத் தழுவினார் வோங்க். ஒரே நாளில், அமெரிக்கா மற்றும் சீனாவில் லீ யின் புகழ் கிடுகிடுவெனப் பரவியது. ‘‘என்ன தைரியத்தில் அவருடன் மோத ஒப்புக் கொண்டீர்கள்?’’ - நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘நான் தத்துவத்தைப் பாடமாகப் படித்திருக்கிறேன். வாய்ப்புகள் தாமே வராது, நாம்தான் உருவாக்க வேண்டும் என்பதை அறிவேன். அதனாலேயே வெற்றி, தோல்வி பற்றிக் கவைலயின்றி, நானும் என் கலையும் புகழ் பெற இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொண்டேன்’’ என்றார் புரூஸ்ல. 25 வயதுவைர ஒரு சாதாரண தொலைக்காட்சி நடிகராக இருந்து வந்த புரூஸ்ல, உலகப் புகழ் ெபற்றது அதன் பிறேக! சான்பிரான்சிஸ்கோவில் ஒரு சனத் தம்பதியின் மகனாக, 1940-ல் பிறந்தார் புரூஸ்ல. குடும்பம் சனா திரும்பியதும், குழந்தை நட்சத்திரமாகப் பல நாடகங்களில் நடித்தார்.




பின்னர், குங்ஃபூ பள்ளியில் சேர்ந்து தற்காப்புக் கைலையயும், ‘ச்சாச்சா’ எனப்படும் டான்ஸையும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். 18-வது வயதிலேயே பாக்ஸிங் சாம்பியன்ஷிப் ெவற்றி. இைதயடுத்து, புரூஸ்ல அடிக்கடி தெருச் சண்டைகளில் இறங்கி, போலிஸ் பிரச்னை ஏற்படேவ, பெற்றோர் அவைர சான்பிரான்சிஸ்கோ அனுப்பினர். அங்கே ஓர் உணவகத்தில் பகுதி நேர வேலை பார்த்தபடியே, உயர்நிலைப் படிப்பை முடித்த புரூஸ்ல, வாஷிங்டன் யூனிவர்சிட்டியில் தத்துவம் படித்தார். கூடேவ, சனத் தற்காப்புக் கைலைய மற்றவர்களுக்கும் கற்றுத் தரத் தொடங்கினார். ஓரிரு நொடியிலேயே வெற்றிபெறும் ல-யின் ‘ஜட் க்யூன்டோ’ என்ற புதிய சண்டை முறைக்கு சனாவில் பெரும் வரேவற்பு கிடைத்தது. இடையில், ‘சினிமாவில் நடிக்கத் தயாராக இருக்கிறேன்’ என அறிவித்தார் புரூஸ்ல. கலையை மறந்து, சினிமாவில் நடிக்க அலைகிறார் என விமர்சனங்கள் எழுந்தன. ‘‘வாய்ப்புகள் தாமே வராது, நாம்தான் உருவாக்க வேண்டும். சினிமா மூலேம இந்தக் கலை இன்னும் பெரும் புகழைடயும்’’ என்று உறுதியுடன் சொன்னார் லீ.





1971-ல் ‘தி பிக் பாஸ்’ வெளியாகி, உலெகங்கும் சக்கைப்போடு போட்டது. அதன்பின்னர் வெளியான Õஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி’, ‘ரிடர்ன் ஆஃப் த ட்ராகன்’, ‘என்டர் தி ட்ராகன்’ எனப் பல படங்கள் வசூலில் சாதைன பைடத்தன. அவரது கனவுப் படமான ‘கேம் ஆஃப் டெத்’ படப்பிடிப்பின்போது, மர்மமான முறையில் இறந்துபோனார் புரூஸ்ல. ‘‘அவர் எடுத்துக்கொண்ட வலி மருந்துகள் அலர்ஜியாகி, அவரது உயிரைப் பறித்துவிட்டன’’ என்று டாக்டர்கள் சொன்னாலும், 33-வது வயதில் அவருக்கு ஏற்பட்ட மரணத்தின் மர்மம் இன்றுவைர விடுபடேவ இல்லை. வாய்ப்புகள் வரும் என்று காத்திருப்பவர்கள் என்றுமே வெற்றியைத் தொடேவ முடியாது; வாய்ப்புகைள உருவாக்குபவர்கேள சாதைனயாளர்கள் என்பது புரூஸ்லயின் வாழ்க்கை சொல்லும் மந்திரம்!

செங்கிஸ்கான்

வருடம் 1211. மொங்கோலியப் பேரரசன் செங்கிஸ்கான், சீனாவின்
யான்ஜிங்க் (இன்றைய பீஜிங்) நகைரப் பிடிப்பதற்காக, தன் படையுடன் கிளம்பினார். ‘‘உடேன சரணைடயுங்கள். இல்லாவிட்டால் நிர்மூலம் செய்துவிடுவோம்’’ என்று, அரச தூதுவராக வந்த ஷாங்சூனை மிரட்டி அனுப்பினார். வழியெங்கும் சீனப் படைவீர‌ர்களின் பிணங்கள் சின்னாபின்னாமாகச் சிதைக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தைதக் கண்டு மிரண்டுபோய், அரசரிடம் தகவலைச் சொன்னார் ஷாங்சூன். சீன அரசர் கோபாவேசத்துடன் போருக்குக் கிளம்பினாலும், அவரது படைவீர‌ர்களிடம் செங்கிஸ்கானின் செயல்கள் பீதியை உருவாக்கியிருந்தன.

நாட்டுக்குள் நுழைந்த செங்கிஸ்கான் படையுடன் சீனப் படைகள் மோதினாலும், பயத்தின் பிடியில் இருந்த அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. கூட்டம் கூட்டமாகப் படைவீர‌ர்கள் சரண்டையவே,


யான்ஜிங்க் நகர் வீழ்ந்தது. அரசர் விரட்டியடிக்கப்பட்டார். ‘இத்தனை எளிதான வெற்றியை எதிர்பார்த்தீர்களா?’ என்று செங்கிஸ்கானிடம் படைத்தளபதி கேட்க, ‘‘தோல்வி அடைந்துவிடுவோமோ என்று அச்சப்படுபவன், வெற்றி பெற மாட்டான்’’ என்பது எனக்குத் தெரியும். இதுதான் என்னுடைய போர்த்தந்திரம். என் மீது இருக்கும் அச்சத்தை வைத்து, இந்த உலகம் முழுவைதயும்வெற்றி கொள்வேன்’’ என்றான்.



வருடம் 1162.


மங்கோலியர்கள் பல்வேறு குழுவாகச் சிதறிக் கிடந்த காலகட்டத்தில், ஒரு
மலைசாதிக் குழுவின் தலைவரான ‘யெஸ்சூஹைய்’யின் மூத்த மகனாகப்
பிறந்தான் டேமுஜின். 13 வயதான சமயத்தில், டேமுஜினின் தந்தை
எதிர்க்குழுவினரால் விஷம் கொடுத்துக் கொல்லப்படவே, அப்போத டேமுஜினைத் தலைவனாக்க முயற்சிகள் நடந்தன. ஆனால், சிறுவன் என்பதால் தல்மைப் பொறுப்பு கிடைக்கவில்லை. பள்ளிக்குப் போகாமல் தாயிடம் அரசியலும், போர்க்கலையும் பயின்றான். ‘‘தோல்வி அடைந்துவிடுவோமா என்று அச்சப்படுபவன்,வெற்றி பெறமாட்டான். அதனால், எதிரிகளுக்கு முதலில் உன் மீது அச்சத்தை உருவாக்கு!’’ என்று புதிய போர் மந்திரத்தை போதிததே அவன் தாய்தான்.






17-வது வயதில் கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட டேமுஜின், அவர்கள் அத்தனை பேரையும் கொன்று தப்பி வரேவ, அவனது சாகசத்தைப் பாராட்டி,தலைவனாக ஏற்றுக்கொண்டார்கள். அதன்பின், சிதறிக் கிடந்த மங்கோலியர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து, தனது படைவீர‌ர்களுக்குக் கடுமையான பயிற்சியளித்து, அண்டை நாடுகளை எல்லாம் கைப்பற்றத் தொடங்கினான் டேமுஜின்.



1183-ம் ஆண்டில் எல்லா மங்கோலியர்களும் இணைந்த பின்னரும், சிறு வயது நண்பனான ஜம்முஹா என்பவன் மட்டும் தனி ராஜாங்கம் நடத்துவதைக் கண்டு, அவன் மீது போர் தொடுத்து வென்றான். சிறைப்பட்ட நண்பன் ஜம்முஹா, ரத்தம் வராத வகையில் தனக்கு மரணம் வேண்டும் எனக் கேட்டுக்கொள்ள, கம்பளிப் போர்வையை அழுத்தமாக அவன் உடலில் சுற்றி, மூச்சுவிட முடியாமல் செய்து, மரணத்தில் ஆழ்த்தினான். ஜம்முஹாவுக்குத் துணையிருந்த அத்தனை படைவீர‌ர்கைளயும் கொன்று குவித்தான். அப்போதுதான் ‘அரசர்க்கெல்லாம் அரசன்’, ‘தோற்கடிக்க முடியாத மாவீர‌ன்’ என்கிற பொருள் பொதிந்த ‘செங்கிஸ்கான்’ என்கிற பட்டம் வழங்கப்பட்டது.





30,000 படைவீர‌ர்களை மட்டுமே வைத்திருந்த செங்கிஸ்கானால் 4,00,000

படைவீர‌ர்கள் கொண்ட சீனாவைத் தோற்கடிக்க முடிந்ததற்குக் காரணம்,

எதிரிகளுக்குக் கடும் அச்சத்தை உருவாக்கியதுதான்.இதையடுத்து ரஷ்யா, ஹங்கேரி, போலன்ட் நாடுகைளயும் வெற்றிகொண்ட  நேரத்தில், குதிரையிலிருந்து தவறி விழுந்து, 1227-ம் ஆண்டு இறந்துபோனார்

செங்கிஸ்கான்.

சார்லி சாப்ளின்

உலைகயே சிரிக்கவைத்தவர் சார்லி சாப்ளின்! ஆனால், அவரது வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததே(?) இல்லை. பிறந்ததில் இருந்தே துன்பங்கள், அவமானங்கள், தோல்விகள்..!  1889... லண்டன் நகரில் சாப்ளின் பிறந்து, ஓரிரு வருடங்களிலேயே பெற்றோரிடையே சண்டை வந்து டிவோர்ஸ் ஆகிவிடவே, பேசத்தொடங்கும் முன்பே, தாயுடன் சேர்ந்து மேடையில் பாடவேண்டிய நிர்ப்பந்தம். ஐந்து வயதுச் சிறுவனின் பாட்டுக்குக்கிடைத்த அமோக வரவேற்பு, ஏழு வயதிலேயே பறிபோனது. காரணம், அவரது தாயாரின் மனநிலை பாதிக்கப்பட்டதுதான்.


குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, சலூன், கண்ணாடித் தொழிற்சாலை,


மருத்துவமனை என எங்கெங்கோ வேலைபார்த்தவர், சில காலம் தந்தையுடன் சேர்ந்து மேடை நாடகங்களிலும் நடித்தார். ஆனால், தந்தை திடீரென இறந்துவிடவே, மீண்டும் தொய்வு!  1910... நாடகக் குழுவினருடன் அமெரிக்கா போனவருக்கு குறும்படங்களில் நல்ல பெயர் கிடைத்தது. அவரது முத்திரை க‌ரக்டரான ‘டிராம்ப்’ (பேகி பேண்ட், தொப்பி, கைத்தடி, வளைந்த கால்கள்) பாப்புலரானது. ‘தி கிட்’, படத்தில் தொடங்கிய வரேவற்பு, ‘தி கிரேட் டிக்டேட்டர்’ வரை நீடித்தது. ஆனால், இந்த காலகட்டங்களில் குடும்ப வாழ்வு அவரை பாடாய்ப் படுத்தியது.


1918-ல் நடந்த முதல் திருமணம், இரண்டு வருடம் மட்டுமே நீடித்தது. அதற்குப்பின் நடந்த இரண்டு திருமணங்களும்கூட சாப்ளினுக்குச் சோகத்தை மட்டுமே கொடுத்தன. 1942-ல் நான்காவது மனைவியாக ஓனெய்ல் அமைந்தபின் இல்லறத் தொல்லைகள் நின்றன


.


1945-ம் ஆண்டு. சாப்ளின் ஒரு கம்யூனிஸ்ட் தீவிரவாதி என அமெரிக்க அரசு குற்றம் சாட்டியது. இரண்டாவது மனைவி ஜோன்பெர்ரியும் சாப்ளின் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருந்தார். அவர் தரப்பு நியாயங்களை அமெரிக்க அரசு கேட்காததால், வேறுவழியின்றி, 1952-ல் கனத்த இதயத்துடன் சுவிட்சர்லாந்தில் அடைக்கலமானார் சாப்ளின்.


1972... காலச் சக்கரம் சுழல, அதே அமெரிக்க அரசு, ‘உலகின் தலைசிறந்த


நைகச்சுவை நடிகர்’ விருது பெற சாப்ளினை அைழத்தது. பரிசினை


ஏற்றுக்கொண்டாலும், அமெரிக்காவில் தங்க விருப்பமின்றி, மீண்டும்


சுவிட்சர்லாந்து கிளம்பினார் சாப்ளின். விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து நின்று, ‘‘வாழ்நாள் முழுவதும் போர்க்களமாக இருந்தாலும் எப்படி ஜெயித்தீர்கள்? அது என்ன ரகசியம்?’’ எனக் கேட்டார்கள். சாப்ளின் சிரித்தார்... ‘‘இந்த நிலை மாறிவிடும் என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை. அது இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி... மாறிவிடும்! இதோ இந்தக் கணத்திலும்கூட!’’


வறுமையில் பிறந்து, வாழ்வெல்லாம் போராடி, உலகையே தன் பெயரை உச்சரிக்க வைத்த மாபெரும் கலைஞனின் அந்த மந்திரச் சொல், நம் வெற்றிக்கும் நல்ல சாவி!

Friday, 13 August 2010

எஸ்கிமோ

எஸ்கிமோ
எஸ்கிமோக்கள் எனப்படுவோர் வடதுருவப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள். எஸ்கிமோ என்றால் அவர்கள் மொழியில் இறைச்சியை பச்சையாகச் சாப்பிடுபவர்கள் என்று பொருள். இவர்களில் இனூயிட் (Inuit) எனப்படுவோர் வடக்கு அலாஸ்கா, வட கனடா, கிறீன்லாந்து வரை காணப்படுகின்றனர். யூப்பிக் (Yupic) எனப்படுவோர் மேற்கு அலாஸ்காவிலும் சைபீரியாவின் வடகிழக்கு முனையிலும் வாழ்கின்றனர். இவர்களை விட அலாஸ்காவின் அலூசியன் தீவுகளிலும், ரஷ்யாவின் கம்சாத்கா கிராயிலும் வாழும் உனாங்கா எனப்படும் அலூட் மக்கள் மூன்றாவது வகையான எஸ்கிமோக்கள்.


எஸ்கிமோக்கள் குள்ளமாகவும், குட்டையான கால்களையும் உடையவர்கள். குளிர்காலத்தில் இவர்கள் இக்லூ என்றழைக்கப்படும் பனிக்கட்டிகளினால் ஆன வீடுகளில் வசிக்கின்றனர். கோடைகாலத்தில் மிருகங்களின் தோலால் ஆன கூடாரங்களில் வாழ்கின்றனர்.


எஸ்கிமோ என்ற ஆங்கிலச்சொல் ஆர்க்டிக் பகுதிச் செவ்விந்தியர்களின் மொழியில் இருந்து வந்தது. இச்சொல்லுக்கு பச்சை இறைச்சியை தின்பவர்கள் என்பது பொருள். எஸ்கிமோக்களிடம் ஒரு விசித்திர பழக்கம் இருந்து வருகிறது. அதிகப்படியாகக் குழந்தை பிறந்தால் அதை அவர்கள் கொன்று விடுவார்களாம். அதிலும் பெண் குழந்தை பிறந்தால் உடனடியாக கொலை தான். பிறந்த குழந்தையை பனிக்கட்டியில் வைத்து விடுவார்களாம். குழந்தை பனியில் விறைத்து இறந்து விடுமாம். அதிகப்படியான குழந்தைகளை தங்கள் கடவுள் விரும்புவதில்லை என்பது இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்.


ஆங்கிலம் மொழி வரலாறு (History of the English language in Tamil)

ஆங்கில மொழி இங்கிலாந்தில் தோன்றிய ஒரு மொழியாகும். இது யேர்மனிய மொழி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். யேர்மனிய மொழிக் குடும்பம் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சேர்ந்ததாகும். ஆனாலும் ஆங்கிலம் பல மொழிகளினதும் கலப்பு மொழியாகும். இன்று உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளான சீனம், ஸ்பானிஷ் மொழிகளுக்கு அடுத்தப்படியாக அதிகம் பேசப்படும் மொழி ஆங்கிலமாகும். 2007 ஆம் ஆண்டின் கணிப்பின் படி ஆங்கில மொழியை தாய்மொழியாகக் கொண்டோரின் எண்ணிக்கை 400 மில்லியன் மக்களாகும். உலகளவில் ஆங்கிலம் பேசுவோர் எண்ணிக்கை 1.8 பில்லியன் மக்களாகும். இவ்வெண்ணிக்கை உலக மக்கள் தொகையில் மூன்றின் ஒன்றாகும். இன்று ஆங்கிலம் 53 நாடுகளில் ஆட்சி
மொழியாகவும் இருக்கின்றது.
 
உரோமர் ஆட்சிக் காலம் (இலத்தீன் - செல்டிக்)
கி.மு 43 இல் உரோமானியர் (தற்போதைய இத்தாலி) படையெடுத்து வந்து

பிரித்தானியாவை கைப்பற்றினர். பிரித்தானியா உரோமப் பேரரசின் ஓர் ஆட்சிப் பகுதியானது. உரோமர்கள் பிரித்தானியாவைக் கைப்பற்றும் போது பிரித்தானியாவின் பூர்வீகக் குடிகள் “செல்டிக்” எனும் மொழியைப் பேசினர். உரோமானியர்கள் பேசிய மொழி இலத்தீன் மொழியாகும் உரோமானியர்களின் இவ்வருகை பிரித்தானியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டது .எனலாம். அவர்களாலேயே பொதுக் கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள், வீதி புனரமைப்பு திட்டங்கள் போன்றன உருவாக்கப்பட்டன. அவற்றின் எச்சங்கள் இன்றும் இதற்கு சான்று பகிர்கின்றன. உரோமானியர்கள் ஆட்சிக் காலத்தில் அரச நிர்வாகம், நீதி,சட்டம், மருத்துவக் கல்வி போன்றன இலத்தீன் மொழி வழியாகவே இருந்தது. கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டுகளுக்கு மேல் பிரித்தானியாவை தம் வசம் வைத்திருந்த உரோமானியர்கள் கி.பி 436 இல் தாயகம் திரும்பினர்.
 
பழைய ஆங்கிலம் (Old English [450 - 1100 AD])
 
449 இல் உரோமானியர்களின் வெளியேற்றத்தின் பின் பிரித்தானியாவின் அரச ஆட்சி மற்றும் படைவலு நிலை பலவீனமாகியது. இந்நிலையறிந்த மூன்று யேர்மனிய மொழிக் குடும்பத்தினர் (ஏங்லோ, செக்சோன், யூட்) பாய்மரக் கப்பல்களில் வட கடலூடாக வந்து பிரித்தானியாவைத் தாக்கி கைப்பற்றினர். இம்மூன்று யேர்மனிய மொழிக் குடும்பத்தினர்களான “செக்சோன்” (இன்றைய) யேர்மனியிலிருந்தும், “ஏங்லோ” (இன்றைய) தென் டென்மார்க்கிலிருந்தும், “யூட்” இனத்தவர்கள் யூட்லாந்திலிருந்தும் வந்தனர். பொதுவாக இவர்களை ஏங்லோ-செக்சோன் என்றே அழைக்கப்படுகின்றனர். இவர்களே ஆங்கிலம் எனும் மொழியை தோற்றுவித்தவர்கள் ஆவர். இவர்களது நில ஆக்கிரமிப்பின் போது பிரித்தானியாவின் பூர்வீகக் குடிகளான “செல்டிக்” மொழி பேசும் செல்டிக் இன மக்கள் பிரித்தானியாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு நகர்ந்தப்பட்டனர். (அதாவது இன்றைய வேல்சு மற்றும் ஸ்கொத்லாந்து பகுதிகள்) ஏங்லோ-செக்சோன் கட்டுப்பாட்டுக்குள் வீழ்ந்த பிரித்தானியாவை ஏழு அரசப் பிரிவுகளாக பிரித்து ஆட்சி செய்தனர். ஏங்லோ இனத்தவர்கள் “ஏங்லோ-லாந்து” எனும் பகுதியில் இருந்தே வந்தனர். இவர்கள் பேசிய மொழி "இங்கிலிக்" எனும் யேர்மனிய மொழியாகும். இப்பெயர்களே இன்று மருவி இங்கிலாந்து - இங்கிலிஸ் என்றானது.
மொழிக் குடும்பத்தினரும் பேசியது கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மொழிகள் என்பது மொழிவல்லுநர்களின் கருத்து. இம்மொழிகளில் இருந்து வளர்ச்சிப் பெற்ற மொழியே இன்று "ஆங்கிலம்" என்றழைக்கப்படுகின்றது. இருப்பினும் அக்காலத்தில் பேசப்பட்ட ஆங்கிலத்தின் உச்சரிப்பு மற்றும் பேச்சு வழக்கு இன்றைய ங்கிலத்தையும் விட அதிகளவில் வேறுப்பட்டது. அந்த ஆங்கிலத்தை இன்றைய தாய்மொழி ஆங்கிலேயர்களுக்கே புரிந்துக்கொள்ள முடியாதுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் அதனை "பழைய ஆங்கிலம்" என்கின்றனர்.
எப்படியோ இப்பழைய ஆங்கிலத்தின் மூலச் சொற்களில் இருந்தே இன்றைய நவீன ஆங்கிலத்தின் பாதி சொற்கள் அமையப்பட்டுள்ளதாக் கூறப்படுகின்றது. பழைய ஆங்கிலம் கி.பி.1100 வரை பேசப்பட்டது.
 
மத்திய ஆங்கிலம் (Middle English [1100 - 1500])
 
1066 நோமண்டியின் (தற்போதைய பிரான்ஸ்) கோமகனான வெற்றி வீரர் வில்லியம் படையெடுத்து வந்து இங்கிலாந்தை வெற்றிக்கொண்டார். இவர்கள் ஒரு விதமான பிரஞ்சு மொழி பேசினர். இதை "நோர்மன்" மொழி என்றும் அழைக்கப்படுகின்றது. வெற்றி வீரர் வில்லியத்தின் ஆட்சியில் பிரஞ்சு மொழியே அரச நிர்வாக மொழியாகப் பிரித்தானியாவில் திகழ்ந்தது. நீதி நிர்வாகத் துறையிலும், சட்டத் திட்டங்களிலும், வர்த்தக முறைகளிலும் பிரஞ்சு மொழியே ஆதிக்க மொழியாய் இருந்தது.
 
இக்காலக் கட்டத்தில் மொழித் தொடர்பில் ஒரு வர்க்கப் பிரிவு உருவானது. அரச அதிகாரங்களில் பிரஞ்சு மொழியினரே அதிகம் இருந்ததனர். அதனால் உயர் பதவி வகித்தோர், கற்றோர் என மேல் தட்டு மக்கள் பிரஞ்சு மொழியையும், கீழ் தட்டு மக்கள் ஆங்கிலத்தையும் பேசினர். ஆனால் கி.பி. 14 ஆம் நூற்றாண்டளவில் ஆங்கில தாய் மொழி பற்றாளர்கள் மேற்கொண்ட கடும் முயற்சியால் ஆங்கிலம் அதிகார மொழியாக உருவெடுத்தது. ஆனால் நிறைய பிரஞ்சு மொழி சொற்களை ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டது. இந்த ஆங்கிலத்தையே "மத்திய ஆங்கிலம்" என்று அழைக்கப்படுகின்றது.
கி.பி 1348 இல் இலத்தீன் மொழிவழி இருந்த பாடசாலை கல்வி முறைமை ஆங்கில வழி



கல்வியாக மாறியது. அதிக பாடசாலைகளில் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கப்படத் தொடங்கியது.
 
கி.பி 1362 வரை பிரஞ்சு மொழியிலேயே இருந்த நீதி, சட்டம் போன்றன ஆங்கில மொழிக்கு மாற்றப்பட்டது. இவ்வாண்டே முதன் முதல் ஆங்கிலம் பாராளுமன்றத்தில் அறியனையேறிய ஆண்டாகும்
 
கி.பி. 1388 இல் புகழ் பெற்ற கியோபிறே சாவுசர் [Geoffrey Chaucer] எனும்



எழுத்தாளர் ஆங்கிலத்தில் “The Canterbury Tales” எனும் முதல் கதை தொகுப்பை


எழுதினார். அதனைத் தொடர்ந்து கியோபிறே சாவுசரின் பல ஆக்கங்கள் ஆங்கிலத்தில்


வெளிவரத் தொடங்கின.
கியோபிறே சாவிசரின் இவ்வாக்கங்கள் இன்றைய ஆங்கிலேயர்களாலும் வாசித்தறிய



முடியாத அளவிற்கு கடினமானது எனக் கூறப்படுகின்றது. இன்றைய எழுத்து


நடைக்கும் அன்றைய எழுத்து நடைக்கும் பாரிய வேறுப்பாடு இருப்பதாகக்


கூறுகின்றனர்.
 
நவீன ஆங்கிலம் Modern English
 
நவீன ஆங்கிலத்தை 1500 – 1800 வரை பேசப்பட்டதை "முன்னைய நவீன ஆங்கிலம்"



என்றும், 1800 இலிருந்து தற்போது வரைப் பேசப்படுவதை "பின்னைய நவீன


ஆங்கிலம்" என்றும் வரையறுத்துள்ளனர்.
 
முன்னைய நவீன ஆங்கிலம் (Early Modern English [1500-1800])

மத்திய ஆங்கிலம் பேசப்பட்ட காலத்தின் இறுதியில் ஆங்கில மொழி



உச்சரிப்புகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. எழுத்திலக்கணத்திலும்


ஒலிப்புகளிலும் திடீர் மாற்றம் ஏற்பட்டது.
பதினாறாம் நூற்றாண்டுகளில் ஆங்கில மொழியை பலத் துறைகளிலும் பயன்படுத்த



வேண்டும் எனும் எண்ணம் ஆங்கில மொழி பற்றாளர்களிடையே தலைத்தூக்கியது. அச்சு


இயந்திரத்தின் தோற்றம் இதற்கு பெரும் உறுதுணைப் புரிந்தது. மற்றும் மத


சீர்த்திருத்தம், புதியப் புதியக் கண்டுப்பிடிப்புகள், பண்டைய


இலக்கியங்களில் ஏற்பட்ட புது மோகம், மறுமலர்ச்சி இயக்கம் போன்றனவும் இதற்கு


துணைப் புரிந்தது.
இலத்தீன், பிரஞ்சு போன்ற மொழிகள் அறிவியல் மொழிகள் என்றும், ஆங்கிலம்



பண்படாத மொழியெனும் தாழ்வானக் கருத்து பலரிடையே நிலவியதால், ஆங்கில மொழியை


சகல விதத்திலும் முதன்மைப் படுத்த வேண்டும் எனும் எண்ணக்கரு ஆங்கில


அறிவியலாளர்களிடையே மேலோங்கியது. நடைமுறைக்கு அத்தியாவசியமான அறிவை பாமர


மக்களும் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு மொழியின் வளர்ச்சிக்கு


அம்மொழியினரின் வாசிப்புத் திறன் மிக அவசியம் என்பதை உணர்ந்தனர். எனவே


பாமரர்களும் பயன்பெறும் வகையில் பொத்தகங்கள் மலிவு விலையில்


வெளியிடப்பட்டன. விஞ்ஞான நூல்கள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டது.


அதுவரைக் காலமும் இலத்தீன் மொழியிலேயே இருந்து வந்த மருத்துவக் கல்வி
நூல்களும் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டது. மருத்துவக் கல்வியும்


ஆங்கிலமானது. கத்தோலிக்க விவலிய நூல் இக்காலப்பகுதியிலேயே முதன் முறையாக ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டது.
 
1564 இல் உலகப் புகழ்ப்பெற்ற நாடக ஆசிரியரும் எழுத்தாளருமான வில்லியம் சேக்ஸ்பியர் பிறந்தார்.William Shakespeare [1564 - 1616] இவர் தனது தன்னிகரில்லா சிந்தனையாலும் சேவையாலும் ஆங்கில மொழி உலகில் தடம் பதித்தார். பல்லாயிரக் கணக்கான புதிய சொற்களை
இலக்கண வளமிக்க மொழி எனும் தகுதி ஆங்கில மொழிக்கு ஏற்பட வேண்டுமாயின்
ஆங்கில இலக்கண நூல்கள், அகராதிகளும் ஆங்கில மொழியில் பெருக வேண்டும் எனப் பலரும் சுட்டினர்
1604 இல் அகர வரிசையில் அமைந்த உலகில் முதல் ஆங்கில அகரமுதலி பிரசுரமானது


1702 இல் முதல் ஆங்கில நாளிதழ் "The Daily Courant" இலண்டனில் வெளியானது

1755 இல் சாமுவேல் யோன்சனின் ஆங்கில அகராதி பிரசுரமானது.



1776 இல் பிரித்தானியாவின் குடியேற்ற நாடாக இருந்த அமெரிக்காசுதந்திரப் பிரகடனம் செய்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்க அரசாட்சியில் ஏற்பட்ட மாற்றத்தால் அமெரிக்க ஆங்கிலப் பேச்சு வழக்கிலும் ஒலிப்புகளிலும் மாற்றங்கள் நிகழத்தொடங்கின

தற்போதைய நவீன ஆங்கிலம் (Late Modern English [1800- Present])

நவீன ஆங்கிலத்திற்கும் தற்போதைய நவீன ஆங்கிலத்திற்கும் இடையிலான வேறுப்பாடு சொற்களஞ்சியத்தின் எண்ணிக்கையாகும். தற்போதைய நவீன ஆங்கிலத்தில்சொல்வளம் பெருகியுள்ளது. உலகின் பல்வேறு மொழிகளின் சொற்களை ஆங்கிலம் தன்னகத்தே உள்வாங்கிக்கொண்டு தன் சொல் வளத்தைப் பெருக்கிக்கொண்டது .
இதன் வளர்ச்சிக்கான பிரதானக் காரணிகளாக இரண்டைக் கூறலாம். முதலாவது கைத் தொழில் புரட்சி, இயந்திர சாதனக் கண்டுப்பிடிப்புகள், மருத்துவத் துறை வளர்ச்சி, தொழில் நுட்பம், தொலைத்தொடர்பு, விஞ்ஞான வளர்ச்சி போன்றன பல புதிய புதியச் சொற்களை ஆங்கிலத்திற்கு வழங்கியது.
இரண்டாவது காரணி உலகின் பலப்பாகங்கள் பிரித்தானியரின் ஆளுகைக்குள்  உற்பட்டிருந்ததால் பல்தேசங்களுடன் வைத்திருந்த பல்வேறு தொடர்புகளால் எண்ணற்ற பிறமொழி சொற்களையும் ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டது. ஒரு கணக்கெடுக்கின் படி 146 மொழிகளில்  இருந்து சொற்களை ஆங்கிலம் கடன் வாங்கியுள்ளது.

தமிழிலிருந்து ஆங்கிலம் பெற்றுக்கொண்டச் சொற்களில் சில


எனகொண்டா   - Anaconda
காசு                       - Cash
கட்டுமரம்           - Catamaran
கறி                         - Curry
மாங்காய்            - Mango
பறை                    - Pariah
பப்படம்               - Popppadam
அரிசி                    - Rice

இன்னும் நிறைய சொற்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்குச் சென்றதாகக் கூறப்படுகின்றது. அநேகமான மூலிகைகளின் பெயர்கள் தமிழில் இருந்தே ஆங்கிலத்திற்குச் சென்றதாகக் கூறப்படுகின்றது.
இவ்வாறு ஆங்கிலத்தைப் பொறுத்தமட்டில் பிறமொழிச்சொற்களை கடன் வாங்கும் திறந்த மனப்போக்கு, அதன் துரித வளர்ச்சிக்கு உதவியுள்ளன என்பது தெளிவாகிறது.
மேலும் ஆங்கில தொழில் நுட்பச் சொற்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றது. இதன் உணர்தலால் உலகில் ஆங்கிலம் கற்போர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இன்று ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழியாக வியாபித்து நிற்கின்றது. அமெரிக்க விஞ்ஞான வளர்ச்சி மற்றும் இணைய தொழில் நுட்பம் போன்றவைகளும் இதன் வளர்ச்சியின் இன்னுமொரு அங்கமாகியுள்ளது. ஒவ்வொரு நாளும்புது புதுச் சொற்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு முன்பு வில்லியம் சேக்ஸ்பியரின் காலத்தில் 5 முதல் 7 மில்லியன் மக்கள் தொகையினரால் மட்டுமே பேசப்பட்ட ஆங்கில மொழி; இன்று உலகளவில் அறிவியல், அரசியல், வணிகம், தொழில்நுட்பம், திரைப்படம், ஊடகம் என சகல துறைகளிலும் பிரகாசிக்கும் ஒரு மொழியாக வளர்ந்து நிற்கின்றது.

பழைய செய்திகள் புதிய உண்மைகள்

நம்பிக்கை: கண்ணீர் கண்களி லிருந்து மட்டும்தான் வழிகிறது.




உண்மை: நீங்கள் அழும்போது, உங்கள் மூக்கில் ஒழுகிக் கொண்டே இருக்கும். உங்கள் கண்ணிரில் சில துளிகள் கண்ணிலேயே தேங்கி யிருந்து, பின்னர் ஒரு மூக்குடன் இணைக்கப்பட்டுள்ள சிறு குழாய் மூலம் மூக்கிற்குள் செல்வதுதான் இதன் காரணம். உங்கள் மூக்கைத் துடைத்துக் கொண்டால், உங்கள் கண்ணீரும் வறண்டுபோகும்.






நம்பிக்கை: எதையாவது வெறித்துப் பார்க்கும்போது உங்கள் கண்கள் அசைவின்றி இருக்கின்றன






உண்மை: நீங்கள் உற்றுப் பார்த் தாலும் சரி, வெறித்துப் பார்த்தாலும் சரி உங்கள் கண்கள் நகர்ந்து கொண்டுதான் இருக்கும். உங்கள் கண்களில் இருக்கும் தசைகள் நாளொன்றுக்கு 1,00,000 முறை நகர்கின்றன. அவை எப்போதும் அசையாமல் நின்று போவதில்லை. நீங்கள் உறங்கும்போதும் அவை அசைகின்றன. கண்களின் அசைவி லிருந்து கனவு பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்கின்றனர்.






நம்பிக்கை: அனைத்து சுவை மொட்டுகளும் நாக்கில் மட்டுமே உள்ளன..






உண்மை: உங்கள் நாக்கில் இருக்கும் 9,000 சுவை மொட்டுகளுடன் வாயின் மேற்புறத்திலும், தொண்டையின் பின்புறத்திலும் கூட சுவை மொட்டுகள் இருக்கின்றன.






பட்டாம்பூச்சி மற்றும் சில பூச்சிகளின் சுவை மொட்டுகள் அவற்றின் கால்களின் கீழ்புறத்தில் இருக்கின்றன. அவற்றின் உடலின் மீதுள்ள சிறு மயிர் துவாரங்களின் வழியாக அவை இனிப்பையும், கசப்பையும் கூட அவை சுவைக்கின்றன.






நம்பிக்கை: மச்சம், மரு போன்ற கருப்புப் புள்ளிகளை எலுமிச்சை சாறு அகற்றுகிறது.






உண்மை: மச்சங்களை எவற்றாலும் நீக்க முடியாது; விலை உயர்ந்த அழகு சாதனங்களாலும் கூட முடியாது. மச்சம், மரு போன்றவைகளின் செல்கள் தோலின் அடியில் இருக்கின்றன. எலுமிச்சை சாறால் இவற்றை நீக்க முடியாது. இந்த மச்சங்களை தேய்த்து அழிக்க நினைப்பதை விட்டு, எலுமிச்சைச் சாறைக் குடித்து விட்டு, மச்சங்கள் கவர்ச்சியாக இருப்பதாக பலர் கருதுவதை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.






நம்பிக்கை: ஆண்களை விட பெண்களுக்கு ஒரு விலா எலும்பு அதிகமாக இருக்கிறது.





உண்மை: இது சரியல்ல. ஆண், பெண் அனைவருக்கும் 12 ஜோடி விலா எலும்புகள் உள்ளன. ஆதி காலம் தொட்டு பெண்களைப் போன்ற அதே எண்ணிக்கை கொண்ட விலா எலும்புகள்தான் ஆண்களுக்கும் உள்ளன.






நம்பிக்கை: நீங்கள் உண்ணும்போதும், பேசும்போதும் உங்களின் தாடைகள் இரண்டும் இயங்குகின்றன.






உண்மை: தலையை அசைக்காமல் உங்கள் மேல் தாடையை நகர்த்த முயன்று பாருங்கள். மேல் தாடை நகர முடியாதபடி பொருத்தப் பட்டிருக்கிறது. உங்கள் தலையை அசைக்காமல் வைத்துக் கொண்டு உங்கள் கீழ் தாடையை உங்களால் அசைக்க முடியும். அதற்காக உங்கள் மேலுதட்டை இறுக்கமாக வைத்துக் கொள்ளத் தேவையில்லை.






நம்பிக்கை: முழங்கை நரம்பு என்பது உங்கள் முழங்கையில் உள்ள ஒரு எலும்புதான்.






உண்மை: முழங்கையில் உள்ள நரம்பு எலும்பு அல்ல. கையின் மேல் எலும்புக்கும் கீழே ஓடுவது இந்த நரம்பு இது. தமாஷ் நரம்பு என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த நரம்பு எதன் மீதாவது இடித்துக் கொண்டால் நீங்கள் உணரும் வலி தமாஷானது அல்ல.






நம்பிக்கை: உடலில் உள்ள பாகங்களில் மிகவும் கடினமானது எலும்புதான்.






உண்மை: உங்கள் பல்லின் மேற்புறத்தில் உள்ள எனாமல், எலும்வை விட கடினமானது. ஆனால், எலும்புகளைப் போல் எனாமல் உடைந்து போகும் போது அவற்றை சரி செய்ய முடியாது.






நம்பிக்கை: 120 வயதுக்கு மேலும் வாழக்கூடிய மக்கள் இருக்கிறார்கள்.






உண்மை: 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த செயின்ட் ஜெர்மைன் பிரபு என்ற பிரெஞ்சுக்காரர் தனக்கு 2,000 வயது ஆவதாகக் கூறிக் கொள்வார்; மக்கள் பலரும் அதை நம்பினர். தனது உண்மையான வயதை வெளிப்படுத்த மறுத்த அவரது வேலைக்காரன், தான் 500 ஆண்டு காலமாக பிரபுவுக்கு சேவை செய்வதாக பெருமையாகக் கூறினான். சீனாவின் லி சுங்-யுன் தனது 256 வயதில் 1933 இல் இறந்ததாகக் கூறப்படுகிறது.






இவை தவிர, நுண்ணியிரிகள் கலந்த பால், பழரசங்களை உண்டு வந்த தெற்கு ரஷ்ய மக்கள் அதிக நாள் வாழ்ந்ததாகக் கூறிக் கொண்டாலும், 115 ஆண்டுகளுக்கு மேல் எவர் ஒருவரும் வாழ்ந்ததற்கான சான்றுகள் இல்லை. வழக்கமான 120 வயதுக்கு மேல் ஆனதாகக் கூறிக் கொள்பவர்கள் உலகில் எளிதில் அடைய முடியாத உள்பகுதிகளில் வாழ்பவர்கள்; அவர்கள் பிறப்புக்கு எந்த சான்றிதழும் வைத்திருக்கப் படவில்லை.






நம்பிக்கை: உங்கள் கை நகங்கள் அனைத்தும் ஒரே சீராக வளர்கின்றன..






உண்மை: நீங்கள் வலது கைப் பழக்கம் உள்ளவராக இருந்தால், உங்கள் வலது கை நகங்கள் இடது கை நகங்களை விட வேகமாக வளரும்.






நீங்கள் இடது கைப் பழக்கம் உள்ளவராக இருந்தால் இடது கை நகங்கள் வலது கை நகங்களை விட வேகமாக வளரும்.






நம்பிக்கை:முகத்தைச் சுழிப்பதற்குத் தேவைப்படும் அதே அளவு முயற்சிதான் புன்னகைக்கவும் தேவைப்படுகிறது.






உண்மை: நீங்கள் புன்னகைக்கும்போது 17 தசைகள் செயல்படுகின்றன. ஆனால் முகத்தைச் சுளிப்பதற்கு நாற்பத்தி மூன்று தசைகள் இயங்க வேண்டும். அதனால் முகத்தைச் சுளிக்காமல் புன்னகையுங்கள். தசைகளின் வேலையாவது குறையும்.
 
from   periyarpinju.com

அகஸ்ட்டஸ் சீசர்

ரோமானியப் பேரரசு நிறுவிய அகஸ்டஸ் சீசர் வரலாற்றில் தலைமை சான்ற பெரியார்களில் ஒருவராவார். கி.மு. முதல் நூற்றாண்டில் ரோமானியக் குடியரசைச் சீர் குலைத்த உள்நாட்டுப் போர்களை இவர் முடிவுக்குக் கொண்டு வந்தார். ரோமானியப் பேரரசின் அரசைச் செம்மையாக சீரமைத்து இரு நூற்றாண்டுக் காலம் இப்பேரரசு உள்நாட்டு அமைதியோடும், செல்வச் செழிப்போடும் விளங்குவதற்கு அடிகோலினார்.







இவருடைய உண்மைப் பெயர் காயஸ் ஆக்டேவியஸ் ஆகும். ஆக்டேவியஸ் என்ற பெயரே பெரும்பாலும் இவருக்கு வழங்கி வந்தது. அகஸ்டஸ் என்ற பட்டப் பெயர், இவரது 31 ஆம் வயதில் தான் இவருடைய பெயருடன் இணைந்தது. இவர். கி.மு. 63 ல் பிறந்தார். அப்போது ரோமில் முன்னணி அரசியல் தலைவராக விளங்கிய ஜூலியஸ் சருக்கு உடன் பிறந்தவனின் மகளுடைய மகன் இவர். ஜூலியஸ் சீசருக்குச் சொந்த மகன் யாரும் இல்லை. அவர் இளைஞர் ஆக்ஸ்டேவியஸ் மீது அன்பு கொண்டிருந்தார். எனவே, அக்டேவியசுக்கு இராணுவத்திலும், அரசியலிலும் பயிற்சியளித்து, இவரை அரசியல் தலைமையை ஏற்கும், தகுதியுடையவராக உருவாக்கினார். ஆழ்ந்த எண்ணங்களும், உறுதியான உள்ளமும் படைத்த அக்டேவியஸ் படிப்படியாக முன்னணிக்கு வந்து,சீசரின் தத்துப் புதல்வனாகவும் ஆனார். கி.மு. 41 இல் ஜூலியஸ் சீசர் கொலையுண்டு மாண்டபோது, அக்டேவியஸ் 18 வயது மாணவராகவே இருந்தார். சீசர் இறந்த பின்பு, ரோமப் பேரரசின் ஆட்சியைப் பிடிப்பதில் இராணுவத் தளபதிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் இடையே நீண்ட காலம் கடும் போராட்டம் நடந்தது. அக்டேவியசின் அரசியல் எதிரிகள், ரோமானியப் பேரரசின் கொந்தளிப்பான அரசியல் அரங்கில் நீண்ட அனுபவம் பெற்ற பழுத்த அரசியல்வாதிகளாக இருந்தனர். அவர்கள் முதலில், இளைஞன் அக்டேவியசை ஓர் அச்சுறுத்தலாகவே கருதவில்லை. ஜூலியஸ் சீசர் தத்துப் புதல்வன் என்ற தகுதி மட்டும் தான் அக்டேவியஸ் மிகத் திறம்படப் பயன்படுத்திக் கொண்டு, சீசருடன் மிக நெருக்கமாக இருந்த சில படைத் தலைவர்களைத் தம்முடைய ஆதரவாளர்களாக மாற்றுவதில் வெற்றி கண்டார். எனினும், சீசரின் படையினரில் பலர் ஆதரித்தனர். அடுத்த சில ஆண்டுகளில் பல போர்களில் தமது அரசியல் எதிரிகளை ஒவ்வொருவராக அக்டேவியஸ் தோற்கடித்தார்.






ஆன்டனி மட்டும் இன்னும் எஞ்சியிருந்தார். ஆன்டனியுடன் அக்டேவியஸ் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு, ரோமானியப் பேரரசின் அதிகாரத்தை அவருடன் பகிர்ந்து கொண்டார். ரோமானியப் பேரரசின் கிழக்குப் பகுதியை ஆன்டனி தம் ஆட்சியில் வைத்துக் கொண்டார். மேற்குப் பகுதியை அக்டேவியஸ் ஆண்டு வந்தார். இருவருக்குமிடைய சில ஆண்டுகள் வரை அமைதியற்ற போர் நிறுத்தம் நிலவியது. இந்தப் போர் நிறுத்தக் காலத்தின் போது, ஆன்டனி, கிளியோபாட்ராவுடன் காதல் கேளிக்கைகளில் அதிகக் கவனம் செலுத்தி வந்தார். அதே சமயம் அக்டேவியஸ் தமது வலிமையைப் படிப்படியாகப் பெருக்கிக் கொண்டிருந்தார். கடைசியாக கி.மு. 32 இல் இருவருக்குமிடையே போர் மூண்டது. கி.மு. 31 இல் நடந்த ஆக்டியம் கடற்போரில் அக்டேவியஸ் பெரும் வெற்றி பெற்றார். இந்தப் போர், இவ்விருவருக்குமிடையிலான அதிகாரப் போட்டிக்கு இறுதியாக முற்றுப் புள்ளி வைத்தது. அடுத்த ஓராண்டுக்குள் அக்டேவியஸ் முழு வெற்றி பெற்றதும் போர் நின்றது. ஆன்டனியும் கிளியோபாட்ராவும் தற்கொலை செய்து கொண்டு மாண்டனர்.






அக்டேவியஸ் இப்போது, 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஜூலியஸ் சீசர் பெற்றிருந்த அதே அதிகாரத்தையும் வலிமையையும் பெற்றிருந்தார். ரோமானியப் பேரரசில் நடைபெற்று வந்த குடியரசு ஆட்சி முறையை ஒழித்து விட்டு, தாம் மன்னராக முடி சூட்டிக் கொள்ள சீசர் விரும்பியதாகத் தோன்றியபோது, அவர் கொலை செய்யப்பட்டார். கி.மு. 30-க்குள் பல உள்நாட்டுப் போர்கள் நடந்தன. ரோமாபுரியில் குடியரசு முறையிலான பல அரசுகள் தோல்வியடைந்தன. பெயரளவில் ஒரு குடியரசு ஆட்சியை வைத்துக் கொண்டு இரக்க மனப்பான்மை கொண்ட ஓர் சர்வாதிகார ஆட்சியை (Benevolent Dictatorship) ஏற்றுக் கொள்ள ரோமானிய மக்கள் தயாராக இருந்தனர்.






ஆட்சியைப் பிடிப்பதற்கான போராட்டத்தில் அக்டேவியஸ் ஈவிரக்கமின்றி நடந்து கொண்டபோதிலும், அவர் தமது அதிகாரத்தை நிலைநாட்டிய பின்பு, மிகவும் சமரச மனப்போக்குடன் நடந்து கொண்டார். ரோமானிய குடியரசின் ஆட்சிப் பேரவையினரின் (Senators) உணர்ச்சிகளைச் சாந்தப்படுத்துவதற்காக இவர். கி.மு. 27 இல் நாட்டில் மீண்டும் குடியரசை ஏற்படுத்தப் போவதாக அறிவித்தார். அத்துடன் தமது அரசப் பதவிகள் அனைத்திலிருந்தும் விலகிவிடவும் முன் வந்தார். எனினும், ஸ்பெயின், கால், சிரியா ஆகிய மாகாணங்களின் தலைமைப் பொறுப்பைத் தாமே வைத்துக் கொண்டார். ரோமானியப் படைகளில் பெரும்பாலானவை இந்த மூன்று மாகாணங்களிலும் இருந்தன. எனவே, நடைமுறையில் அதிகாரம் இவருடைய கைகளிலேயே பத்திரமாக இருந்தது. குடியரசின் ஆட்சிப் பேரவை இவருக்கு அகஸ்டஸ் என்ற பட்டப் பெயரைச் சூட்டியது. ஆனால், இவர் அரசர் என்ற பட்டத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை. ரோமானியப் பேரரசுப் பெயரளவில் இன்னும் குடியரசாகவே இருந்தது. அகஸ்டஸ் முதல் குடிமகன் என்ற நிலையிலேயே ஆட்சி புரிந்து வந்தார். ஆனால், நடைமுறையில் நன்றியும் பணிவிணக்கமும் உடையதாக இருந்த ஆட்சிப் பேரவை, அகஸ்டசை அவர் விரும்பிய எல்லாப் பதவிகளிலும் நியமித்தது. அவர் தமது எஞ்சிய ஆயுட்காலம் முழுவதிலும் உண்மையில், ஒரு சர்வாதிகாரியாகவே விளங்கினார். இவர் 70 ஆம் வயதில் கி.பி. 14 இல் இறந்தபோது, ரோமானியப் பேரரசு குடியரசு முறையிலிருந்து முற்றிலுமாக முடியாட்சி முறைக்கு மாறி விட்டிருந்தது. எனவே, இவருக்குப் பிறகு இவரது தத்துவப் புதல்வன் எவ்விதச் சிரமமுமின்றி ஆட்சிப் பீடம் ஏறினார். தொடர்ந்து இவரது மரபினர் பலர் ரோமானியப் பேரரசர்களாக ஆண்டனர்.






உலக வரலாற்றில் இரக்க மனப்பான்மை கொண்ட ஓர் சர்வாதிகாரிக்கு அகஸ்டஸ் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார். அவர் தேர்ந்த அரசியல் மேதையாகவும் திகழ்ந்தார். அவரது சமரச கொள்கைகள், ரோமானிய உள்நாட்டுப் போர்களினால் விளைந்த பெரும் பிளவுகளை நீக்குவதற்கு உதவின. ரோமானியப் பேரரசை நாற்பதாண்டுகளுக்கு மேல் அகஸ்டஸ் ஆண்டார். அவருக்குப் பின்னரும் பல ஆண்டுகள் வரை அவருடைய கொள்கைகள் இப்பேரரசில் செல்வாக்குப் பெற்றிருந்தன. அவருடைய ஆட்சிக் காலத்தில் ரோமானியப் படைகள், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, கவாஷ’யா ஆகிய நாடுகளையும் பால்க்கன் நாடுகளில் பெரும்பகுதிகளையும் வென்றன. அவருடைய ஆட்சியின் இறுதிக் காலத்தில் ரோமானியப் பேரரசின் வட எல்லை ரைன்-டான்யூப் கோடு வரை நீடித்திருந்தது. அடுத்த சில நூற்றாண்டுகள் வரையிலும் இந்த வட எல்லைக் கோடு மாறவே இல்லை.






அகஸ்டஸ் இணையற்ற திறமை வாய்ந்த நிருவாகியாக விளங்கினார். நாட்டில் திறன் வாய்ந்த ஆட்சிப் பணி முறையை நிறுவினார். வரி அமைப்பு முறையைத் திருத்தியமைத்தார். ரோமானிய அரசின் நிதியமைப்பு முறையையும் சீர்திருத்தியமைத்தார். ரோமானிய இராணுவத்தைப் பெரிதும் மாற்றியமைத்தார். நிலையான கடற்படை ஒன்றையும் நிறுவினார். ரோமானியப் பேரரசின் மெய்க் காவல் படை (Praetorian Guard) ஒன்றையும் ஏற்படுத்தினார். இந்தப் படை பிந்திய நூற்றாண்டுகளில் பேரரசர்களை தெரிந்தெடுப்பதிலும், பதவியிலிருந்து அகற்றுவதிலும் பெரும் பங்கு கொண்டது.






அகஸ்டஸ் ஆட்சிக் காலத்தில், ரோமானியப் பேரரசு முழுவதிலும், நேர்த்தியான நெடுஞ்சாலைகள் ஏராளமாகப் போடப்பட்டன. ரோம் நகரில் பல அரசுக் கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. நகரம் பெருமளவுக்கு அழகுப்படுத்தப் பட்டது. பல கோயில்கள் கட்டப்பட்டன. பண்டைய ரோமானியச் சமயத்தை அகஸ்டஸ் ஆதரித்தார். அந்தச் சமயத்தைத் தழுவுவதை ஊக்குவித்தார். திருமணம் புரிந்து கொண்டு, குழந்தைகள் பெற்று குடும்பம் நடத்துவதை ஊக்குவிக்கும் சட்டங்கள் இயற்றினார்.






கி.மு. 30 முதற்கொண்டு, அகஸ்டஸ் ஆட்சியில் ரோமானியப் பேரரசில் உள்நாட்டு அமைதி நிலவியது. இதனால், நாட்டின் செல்வமும், வளமும் செழித்தோங்கின. கலைகள் ஓங்கி வளர்ந்தன. ரோமானிய இலக்கியத்தில் அகஸ்டஸ் காலம் ஒரு பொற்காலமாக விளங்கியது. தலை சிறந்த ரோமானியக் கலைஞர் வர்ஜில் இந்தக் காலத்தில் தான் வாழ்ந்தார். ஹோராஸ், லிவி போன்ற வேறு பல எழுத்தாளர்களும் இந்தக் காலத்தில் தான் வாழ்ந்திருந்தார்கள். ஒவிட் என்ற எழுத்தாளர் ஏனோ அகஸ்டசின் žற்றத்திற்கு ஆளானார். அவர் ரோமிலிருந்து நாடு கடத்தப்பட்டார். அகஸ்டசுக்குச் சொந்தப் புதல்வர்கள் இல்லை. அவருடைய மருமகளும், இரு பேரப் பிள்ளைகளும் அவருக்கு முன்னரே இறந்துவிட்டனர். எனவே, அவர் தம் மனைவிக்கு முதற் கணவனால் பிறந்த மகனைத் தத்து மகனாக ஏற்றுக் கொண்டார். டைபீரியஸ் என்ற இந்தத் தத்து மகனையே தமது வாரிசாக நியமித்தார். இந்த அரச மரபில் பின்னர், காலிகுலா, நீரோ போன்ற அரசர்கள் ஆண்ட போதிலும், இந்த மரபு விரைவிலேயே அற்றுப் போயிற்று, எனினும் அகஸ்டஸ் ஆட்சியுடன் தொடங்கிய உள்நாட்டு அமைதி இருநூறு ஆண்டுகள் நீடித்தது. அமைதியும், வளச்செழிப்பும் மிகுந்த இந்த 200 ஆண்டுக் காலத்தில், அகஸ்டஸ், மற்ற ரோமானியத் தலைவர்கள் வெற்றி கொண்ட நாடுகளில் ரோமானியப் பண்பாடு ஆழவேரூன்றி ஆல்போல் பரந்து விரிந்தது. பண்டைக் காலப் பேரரசுகள் அனைத்திலும் மிகவும் புகழ் வாய்ந்தது ரோமானியப் பேரரசேயாகும். பண்டைய நாகரிகத்தின் உச்ச நிலையாக ரோமானியப் பேரரசு விளங்கியது. எகிப்தியர்கள், பாபிலோனியர்கள், யூதர்கள். கிரேக்கர்கள் போன்ற பண்டைய உலக மக்களின் கொள்கைகளையும், பண்பாட்டுச் சாதனங்களையும் மேற்கு ஐரோப்பாவுக்குப் பரப்புகின்ற வடிகாலாகவும் ரோமானியப் பேரரசு திகழ்ந்தது.






அகஸ்டஸ் சீசரின் கொள்ளுப் பாட்டனாகிய ஜூலியஸ் சீசரின் சாதனைகளுடன் அகஸ்டசின் சாதனைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது சுவையானதாகும். அகஸ்டஸ் அழகிய தோற்றமுடையவர்; அறிவாற்றலில் சிறந்தவர்; நல்லொழுக்க முடையவர்; பல இராணுவ வெற்றிகளைக் கண்டவர்; எனினும், முந்தைய சீசருக்கு இருந்த கவர்ச்சி இவருக்கு இல்லை. ஜூலியஸ் தம் காலத்தவரின் கற்பனையை அகஸ்டசை விட அதிகமாகத் தூண்டினார். அதனால் அவர் தமது புகழ் சிறிதும் குன்றாமல் அதிகப் புகழுடன் விளங்கினார். ஆனால், வரலாற்றில் அவர்களுடைய செல்வாக்கினை மதிப்பிட்டுப் பார்க்கும் போது, இந்த இருவரிலும் அகஸ்டஸ் தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராகத் திகழ்கிறார்.






அகஸ்டசை மகா அலெக்சாந்தருடன் ஒப்பிட்டுப் பார்ப்பதும் நலமாக இருக்கும். இருவரும் மிக இளம் வயதிலேயே தங்கள் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். ஆயினும், அகஸ்டஸ் தலைமையிடத்தை எட்டுவதற்கு அலெக்சாந்தரைவிடக் கடுமையான எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. அகஸ்டசின் இராணுவத் திறன், அலெக்சாந்தரின் அளவுக்குச் சிறப்புடையதாக இருக்கவில்லை. எனினும், அவருடைய திறமை முனைப்பாகவே இருந்தது. அகஸ்டசின் வெற்றிகள் நீண்ட காலம் நிலைத்திருந்தன. இது இவ்விருவருக்குமுள்ள மிக முக்கிய வேறுபாடாகும். அகஸ்டஸ் எதிர்காலத்திற்காக மிகவும் கவனமாகத் திட்டமிட்டுச் செயற்பட்டார். அதன் விளைவாகவே, அவருடைய செல்வாக்கு மனித வரலாற்றில் கணிசமான அளவுக்கு நீண்ட காலம் நிலைபெற்று விளங்கியது.






அகஸ்டசை மா-சே-துங்குடன் அல்லது ஜார்ஜ் வாஷ’ங்டனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதும் பொருத்தமாக இருக்கும். இந்த மூவருமே உலக வரலாற்றில் முக்கியமான ஓரளவு ஒரே மாதிரியான பங்குப் பணிகளை ஆற்றினர். எனினும், அகஸ்டசின் நீண்ட கால ஆட்சி, அவரது கொள்கைகளின் வெற்றி, உலக வரலாற்றில் ரோமானியப் பேரரசுக்கு ஏற்பட்ட முக்கியத்துவம் ஆகியவற்றின் காரணமாக, மற்ற இருவரையும்விட உயர்நிலையில் வைக்கத் தக்கவர் அகஸ்டஸ் எனலாம்.

Vaduvoor

Vaduvoor/Vauvur is a charming village situated between Thanjavur and Mannargudi, in Tamil Nadu. This small hamlet is famous for the ancient Shri Kodhanda Rama Swami Temple. With its beautiful ponds, meandering rivulets and canals, and the vast expanses of green paddy fields, Vaduvoor presents a delightful sight of nature’s splendor at work.


Vaduvoor was once offered to the vidhwans by the kings of Thanjavur on an Ekadasi day; hence it is also called as 'Ekadasi' village.


Vaduvoor Birds Sanctuary, located near Mannargudi in Tiruvarur District is worth a visit.


The nearest airport is at Tiruchirapalli, 58 km from Thanjavur. The nearest railway station is at Tiruchirapalli.

Sunday, 8 August 2010

வடுவூர் துரைசாமி அய்யங்கார் (1880-1942)

 வடுவூரில் 1880-இல் பிறந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார்.
    1919 முதல் சிலகாலம் மனோரஞ்சனி என்ற மாத இதழைத் தொடங்கி நடத்தி, அதில் தம் நாவல்களைத் தொடராகவும் வெளியிட்டார்.
    ஏறத்தாழ 40 நாவல்களை எழுதியுள்ளார். மேனகா, திகம்பர     சாமியார்     முதலான     நாவல்கள் திரைப்படமாகியுள்ளன.
    வடுவூர் துரைசாமி அய்யங்கார் நாவல்கள் உணர்ச்சிக் கிளர்ச்சியூட்டும்     தன்மையுடையனவாகவும், அறிவுப்புதிர் கொண்டனவாகவும் அமைந்திருந்தன.
    டாக்டர், சோணாசலம், நங்கை மடவன்னம், பாவாடைச் சாமியார், பச்சைக்கிளி, மருங்காபுரி மாயக்கொலை, மாய விநோதப் பரதேசி என்பன இவரின் நாவல்களில் சிலவாகும்.

வடுவூர் பறவைகள் காப்பகம்

வடுவூர் பறவைகள் காப்பகம் இது தஞ்சாவூர் மாவட்டத்தில் மன்னார்குடிக்கும் தஞ்சாவூருக்குமான நெடுஞ்சாலையில் தஞ்சாவூரிலிருந்து 25கிமீ தூரத்தில் உள்ளது.

 தண்ணீர் சேமிக்கப்பட்டு பயன் படுத்தப்படுகிறது

1999ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தப் பறவைகள் காப்பகம் உருவாக்கப்பட்டது, மேட்டூர் அணையிலிருந்து சாகுபடிக்கென திறந்து விடப்படும் தண்ணீர் இங்கு சேமிக்கப்பட்டு பயன் படுத்தப்படுகிறது, வட கிழக்கு பருவமழையின் போது இயல்பாக பெறப்படும் மழைநீரும் சேர்ந்து இங்கு பறவைகள் இறங்கி ஏற வழிவகை செய்து விடுகிறது.

 நீர்ப் பறவைகள் வந்து செல்கின்றன

40க்கும் மேற்பட்ட நீர்ப் பறவைகள் வந்து செல்கின்றன. நவம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 200,000 பறவைகள் வந்துள்ளன. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் இங்கு செல்வதற்கு ஏற்ற காலங்கள். அப்போது அதிகளவான பறவைகள் இங்கு வரும்.

vaduvur

Agricultural Land in Vaduvur pincode 614019   Bike in Vaduvur pincode 614019  
Books in Vaduvur pincode 614019   Bus in Vaduvur pincode 614019  
Camera in Vaduvur pincode 614019   Car in Vaduvur pincode 614019  
CD/VCD/DVD in Vaduvur pincode 614019   Commercial Building in Vaduvur pincode 614019  
Computer in Vaduvur pincode 614019   Electronics in Vaduvur pincode 614019  
Flat in Vaduvur pincode 614019   Free in Vaduvur pincode 614019  
Fruits in Vaduvur pincode 614019   Furniture in Vaduvur pincode 614019  
Grocery in Vaduvur pincode 614019   House in Vaduvur pincode 614019  
Jewelry in Vaduvur pincode 614019   Kitchen Machine in Vaduvur pincode 614019  
Laptop in Vaduvur pincode 614019   Lorry in Vaduvur pincode 614019  
Manufacturing Unit in Vaduvur pincode 614019   Music Instrument in Vaduvur pincode 614019  
Refrigerator in Vaduvur pincode 614019   Scooters in Vaduvur pincode 614019  
Shops in Vaduvur pincode 614019   Spices in Vaduvur pincode 614019  
Stationary in Vaduvur pincode 614019   Toys in Vaduvur pincode 614019  
Utensil in Vaduvur pincode 614019   Vacant Land in Vaduvur pincode 614019  
Van in Vaduvur pincode 614019   Vegetables in Vaduvur pincode 614019  
Washing Machine in Vaduvur pincode 614019