Sunday, 6 March 2011

புரோட்டோக்கால்ஸ் ஆஃப் சியான்-வில்லனான புத்தகம்

உலக வரலாற்றில் வில்லனகள் வெவ்வேறு அளவிலும் வடிவத்திலும் வந்துள்ளனர்.  ஒருவர் வில்லனாவதற்கு பெரும் சக்கரவர்த்தியாகவோ,  கொடூர கொலையாளியாகவோ பல லட்சம் பேர்களை நேரடியாகக் கொலை செய்தவராகவோ இருக்கத் தேவையில்லை. ஏன் உயிருள்ள மனிதராக இருக்கக்கூடத் தேவையில்லை. உயிரற்ற எண்ணக்கருக்களும்,  கோட்பாடுகளும், நம்பிக்கைகளும் கூட பல சமயங்களில் அவற்றை பின்பற்றுவோரால் உயிர்பெற்று    உலகில் பெரும் நாசத்தை விளைவித்துள்ளன / வருகின்றன. ஏன் பொய்களும் புரட்டுகளும் திட்டமிட்டு பரப்பட்ட வதந்திகளும் கூட பல நூற்றாண்டுகளாக மனித குலத்துக்கு பல தீமைகளைச் செய்து வந்திருக்கின்றன.  இப்படி ஒரு இனத்தின் மீது வீண்பழி சுமத்தி உலகையே அவர்களை வெறுக்கச் செய்து, அழிக்கத் தூண்டிய ஒரு புத்தகமே இந்த வார வில்லன்.  யூதர்களைப் பற்றி நூறாண்டுகளுக்கு மேலாக அவதூறுகளைப் பரப்பப் பயன்படுத்தப்படும் தி புரோட்டோகால்ஸ் ஆஃப் தி எல்டர்ஸ் ஆஃப் சியான் (The Protocols of the Elders of Zion)  என்ற இப்புத்தகம் 20ம் நூற்றாண்டில் யூதர்களுக்கு சொல்லவொண்ணாத் துயர்களையும் பேரிடர்களையும் உருவாக்கியுள்ளது.
ஐரோப்பிய மக்களுக்கு பல நூற்றாண்டுகளாகவே யூதர்களின் மீது நல்ல அபிப்ராயம் கிடையாது.  ஏசுவை சிலுவையில் அறையக் காரணமானவர்கள் என்பதிலிருந்து அதிக வட்டி கேட்கிறார்கள் என்பது வரை அவர்கள் மீது ஐரோப்பிய கிருத்துவர்கள் சிறிதும் பெரிதுமாக பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பல கொடுமைகளுக்கு ஆளாக்கி வந்துள்ளனர். சிலுவைப் போர்களில் யூதர்களைப் படுகொலை செய்வது, மதம் மாறச் சொல்லி துன்புறுத்துவது,  மொத்த யூத மக்களையும் நாடு கடத்துவது, பல தொழில்களில் ஈடுபடக்கூடாது என்ற கட்டுபாடுகள்,  நகரங்களில் வசதியற்ற குறுகிய பகுதிகளில் ஆடுமாடுகளைப் போல் அடைத்து வாழ வற்புறுத்துவது என்று பல வழிகளில் ஐரோப்பிய யூதர்களைத் துன்புறுத்தி வந்துள்ளனர்.  யூதர்களுக்கு பல தொழில்களைப் புரிய அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் ஒன்று கைவினைக் கலைஞர்களாக வேண்டும் அல்லது வட்டிக்கு கடன் கொடுக்கும் லேவா தேவிக்காரர்களாக வாழ வேண்டும்.  பொதுவாக வட்டி வசூலிக்கும் யாரையும் மக்களுக்குப் பிடிக்காது; ஒரு குறிப்பிட்ட இனத்தவர் மட்டும் வட்டிக்காரர்களாக இருந்தால்,  அந்த இனத்தின் மீதே அவர்களுக்கு வெறுப்பு வளர்ந்து விடும். யூதர்களுக்கு இதுவே நடந்தது. யூதன் என்றாலே பேராசை பிடித்து பணம் பணம் என்று அலைபவன் என்ற பிம்பம் ஐரோப்பிய மக்களிடையே உருவாகி விட்டது.  கூட சட்டத்தை மதிக்காமல் பெரும் குற்றமிழைப்பவர்கள் என்ற முத்திரையும் சேர்ந்து கொண்டது.  புனைவுக் கதைகளும் நாடகங்களும் இந்த பிம்பத்தை தூபம் போட்டு வளர்த்து விட்டன. பதினேழாம் நூற்றாண்டில் ஷேக்ஸ்பியர் எழுதிய மெர்ச்சண்ட் ஆஃப் வெனிசில் வரும் ஷைலாக் கடன்காரன் பாத்திரமும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய ஆலிவர் டுவிஸ்ட் புதினத்தில் வரும் ஃபாகின் திருடன்  பாத்திரமும் இந்த பிம்பங்களைப் பலப்படுத்திய கற்பனைப் படைப்புகளுள் ஒரு சில.
ஒரு புறம் அவதூறும் கொடுமைகளும் நடந்து கொண்டிருந்த போதே இன்னொரு புறம் யூதர்களில் ஒரு பகுதி வட்டித் தொழிலில் செழித்துக் கொண்டிருந்தது. என்னதான் மக்கள் கடன்காரர்களை வெறுத்தாலும் அதற்காகக் கடன் வாங்காமலா இருந்து விடப்போகிறார்கள்.  சர்வதேச வங்கி வர்த்தகத்தின் முதுகெலும்பே கடன் கொடுக்கலும் வாங்கலும் தான். இதனால் வட்டித் தொழிலில் ஈடுபட்ட ஐரோப்பாவின சில யூதக் குடும்பங்கள் காலப்போக்கில் பெரும் வங்கியர்களாகி (bankers) விட்டன.  இது ஐரோப்பிய கிருத்துவர்களுக்கு யூதர்களின் மீதிருந்த பொறாமையினையும் வெறுப்பையும் பன்மடங்காக்கியது. நாட்டிற்கு எந்த கஷ்டம் வந்தாலும் அதற்குப் பின்னால் யூதர்கள் இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டும் பழக்கமும் ஏற்பட்டது.  விலைவாசி உயர்விலிருந்து, போரில் தம் நாட்டுப் படைகள் தோற்பது வரை அனைத்துக்கும் காரணம் யூதர்களின் சதி தான் என்று ஒரு தரப்பு குற்றம் சாட்டத் தொடங்கியது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யூத சமுதாயத்தினிடையேயும்  பெரும் மாற்றங்கள் ஏற்படலாயின. கைவினைத் தொழிலும், வட்டித் தொழிலும் செய்து திருப்தியடையாத பல யூதர்கள் உயர் கல்வி கற்று பெரும் சிந்தனையாளர்களாகவும், மெய்யியலாளர்களாகவும், அறிவியலாளர்களாகவும் மாறத் தொடங்கினர். மேற்கு ஐரோப்பாவில் மெதுவாக யூத சமுதாயத்தின் நிலை முன்னேறத் தொடங்கியது. ஆனால் கிழக்கு ஐரோப்பாவிலும் அருகிலிருந்த ரஷியப் பேரரசிலும் அவர்களது வாழ்வில் பெரிதாக எந்த மாற்றமும் நிகழவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டு உலக வரலாற்றில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த கால கட்டம். தொழிற்புரட்சியும் எந்திர மயமாக்கலும் உலகின் சமுதாய அரசியல் கட்டமைப்பைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தன. நில அடிமை வாதம், வர்க்கவொழுக்கம் போன்றவற்றால் நூற்றாண்டுகளாகக் கட்டிக் காப்பாற்றப்பட்டு வந்த அரசியல் அமைப்புகளும், பேரரசுகளும் ஆட்டம் கண்டன.  ஆட்சியாளர்களின் மீது அதிருப்தி அடைந்த மக்களிடையே சின்னதும் பெரிதுமாக பல புரட்சிகள் வெடித்து வந்தன. அவற்றை அடக்குவதற்கு மன்னர்களும் மந்திரிகளும் திணறிக் கொண்டிருந்தனர். 20ம் நூற்றாண்டு பிறந்த பின்னர் பழைய சமுதாய அரசியல் கட்டமைப்புகளில் பெருத்த மாற்றம் நிகழப்போகிறது என்பது தெளிவானது. ஆனாலும் பல பழமைவாதிகள் தங்களது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள விடாது போராடினர். மக்கள் கோபத்தைத் திசை திருப்ப அவர்கள் கையாண்ட ஒரு உத்தி, அதனை யூதர்கள் மீது திசைதிருப்புவது.  இது ரஷ்யப் பேரரசில் ஒரு தேர்ந்த அரசியல் உத்தியாகவே ஜார் மன்னர்களால் மாற்றப்பட்டிருந்தது.  போரில் தோல்வியா யூதனை நோக்கி குற்றம் சொல்,  இந்த ஆண்டு பயிர்கள் விளையவில்லையா அப்படியென்றால் யூதன் சதி செய்து விட்டான், பஞ்சமா யூதன் தானியத்தைப் பதுக்கி விட்டான். இதுவே பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்ய அரசியல்.
வெறுமனே குற்றம் சாட்டுவதோடு நிற்காமல் யூதர்களின் மீது திட்டமிட்ட வன்முறையும் கலவரங்களும் ஜார் மன்னர்களால் உருவாக்கப்பட்டன. போக்ராம் (pogram) என்ற வார்த்தைக்கு குறிப்பிட்ட இனக்குழுவைத் திட்டமிட்டுத் தாக்குதல் என்று அர்த்தம் உருவாக ஜார் மன்னர்களின் யூதப் போக்ராம்களே காரணமாக அமைந்தன. இப்படி யூதர்கள் மீது மக்களின் வெறியைக் கூட்ட உருவாக்கப் பட்ட புத்தகமே தி புரோட்டோகால்ஸ் ஆஃப் தி எல்டர்ஸ் ஆஃப் சியான். முதன் முதலில் 1903ம் ஆண்டு ரஷ்ய மொழியில் இந்த புத்தகம் ஒரு அறிக்கை வடிவில் வெளியானது.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உலகத்தைக் கைப்பற்றி ஆளுவதற்காக யூதத் தலைவர்கள் கூடித் திட்டமிட்டனர் என்றும். அந்த கூட்டத்தில் அவர்கள் பேசிய பேச்சுகள், வகுத்த திட்டங்களை புத்தக வடிவில் வெளியிடுகிறோம் என்றும் புத்தகத்தை வெளியிட்டவர்கள் சொன்னார்கள்.  ஐரோப்பிய மக்களுக்கு யூதர்கள் மீதிருந்த எல்லா கெட்ட நினைப்புகளையும் இந்தப் புத்தகம் நன்றாக வெளிக்கொணர்ந்திருந்தது.  யூத வங்கியர்கள் முதலில் உலகப் பொருளாதாரத்தை சீர் குலைப்பார்கள், பிற இனத்தவர்களின் சமூக கட்டுப்பாடுகளைத் தகர்த்து அவர்களை பலவீனப்படுத்துவார்கள்,  உலகெங்கும் போர்களை மூட்டுவார்கள். இதனால் பேரிழப்புகளுக்காளாகி பலவீனப்பட்டு இருக்கும் உலகத்தை எளிதில் கைப்பற்றி ஒரு உலகளாவிய யூதப் பேரரசை உருவாக்கிவிடுவார்கள் என்று புரோட்டோகால்ஸ் பூச்சாண்டி காட்டியது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் நடந்த ஒரு சாதாரண யூத மாநாட்டைச் சாக்காக பயன்படுத்திக் கொண்ட ரஷ்ய உளவுத்துறையின் பாரிசு கிளையே இந்த ஃபோர்ஜரிக்குக் காரணம். யூதர்கள் கூட்டியதோ ஒரு சாதாரண ஜாதிச் சங்க மாநாடு போன்ற ஒரு விஷயம். ஆனால் ரஷ்ய உளவுத்துறை அதற்கு நன்றாக பில்டப் கொடுத்து உலகத்தைக் கைக்குள் போட திட்டம் தீட்டினார்கள் என்று தயார் செய்து இந்த போலி “திட்டத்தை”க் கசியவிட்டது. யூதர்களின் மீது மக்களுக்கு வெறுப்பு கிளப்பும் ரஷ்ய ஆட்சியாளர்களின் செயலகளில் இதுவும் ஒன்றாகவே தொடங்கியது. ஆனால் சந்தர்ப்பவசமாக பொதுமக்களிடம் இது பிரபலமானதால் மீண்டும் மீண்டும் பல தரப்பினரும் அச்சிட்டு வெளியிடத் தொடங்கினர்.  பல ஐரோப்பிய மொழிகளில் பெயர்க்கப்பட்டு ஐரோப்பாவெங்கும் இப்புத்தகம் பரவியது.
ஐரோப்பிய யூத வெறுப்பாளர்களுக்கு புரோட்டோகால்சின் பிரபலம் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலானாது. நாங்க சொன்னோம்ல அவனுங்க உலகமகா வில்லனுங்கன்னு என்று பரப்புரை செய்யத் தொடங்கினர்.  யூதர்கள் மீது இதுவரை சாற்றப்பட்டு வந்த அவதூறுகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரமாகக் காட்ட புரோட்டாகால்ஸ் அவர்களுக்கு வசதியாகப் பயன்பட்டது.  அதுவரை குடிசைத் தொழிலாக இருந்த யூத அவதூறு புரோட்டோகால்ஸ் புத்தகத்தின் துணையுடன் பெரும் உற்பத்தித் தொழிற்சாலையாக விசுவரூபமெடுத்தது.. யூதர்களின் மீது பழி போட்டு பல ஆண்டுகளாகத் தப்பி வந்த ரஷ்யாவின் ஜார் மன்னர்களின் ஆட்சி 1917ல் கம்யூனிஸ்ட்டுகளின் புரட்சியால் முடிவுக்கு வந்தது.  கம்யூனிஸ்டுகளிடமிருந்து தப்பி ஐரோப்பாவில் தஞ்சம் புகுந்த முன்னாள் ரஷ்ய ஆட்சியாளர்களும் ஆதரவாளர்களும், புரோட்டோகால்சின் புகழ் பரவ புத்துணர்ச்சி அளித்தனர். கம்யூனிஸ்டு புரட்சிக்கு யூதர்களே காரண கர்த்தாக்களென்றும், புரோட்டோகால்சில் சொல்லப்பட்டிருந்த திட்டங்களுக்கு ரஷ்யப் புரட்சியே நல்ல எடுத்துக் காட்டு என்றும் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். ஐரோப்பிய மக்களின் மனங்களில் இதனால் புரோட்டோகால்ஸ் புத்தகம் உண்மை என்ற கருத்து ஆழமாக வேரூன்றிவிட்டது.
1920களில் புரோட்டோகால்ஸ் ஒரு ஃபோர்ஜரி புத்தகமென்று தெளிவாக நிரூபிக்கப்பட்டது.  பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளியான பல புத்தகங்களில் இருந்து முழுப் பக்கங்களை அப்படியே காப்பியடித்து ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்ட புத்தகம் என்று இலக்கிய ஆய்வாளர்களும் வரலாற்றளர்களும் தெளிவாக நிரூபித்தனர். ஆனால் ஐரோப்பிய மக்கள் தான் அதனை நம்பத் தயாராக இல்லை.” புத்தகத்திலேயே போட்ட்ருக்காம்ல் யூதன் சதி செய்யறான்னு” என்ற ரீதியிலேயே அவர்களது புரிதல் இருந்தது.  இதனை ஐரோப்பாவின் புதிய ஆட்சியாளர்களும் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். முதலாம் உலகப் போரில் தோற்ற ஜெர்மனியில் போரில் நம்ம நாடு தோற்று விட்டது என்று பலரால நம்ப முடியவில்லை. நம்ம படை தோற்கடிக்கப்பட்டிருக்குன்னா அதுக்கு யாராச்சும் சதி செஞ்சுருப்பாங்க என்று சொல்லிக் கொண்டவர்கள் புரோட்டாகால்சை ஆதாரமாகக் காட்டினார்கள்.  இது கண்டிப்பாக யூதர்களின் சதியாகத் தான் இருக்க முடியுமென்று  ஹிட்லரின் ஆதரவாளார்கள் சொல்லத் தொடங்கினர். இப்படிப் பரவிய யூத வெறுப்பே ஹிட்லர் ஜெர்மனியில் பதவிக்கு வரத் துணையாக இருந்தது.  நாஜிக்களின் இன வெறிக்கு அறுபது லட்சம் யூதர்கள் பலியாகவும் காரணமாக அமைந்தது.
ஒரு புறம் ஹிட்லர் போன்றவர்களின் அரசியல் துணை இன்னொரு புறம் அமெரிக்கத் தொழிலதிபர் ஹென்றி ஃபோர்டு போன்றோரின் ஆதரவு. இது போன்ற காரணங்களால் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் புரோட்டோகால்சுக்கு உலகெங்கும் ஆதரவு பெருகியது.  இரண்டாம் உலகப் போரில் பாசிச நாடுகள் தோற்கடிக்கப்பட்டாலும் பின்னர் யூதர்களுக்கான நாடாக இஸ்ரேல் உருவானதிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமாகத் தொடங்கியது. புரோட்டோகால்ஸ் புத்தகம் ஒரு போலி என்று தெளிவாக எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டவை அனைத்தும் உண்மை என்று நம்புவோர் கோடிக்கணக்கில் உள்ளனர்.  யூதர்கள் இன்னும் உலகையாள முயலுகிறார்கள்,  பொருளாதார சிக்கல்களுக்கு அவர்களது சதியே காரணம் என்று பரவலாக நம்பப்படுகிறது.  பொதுமக்கள் மட்டுமல்ல பல நாடுகளின் ஆட்சியாளர்களும் இன்னும் இதை நம்புகின்றனர். 1990களில் நிகழ்ந்த ஆசிய பொருளாதார நெருக்கடியை யூதர்கள் தான் வேண்டுமென்றே உருவாக்கினார்கள் என்று அப்போதைய மலேசியப் பிரதமர் மஹாத்திர் முகமது வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்.
இப்படி வெளியாகி நூறாண்டுகள் ஆகியும் இஸ்ரேலையும் யூதர்களையும் தாக்குவதற்கும் அவர்களைப் பற்றி அவதூறு பரப்புவதற்கும் இந்த புரோட்டோகால்ஸ் புத்தகம் பயன்பட்டு வருகிறது.  ஒரு பெரும் இனவழிபபு (holocaust)  நிகழக் காரணமாக இருந்த இது இன்று வரை பரவலாக நம்பபடுவதுதான் ஆச்சரியத்தையும் அச்சத்தையும் அளிக்கும் விஷயமாகும்

Send வசந்த் வடுவூர்
an email at vasanthvdr@gmail.com


உயிரினங்கள் சிலவற்றினைப் பற்றிய சுவாரஷ்சியமான தகவல்கள்

ஒக்டோபஸ்சின் மூளையில் சராசரியாக 300பில்லியன் நியூரோன்கள் உள்ளன.
 நத்தைகள் 15 வருடங்களுக்கும் அதிகமாக வாழக்கூடியவையாகும்.
 ராஜ நாகத்தின் விஷம் மிகவும் அபாயகரமானதாகும். ராஜ நாகத்தின், 1கிராம் விஷமானது 150 பேரைக் கொல்லக்கூடியதாகும்.
 சுண்டெலிகளின் இதயத்துடிப்பு நிமிடத்துக்கு 650 தடவைகளாகும்.
 மின்மினிப்பூச்சிகளில், ஆண் மின்மினிப்பூச்சிகளே பறக்ககூடியவையாகும்.
 பூனைக்குட்டிகள் பிறக்கும்போது குருடாகவும், செவிடாகவும் காணப்படும்.
 உலகில் மிகச்சிறிய கிளி இனமாக பிக்மி (Pygmy) கிளிகள் விளங்குகின்றன. இந்த இன கிளிகளின் சராசரி நீளம் 8சென்ரி மீற்றர்கள் ஆகும்.
 இறைச்சியினை உண்ணுகின்ற ஒரே கிளி இனமாக அவுஸ்திரேலியாவின் கியா இன கிளிகள் விளங்குகின்றன.
 குதிரைகள், எலிகள் ஆகியனவற்றினால் வாந்தியெடுக்க முடியாது. இதன் காரணத்தினால்தான் எலிகளுக்கு விஷம் வைத்து அவற்றின் தொல்லையினை கட்டுப்படுத்த முடிகின்றது.
 உலகில் மிகப்பலமான ஒலியினை(188 டெசிபல்கள்) வெளிப்படுத்துகின்ற உயிரினம் நீலத்திமிங்கிலங்களாகும். இவற்றின் ஒலியினை 800கிலோமீற்றருக்கும் அப்பாலும் உணரமுடியுமாம்.



Google+
.

இந்தோனிசியாவில் கண்டு எடுக்கப்பட்ட இறந்த நிலையில் வேற்றுகிரக வாசி?

செம்பட்டை நிறத்தை ஒட்டிய தலை முடியுடன்,பாம்பு போல் உடலமைப்புடன் இந்த வேற்று கிரகவாசி இந்தோனிசியாவில் ஒரு கிராமத்தில் கண்டெடுக்கபட்டுள்ளது .

31 விரல்களுடன் 6 வயது சிறுவன்

சீனாவில் பிறந்த இந்த ஆறு வயது சிறுவன் 31- விரல்களுடன் உள்ளான்.
கைகளில் 5 அதிகமான விரல்களும்,கால்களில் 6 விரல்களும் உள்ளன .
ஒரு கையில் ஏழு விரல்களும் , மறுகையில் எட்டு விரல்களும் உள்ளன.
இரண்டு கால்களிலும் அதிகமாக மூன்று விரல்கள் உள்ளன.

மருத்துவர்கள் இவ்வகையான நோயை “polydactyl ” என்று அழைக்குறார்கள்.
மிகவிரைவில் இந்த சிறுவன் சத்திரசிகிச்சை மேற்கொள்ளவுள்ளான்.

உலகின் மிக அகலமான வாய் உள்ள மனிதர்

Francisco Domingo Joaquim ,அங்கோலா என்பவரே இவ்வாறு மிக அகலமான வாயை உடையவர்.இவரின் வாயின் அகலம் ஆறு அரை inches .


இவர் உலக சதனையர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்

முகம் முழுவதும் முடியுடனான அதிசய சிறுமி




உடலில் அதிக உரோமங்களை உடைய சிறுமி என்கிற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரி ஆகி இருக்கின்றார் தாய்லாந்து நாட்டின் சுப்ரா சசுப்பான் என்கிற 11 வயதுச் சுட்டிப் பெண்.

இவருக்கு முகம், கைகள், கால்கள், காதுகள் என்று உடல் முழுவதும் உரோமங்கள்.

இவர் தாய்லாந்து மக்களால் குரங்குப் பெண் என்று அழைக்கப்படுகின்றார்.

இவரின் உரோமங்களை நிரந்தரமாக அகற்ற வைத்திய நிபுணர்கள் மேற்கொண்டு இருந்த பகீரத முயற்சிகள் தோல்வியில் முடிந்து விட்டன.


கின்னஸ் சாதனையை தொடர்ந்து மகிழ்ச்சியில் ஆரவாரிக்கின்றார் இச்சிறுமி . முன்பு கேலிகள், நக்கல்கள், ஓரம் கட்டுதல்கள் ஆகியவற்றுக்கு ஆளான இவர் இன்று அந்நாட்டின் கதாநாயகி ஆகி விட்டார்.

சுப்ராவுக்கு ஏற்பட்டுள்ள நோய் உலகில் 50 சிறுமிகளுக்கு உள்ளது என்று மருத்துவ உலகம் கூறுகின்றது.

மனிதர்களைப் போலவே நிமிர்ந்து நிற்கும் விலங்கு




கீரிப்பிள்ளை இனத்தைச் சேர்ந்த இந்த விலங்குகள் ஆபிரிக்க நாடுகளில் பெருமளவு காணப்படுகின்றன.

நீண்டவால், பின்னங்காலை ஊன்றி நிற்றல் என்பன இவற்றின் சிறப்பம்சங்கள்.

முழு அளவில் வளர்ந்த இந்த வகை மிருகம் ஒன்று தனது குட்டியையும் தாவிக் கொண்டு கிட்டத்தட்ட மனிதர்களைப் போலவே நிமிர்ந்து நிற்கும் ஆற்றல் கொண்டது.

தாங்கள் இருக்கும் சூழலில் தங்களுக்கு ஏதும் ஆபத்து உள்ளதா என்பதை அறிந்து கொள்ளத்தான் இவை இவ்வாறு நிற்கின்றன.

ஜெர்மனியைச் சேர்ந்த 48 வயதான தோமஸ் ரெட்டரத் என்பவர் பொட்ஸ்வானா காட்டுப்பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது இந்தக் காட்சிகளைப் படம் பிடித்துள்ளார்.
தொலைக்காட்சியில் இந்த விலங்குகள் பற்றிய விவரணம் ஒன்றைப் பார்த்த பின், அவற்றின் வாழ்வு முறை பற்றி நேரடியாகத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவர் இந்த சுற்றுப் பயணத்தை மேற்கொண்டதாகக் கூறியுள்ளார்.

தென் ஆபிரிக்காவுக்கும், பொட்ஸ்வானாவுக்கும் இடைப்பட்ட காட்டுப் பகுதியில் இவற்றைத் தாராளமாகக் காணலாம்.

இவை 14 வருடங்கள் வரை உயிர் வாழக் கூடியவை.

மரமனிதர்



மரம் மனிதரிடம் பேசும் என்று கதைகளில் கேட்டு இருக்குறோம்,ஆனால் உண்மையில் இந்தோனிசியாவில் “மரமனிதர்” ஒருவர் உள்ளார்.
 
டிடி கொசவா என்பவரே இவ்வாறு அழைக்கப்படுகிறார்,இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் , விசித்திர தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.மரத்தின் கிளைகள் போன்று இவர் கை ,கால்களில் வருடத்திற்கு 5 cm வரை வளர்கிறது.
பல தோல் மருத்துவர்கள் முயன்றும் இந்த நோய்க்கான காரணம் என்ன என்று அறியமுடியவில்லை.


ஆந்திர கிராமத்தில் ஆண்களுக்கு தாலி கட்டும் பெண்கள்!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பூலரேவு கிராமத்தில் ஒரிசாவைச் சேர்ந்த மீனவர்கள் வசித்து வருகிறார்கள்.

இவர்களின் குல வழக் கப்படி திருமணத்தின்போது பெண்களுக்கு ஆண்கள் தாலி கட்டுவதுபோல பெண்களும் ஆண்களுக்கு தாலி கட்டி 3 முடிச்சுப் போடுகிறார்கள்.

திருமணத்தின்போது வரதட்சணை கொடுக்கும் பழக்கம் இல்லை.

மணமக னுக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்கிறார்கள். மேலும் திருமணத்தை தனித்தனியாக நடத்த மாட்டார்கள். 3 ஆண்டுக்கு ஒரு முறை ஊரில் பிரமாண்ட பந்தல் அமைத்து 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.

கடந்த முறை 2008-ம் ஆண்டு நடந்த திருமண விழாவில் 102 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இந்த ஆண்டு 110 ஜோடிகளுக்கு திருமணம் நடக்கிறது. இவ்விழா நாளை இரவு நடக்கிறது. இதனால் பூலரேவு கிராமம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

தென்னைமரம் ஏறும் விசித்திர தேங்காய் நண்டு!

மரம் ஏறும் குணம் கொண்ட தேங்காய் நண்டுகள், இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலில் அதிகம் காணப்படுகிறது.

கணுக்காலிகள் உயிரினத்தை சேர்ந்தவை நண்டுகள். இவற்றில் பல வகை இருந்தாலும், நாம் அறிந்திராத, பார்த்திராத நண்டு வகையை சேர்ந்தது தேங்காய் நண்டு.

10 கால்களுடன் ஓட்டினால் ஆன உடலமைப்பை கொண்ட இவை, இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுகளில் மட்டுமே காணப்படுகிறது.

இவற்றை மக்கள் உணவாக உட்கொள்கின்றனரா என்பது புதிராக உள்ளது. காரணம், இவற்றின் தோற்றம் பூச்சியை போன்று உள்ளதால், இதை நண்டு என்று பலரும் ஏற்பதில்லை.

இவ்வகை நண்டுகள் கடலின் கழிவுகளையும், மரங்களில் வாழும் பூச்சிகளையும் உட்கொள்ளும். தென்னை மரங்களில் பதுங்கி வாழும் இவற்றின் பழக்கமே, பிற நண்டு வகைகளிலிருந்து இவற்றை வேறுபடுத்துகிறது.

இதனால் தான், "தேங்காய் நண்டு' என இவ்வகை நண்டுகளுக்கு பெயர் ஏற்பட்டது. மரம் ஏறுபவர்கள் சில நேரங்களில் இந்த நண்டுகளை பார்த்து பயந்து கீழே விழுவதும் உண்டு. தேங்காய் நண்டுகளை பொறுத்தவரை பல வண்ணங்களில் காட்சியளிக்கும்.

சில இடங்களில் அவற்றின் வண்ணத்தை வைத்து வகை பிரிக்கின்றனர். ஆனால், இவை நிற பாகுபாடின்றி ஒன்றோடு ஒன்று கூடி, இன விருத்தி செய்கின்றன. இவற்றை நண்டு என அறிந்தவர்கள் மட்டுமே, பிரத்யேகமாக தேடி பிடித்து உண்கின்றனர்.

பறக்கும் பாம்புகள்

Paradise Tree Snake இவை தென் கிழக்கு ஆசியாவில் உள்ள பசுமை மாற காடுகளில் காணபடுகின்றன.  பறக்கும் பாம்புகள், பறக்கும் அணில்களை விட அதிக தூரத்திற்கு பறக்க முடியும். இவை சுமாரி மூன்றுஅடிகள் வரை வளரும்.