Saturday, 7 August 2010

vaduvur

vaduvurvaduvur
vaduvur

சிறந்த கணித மேதைகள்

முழுக்கணித வரலாற்றிலும் கணக்கியலர்கள் என்று மூன்றே பேரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அவர்களின் விபரம் சுருக்கமாக இங்கே

கற்பிக்கப்படாத மேதை இராமானுசன்

சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22 1887 - ஏப்ரல் 26 1920 உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை. இவர் தமிழ் நாட்டிலுள்ள ஈரோட்டில் பிறந்தார். இவருடைய தந்தையார் கும்பகோணம் சீனிவாசய்யங்கார் தாயார் ஈரோடு கோமளத்தம்மாள். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் 1914 முதல் 1918 முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.

இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும் (number theory) செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தபபட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

ஆய்லருடனோ அல்லது கார்ல் ஃப்ரெடெரிக் காஸ்டனோ ஏன் எந்தக் கணித வல்லுனருடனோ அவரை ஒப்பிட்டாலும் அவரை 'படிக்காதவர்' என்றே கூறவேண்டும். தன்னால் தானே கற்பித்துக் கொண்ட மேதை அவர். 18 19 வது நூற்றாண்டுகளில் அடுக்கு அடுக்காக உலகை மேவிய கணிதம் யாவும் அவர் வழியில் தட்டுப்படாமலே அவரால் உலகிலுள்ள அத்தனை கணித இயலர்களுக்கும் புதிதாகச் சொல்வதற்கு எவ்வளவோ இருந்தது. இருபதாவது நூற்றாண்டில் ஒரு விண்மீன் போல் அவர் திடீரென்று தோன்றியதும் உலகில் அப்பொழுது மேன்மையானதென்றுப் பெயர் பெற்றிருந்த பல பல்கலைக் கழகங்களில் முறைப்படி அவருடைய ஆராய்ச்சிக் கருத்துக்கள் அரங்கேறியதும் ஒரு சுவையான பரபரப்புக் கணித வரலாறு. குறிப்பாக அது இந்திய தேசத்திற்குச் சிறந்த பெருமையைத் தந்தது.

கார்ல் ஃப்ரெடெரிக் காஸ்


கார்ல் ஃப்ரெடெரிக் காஸ்ஏப்ரல் 30 1777 – பெப்ரவரி 23 1855 கணித உலகத்திலேயே எல்லாக் காலத்திய கணித இயலர்களுக்கும் மேல்படியில் வைக்கப்படும் சிறந்த கணித வல்லுனர். அவர் கணிதம் இயற்பியல் வானியல் புவிப்பரப்பு ஆகிய நான்கு துறைகளிலும் கணிசமாகப் பங்களித்தவர். கணிதத்தில்இ எண் கோட்பாடு பகுவியல் வகையீட்டு வடிவியல் ஆகிய மூன்றிலும் பற்பல விதங்களில் அடிக்கல் நாட்டி அவர் காலத்திலேயே கோபுரம் எழுப்பினவர். கணிப்புகளில் அபார வல்லமை பொருந்தியவராக இருந்ததால் வானியல் புவிப் பரப்பு எண் கோட்பாடு இம்மூன்றிலும் இன்றியமையாத நீண்ட கணிப்புகளைச் செய்து சாதனை புரிந்தவர்.

சிறு வயதிலேயே கணித மேதை

மூன்று வயதிலேயெ காஸ் தன் தந்தை கூலியாட்களுக்கு சம்பளம் தரும்போது அவர் கணிப்பில் தவறு ஒன்றைக் கண்டுபிடித்தவன்.ஏழாவது வயதில் ஒரு நாள் வகுப்பில் நுழைந்ததுமே எல்லா மாணவர்களையும் பேசாமல் இருக்கச் செய்வதற்காக ஆசிரியர் கொடுத்திருந்த ஒரு கணக்கை நொடியில் முடித்து அவரை அசர வைத்தான் சிறுவன் காஸ். 1இலிருந்து 100 வரையுள்ள முழு எண்களின்கூட்டுத் தொகையைக் கணக்கிடும் கணிப்புதான் அது. காஸுக்கு உடனே தோன்றியது: 1 முதல் 100 வரையில் உள்ள எண்களில் 50 ஜோடிகள் இருக்கின்றன;அதாவது {1 100} {2 99} {3 98} முதலியவை; ஒவ்வொன்றின் கூட்டுத்தொகை 101. ஆக 50 ஜோடிகளின் கூட்டுத்தொகை 5050.

[b]லியோனார்டு ஆய்லர்
[/b]
லியோனார்டு ஆய்லர்Leonhard Euler ஏப்ரல் 15 1707 – செப்டம்பர் 18 1783) என்பார் சுவிட்சர்லாந்து நாட்டின் மிகுபுகழ் பெற்ற ஒரு கணிதவியல் மற்றும் அறிவியல் அறிஞர். ஆய்லர் சுவிட்சர்லாந்தில் உள்ள பாசெல் என்னுமிடத்தில் பவுல் ஆய்லர் என்பவருக்கும் மார்கரீட் புரூக்கர் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். இவர் யாவரைக்காட்டிலும் மிக அதிகமான அளவில் கணிதவியல் மற்றும் அறிவியல் ஆய்வுக் கண்டுபிடிப்புகள் செய்த பேரறிஞர். நுண்கணிதம் முதல் கோலக் கோட்பாடு வரையிலான கணிதத்துறையின் பல்வகைப்பட்ட பிரிவுகளில் ஈடுபாடு காட்டினார். இவருடைய கண்டுபிடிப்புகள் 70க்கும் மேலான எண்ணிக்கையில் பெரும் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. அதனிலும் அவருடைய கடைசி 17 ஆண்டுகள் முழுக்கண்ணும் தெரியாமல் அவர் வாயால் சொல்லி மற்றவர்கள் எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகக்கணித வரலாற்றில் கணித இயலாளர்களின் பட்டியலில் ஆய்லருக்கு முதல் ஐந்தாறு இடங்களிலேயே ஓர் இடம் உண்டு. இவர் தற்காலக் கணிதத்துறையில் பயன்படும் பெரும்பாலான கலைச்சொற்களையும் குறியீடுகளையும் அறிமுகப்படுத்தினார். இவர் விசையியல் ஒளியியல் வானியல் ஆகிய துறைகளிலும் பங்களிப்புக்களைச் செய்துள்ளார்.

அரிய தகவல்கள்


ஃ ஒரு அடி எடுத்து வைப்பதற்கு நீங்கள் 200 தசைகளைச் செயல்படுத்துகிறீர்கள்.


ஃ உங்கள் கால் கட்டைவிரல்களில் இரண்டு எலும்புகள் உள்ளன. மற்ற விரல்களில் மூன்று எலும்புகள் உள்ளன.


ஃ உங்கள் வயிற்றில் இருக்கும் அமிலத்தில் ஒரு பிளேடைப் போட்டால் அந்த பிளேடு கரைந்துவிடும்!


ஃ உங்களின் ஒவ்வொரு பாதத்திற்கு அடியிலும் இருக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை சுமார் ஒரு டிரில்லியன்தான்!


ஃ நீங்கள் பிறப்பதற்கு ஆறு மாதங்கள் முன்பே உங்களுக்குப் பல் முளைக்கத் தொடங்கி விட்டது. ஃ உங்கள் கட்டை விரலின் நீளம் உங்கள் மூக்கு நீளத்துக்கு சமமானது.

தகவ‌ல்க‌ள்

ஜப்பான் நாட்டு தட்டெழுத்து இயந்திரத்தில் மொத்தம் 2,863 எழுத்துக்கள் உள்ளன.

கடல் விலங்குகளில் அதிக எடை கொண்டது உப்பு நீர் முதலை. இது 1,880 கிலோ எடை கொண்டது.

ஆஸ்ட்ரேலியாவில் காணப்படும் காணாங் குருவி என்ற பறவையின் குஞ்சு முட்டையில் இருந்து வெளியில் வந்ததும் பறக்கத் தொடங்கிவிடும்.

தொடர்ந்து மூன்று நான்கு ஆண்டுகள் கூட பறக்கும் திறனுடைய பறவை குட்டிடேர்ன்.

குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உள்ளன. ஒன்று உடலையும் மற்றது வாலையும் நிர்வகிக்கிறது.

18ஆ‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் ஐரோ‌ப்பா‌வி‌ல் ப‌ட்டாசு வெடி‌க்கு‌ம் உ‌ரிமை ராணுவ‌த்‌தி‌னரு‌க்கு ம‌‌ட்டுமே இரு‌ந்தது.

‌பிகாலோ எ‌ன்ற ‌மீ‌ன் ‌பி‌ன்புறமாகவு‌ம் ‌நீ‌ந்து‌ம்.

யானை த‌ன் து‌தி‌க்கை‌யி‌ல் 9 ‌லி‌ட்ட‌ர் ‌நீரை உ‌றி‌ஞ்‌சி‌க் கொ‌ள்ளு‌ம்.

ஒரு ‌சில‌ந்‌தி‌யி‌ன் வலை சுமா‌ர் 2000 மை‌ல் ‌நீள‌த்‌தி‌ற்கு வரு‌ம்.

யானைக‌ள் ‌கி‌ட்ட‌ப்பா‌ர்வை உடையவை. தொலைதூர‌த்‌தில‌் இரு‌ப்பது எதுவு‌ம் அத‌ன் க‌ண்களு‌க்கு‌த் தெ‌ரியாது.

உ‌ப்பு‌த் த‌ண்‌ணீரை ந‌ல்ல த‌ண்‌ணீராக மா‌ற்று‌ம் ச‌க்‌தி பெ‌ங்கு‌யி‌ன் பறவை‌க்கு உ‌ண்டு.

சுறா ‌மீ‌னி‌ன் உட‌லி‌ல் உ‌ற்ப‌த்‌தியாகு‌ம் ஒருவகை ரசாயன‌‌த் ‌திரவ‌ம் ம‌னித உட‌லி‌ல் ப‌ட்டா‌ல் உடனே தோ‌ல் வெ‌ந்து‌விடு‌ம்.

தே‌‌னீ‌க்க‌ள் ஒரு ‌கிலோ தேனை உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய 50 ல‌ட்ச‌‌ம் பூ‌க்க‌ளி‌ல் தேனை உ‌றி‌ஞ்சு‌‌கி‌ன்றன. இவை வா‌ழ்நா‌ளி‌ல் பற‌க்கு‌ம் மொ‌த்த தூர‌ம், பூ‌மியை 4 முறை வல‌ம் வ‌ந்தத‌ற்கு சமமானதாகு‌ம்.

ஹெலன் கெல்லர்

தன்னம்பிக்கை இருந்தால், வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை என்று நிரூபித்துக் காட்டியவர் ஹெலன் கெல்லர்.

'வாழ்க்கை என்பது ஒரு விசித்திர விளையாட்டு. அது முடியும்வரை நான் களைக்கமாட்டேன். தைரியமே எந்தத் துன்பத்துக்கும் மருந்து' என்று அவர் நம்பி, தன் குறைபாடுகளிலிருந்து மீள, விதியோடு போராடி வெற்றி பெற்றார். ஊனமுற்றவர்க்கு மட்டுமின்றி, ஐம்புலன்களும் குறைவறப் பெற்றவர்க்கும் அவரது தன்னம்பிக்கை மிகுந்த வாழ்க்கை, வழிகாட்டும் தீபமாகத் திகழ்கிறது.

ஹெலன் கெல்லர் பிறந்தபோது எவ்வித ஊனமும் இல்லாமல்தான் பிறந்தார். இரண்டாண்டுகள் வரை எந்தக் குறையுமில்லாமலே வளர்ந்தார். பிறகு வந்த காய்ச்சல் நோய், தான் போகும்போது அவரிடமிருந்து மூன்று இன்றியமையாத சக்திகளைக் கூடவே கொண்டு சென்றுவிட்டது. பார்க்கிற, கேட்கிற, பேசுகிற சக்திகளில் ஒன்றை இழந்தாலும் மனமுடைந்து விதியை நொந்து மூலையில் முடங்கிப் போவோரே அதிகம். ஆனால் ஹெலன் கெல்லர் மூன்றையுமே இழந்த - பார்வையற்ற, செவிப்புலனற்ற, வாய்பேசாத நபர் என்றாலும், தன் அறிவுக் கூர்மையால், மனோதிடத்தால், அயராத உழைப்பால், ஆழ்ந்த சிந்தனையால் அனைத்துலகும் போற்றும் அற்புதப் பெண்மணியாய் உயர்ந்தார்.

இன்றியமையாத புலன்கள் செயலிழந்தபோது ஹெலன் அழுது ஆர்ப்பரிக்கவில்லை. பிறர் பச்சாதாபப்படுவதைக் கூட விரும்பவில்லை. ஏன், தானேகூட தன் மீது பரிதாபப்பட்டுக் கொள்ளவில்லை. மாறாக, இத்தனை பெரிய குறைகள் அவருக்கு ஒரு பொருட்டாகவேத் தோன்றவில்லை. மனமும் செயலற்றுப் போயிருந்தால்தான் அவரால் ஏதும் செய்திருக்க முடியாது.

எல்லோரையும் போல கல்லூரியில் படித்து, தனக்கென்று தனிச்சலுவை எதையும் கோராமல், கால நீட்டிப்பு கிடைத்தபோதும் அதை நிராகரித்து குறிப்பிட்ட ஆண்டுகளில் அமோகமாக வெற்றி பெற்று, குறையேதுமற்ற பிற மாணவர்களைவிடச் சிறப்பாகத் தேர்வு பெற்றார். அரிய சாதனைகள் நிகழ்த்தி, அரிய வழிகாட்டும் நூல்கள் பல எழுதி, எண்பத்தெட்டு வயது வரை ஆரோக்கியமாய் வாழ்ந்து உலகின் எட்டாவது அதிசயம் என்று பாராட்டப் பெற்றார்.

களிமண் போல இயக்கமற்று இருந்த அவருள் உணர்வைப் பெய்து, ஊக்கம் தந்து உன்னத நிலைக்கு உயர இயக்கியவர் மிஸ் ஸல்லிவன் என்ற ஆசிரியை. அவரே பாதி பார்வையில்லாதவர். நலிந்து மெலிந்த ஆரோக்கியமற்ற உடலுடையவர். இருந்தும் இந்தக் காது கேளாத, வாய் பேசாத, கண் தெரியாத துர்ப்பாக்கியக் குழந்தையைக் கரையேற்ற வேண்டும் என்பதை வாழ்வின் லட்சியமாக ஆக்கிக் கொண்டவர். இந்த லட்சியத்திற்கேற்ப, ஐம்பதாண்டுகள் அவர் ஹெலனை விட்டுப் பிரியாமல், நிழல்போலத் தொடர்ந்தார். அவருக்கு அன்னையாய், தோழியாய், நல்லாசானாய், வழிகாட்டும் தீபமாய், தடம் காட்டும் கைக் கோலாய்த் திகழ்ந்தார். வெறும் வயிற்றுப் பிழைப்புக்காக அவர் அதைச் செய்யவில்லை. அவர் மட்டும் ஹெலனுக்கு ஆசிரியையாகக் கிடைக்காதிருந்திருந்தால் ஹெலன் என்ற அற்புத சாதனையாளரை உலகம் அறிந்திருக்க முடியாது போயிருக்கும்.

அவர் ஹெலனுக்குக் கற்பித்த விதம் யாராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதது. எழுத்தறிவற்றவர்க்கு அறிவு ஒளியூட்ட முயல்கிற இன்றைய ஆசிரியர்க்கு அவர் ஓர் அற்புத வழிகாட்டி. குறையேதுமற்றவர்க்குக் கற்பிப்பது எளிது. ஆனால் ஹெலன் கேட்க, பார்க்கப் பேச இயலாதவர். அவருக்குக் கற்பிக்க எவ்வளவு பொறுமை, சகிப்புத் தன்மை, தன்னம்பிக்கை, விடா முயற்சி வேண்டும்? ஸல்லிவனுக்கு அவை இருந்தன.

வார்த்தை வார்த்தையாக ஹெலனின் கையில் எழுதிக் காட்டித்தான் தன் கற்பித்தலைத் தொடங்கினார்.

ஒரு பொம்மையை ஹெலனிடம் கொடுத்து விளையாடச் சொன்னார். பிறகு அதை வலது கையில் வைத்து, இடது கையில், தன் விரல்களால் (D-O-L-L) என்று எழுதிக் காட்டினார். இதையும் ஒரு விளையாட்டு என்றே ஹெலன் உற்சாகம் கொண்டார். அவருக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடித்துப் போயிற்று. உடனே ஆசிரியையின் கையில் அதேபோல கொஞ்சங்கூடப் பிசிறில்லாமல் முதல் தடவையிலேயே எழுதிக் காட்டினார்.

தினமும் இந்த விளையாட்டு தொடர்ந்தது. புரிந்து கொள்ள முடியாதவற்றை, சூழ்நிலையைப் பயன்படுத்திக் கற்பித்தார். வீட்டுக்கு வெளியே அழைத்துப் போய் செடி, பூ, மரம், காய், பழம், மண், நீரூற்று என்று அறிமுகப்படுத்தினார். இப்படி வார்த்தை வார்த்தையாய் எழுதிக் கற்பிப்பது எவ்வளவு ஆயாசம் தரும் விஷயம்! கேட்கிற நமக்குத்தான் அலுப்பும் சலிப்புமாய்த் தோன்றுமே தவிர, உயிரைக் கொடுத்து போதித்த ஆசிரியைக்கோ, ஊக்கம் குன்றாது கற்றுக்கொண்ட மாணவிக்கோ ஒரு சிறிதும் ஆயாசமில்லை.

எட்டு வயதில் பாஸ்டனில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்து அசாதாரண வளர்ச்சியும் அறிவும் பெற்றார் ஹெலன். பத்து வயதில் பேச வேண்டும் என்ற தீவிர ஆசை ஏற்பட்டது. அதற்கும் பயிற்சி தர ஒரு அற்புதமான ஆசிரியர் அவருக்குக் கிடைத்தார்.

மிஸ் ஸாராபுல்லர் என்ற ஆசிரியர் அந்த அற்புதத்தை நிகழ்த்தினார். 'லிப்ஸ் ரீடிங்' என்கிற உதடுகளை ஸ்பரிசித்து உணர்கிற கலையை அவர் ஹெலனுக்குக் கற்பித்தார். விரல்களால், பேசுபவரது உதடுகளைத் தொட்டறிந்து, அவ்வாறே ஒலிகளைப் பேசிப் பழகினார் ஹெலன். நூறுமுறை, ஆயிரம் முறை வாய்வலிக்கப் பேசினார். ஓரளவு பேசவும் அவரால் முடிந்தது. முதலில், அவள் பேசியது பிறர்க்குப் புரியாது போனாலும், அவரது ஆசிரியர்களான ஸல்லிவன், ஸாரா புல்லர் ஆகியோரால் புரிந்து கொள்ள முடிந்தது. முழுமையான பயிற்சிக்குப்பின் கரகரத்த குரலில் ஓரளவு, கேட்பவர் புரிந்து கொள்கிற மாதிரி ஹெலனால் பேச முடிந்தது. இந்தக் கடுமையான பயிற்சியாலேதான், அவர் உலகெங்கும் சுற்றி, சொற்பொழிவாற்றியும், ஊனமுற்றவர்க்கு ஆதரவு தேடியும் சாதனை செய்ய முடிந்தது. கேட்பது மட்டுமே கிட்டாததாய் இருந்தது. அதனால் பிறர் பேசும்போது உதட்டில் விரல் வைத்து ஒலியை உணர்ந்து புரிந்து கொள்ளப் பயின்று வெற்றியும் பெற்றார்.

இதல்லாம் அபூர்வ மோப்ப சக்தியும், பிறர் நடக்கும்போது எழும் அதிர்வினால் ஆளை இனம் காணும் திறனும் வாய்த்ததால், சக மனிதர்களை ஹெலனால் அறிய முடிந்தது. பிறரது கையைக் குலுக்கும்போதே அவரது குணநலன்களைப் படித்து விடுகிற கூரிய திறனும் உண்டாயிற்று.

'இன்பத்தின் ஒரு கதவு மூடும்போது, மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால் மூடிய கதவையே உற்று நோக்குவதால் நமக்காகத் திறந்திருக்கும் கதவை நாம் பார்ப்பதில்லை' என்று சொன்ன ஹெலன், தனக்காகத் திறக்கப்பட்ட கதவுகளை வெகு எளிதில் அறிந்து கொண்டு, தன் இழப்புகளை அலட்சியப்படுத்தி வாழ்வின் இன்பங்களை உய்த்துணரக் கற்றார். இதன்மூலம் அரிய சாதனைகளை அவரால் எட்ட முடிந்தது.

பிரெய்ல் எழுத்து மூலம் பிரஞ்சும், லத்தீனும் கற்றார். கல்லூரித் தேர்வுகளிலும் பிரெய்ல் மூலமே தடவித்தடவி வினாக்களை அறிந்துகொண்டு விடைகளை, ஸல்லிவனின் கையில் எழுதிக் காட்டி விடைத்தாளில் எழுதச் செய்து வெற்றி பெற்றார். பிரெய்ல் எழுத்தில் வந்த எல்லாப் புத்தகங்களையும் தேடி, வாங்கிப் படித்தார். புத்தகங்கள் தந்த இன்பம் ஹெலனுக்கு மகத்தானதாக இருந்தது.

மனித ஆற்றலின் மீது அவருக்கு திடமான நம்பிக்கை இருந்தது. அதை வலியுறுத்தியும் அதனால் பெறக்கூடிய சாத்தியக்கூறுகளைப் பற்றியும் நூல்கள் எழுதி, கண்ணற்ற பலருக்கு அவர் கண்ணாகப் பயன்பட்டார்.

'நாம் நம்பிக்கை கொள்வோம்' என்றொரு நூல். அதில், வாழ்க்கையில் அவசரமாக ஒவ்வொருவரும் சாதிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கி எழுதினார். 'வாழ்க்கையை ஒரு அவசர நெருக்கடியாக, ஒவ்வொருவரும் உணரவேண்டும். அப்போதுதான் நமது ஆற்றல் எல்லாம் வலிமை பெற்று செயல்களைத் துரிதமாகச் செய்ய முடியும்' என்பது அவர் தன் எழுத்தின்மூலம் பரப்பிய கொள்கை ஆகும்.

உலகத்தின் கவனத்தை எல்லாம் கவர்ந்து புகழின் உச்சநிலையை ஹெலன் அடைந்தபோது உலகப் பயணம் மேற்கொண்டார். அப்பயணத்தின்போது உலகின் மிகச் சிறந்த மேதைகள் பலரை நேருக்கு நேர் சந்தித்து உரையாடி மகிழ்ந்தார். 1955-ல் இந்தியா வந்தபோது நேருஜியைச் சந்தித்துக் கைகுலுக்கி, அவரது உயரிய பண்புகளை உணர்ந்தறிந்தார். தான் சந்தித்த தலைவர்களில் நேருவே தன்னை மிகவும் கவர்ந்ததாகச் சொன்னார்.

உலகெங்கும் பார்வையற்றோர் செவிப்புலனற்றோர் பள்ளிகள் திறக்கவும் அவர்களுக்கு உதவவும் தன் பயணங்களில் பிரசாரம் செய்தார். ஒன்றரை கோடி ரூபாய் நிதியுடன் 'ஹெலன் கெல்லர் நிதி' என்று தொடங்கி, அதிலிருந்து கிடைத்த தொகைகளை மேற்படி பள்ளிகளுக்கு வாரி வழங்கினார். அதற்கு நிதிதிரட்ட நாடகங்கள் நடத்தியும், 'மீட்சி' என்று தன் வாழ்க்கையைப் படமாக எடுத்து அதில் தன் பாத்திரத்தில் தானே நடித்தும் தொண்டு செய்தார். பார்வையற்றவர்க்கென்று தேசிய நூலகம் ஒன்றையும் உருவாக்கி, உலக முழுதும் அதற்கு நூல்கள் வந்து குவிய ஏற்பாடு செய்தார். இப்படித் தன் இறுதிநாள் வரை பொறியிழந்தவர்க்குத் தைரியமூட்டி, அவர்களும் தன்னைப் போல மீட்சி பெற உழைத்தார்.

1968-ல் தனது எண்பத்து எட்டாவது வயதில், இடைவிடாது விதியோடு போரிட்ட இயக்கம் ஓய்ந்துபோனது.

மார்க் ட்வைன் என்ற மிகச் சிறந்த எழுத்தாளர், 'இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த இருவரைத் தேர்வு செய்தால் ஒன்று நெப்போலியன், மற்றொருவர் ஹெலன் கெல்லர் ஆக இருக்கும்' என்று பாராட்டினார்.

''வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை; ஒன்று போனால் இன்னொன்று வரும்! அந்த நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை வெறுமை ஆகாது'' என்று சொன்ன ஹெலன், தானே அப்படி வாழ்ந்து காட்டியவர். நம்பிக்கை வறட்சி நிறைந்து போயிருக்கிற இன்றைய வாழ்க்கையில், தன்னம்பிக்கையையும் துணிவையும் உண்டாக்கி, நிறைவோடும் மகிழ்ச்சியோடும் வாழ, ஹெலன் கெல்லரின் வாழ்க்கை அனைவர்க்கும் வழிகாட்டுவதாக உள்ளது.

தேசியக் கொடி | NATIONAL FLAG

இந்தியத் தேசியக் கொடி நீள்வாக்கில் மூன்று வண்ணங்களை உடையதாக அமைந்தது. மேலே காவி வண்ணமும், இடையில் வெள்ளை வண்ணமும், அடியில் அடர் பச்சை வண்ணமும் சம அளவில் அமைந்துள்ளன. நீளம் மூன்று பங்கு, அகலம் இரண்டு பங்கு என்னும் விகிதத்தில் கொடியின் அளவு அமைந்துள்ளது. வெள்ளைப் பட்டையின் நடுவில் சக்கரம் கடல் நீல வண்ணத்தில் (navy blue) அமைந்து உள்ளது. அசோக மன்னரின் தலை நகரான சாரனாத்தில் அமைந்துள்ள சிங்கத்தில் காணப்படும் மணிச்சட்டத்தில் இச்சக்கரம் காணப்படுகிறது. இச்சக்கரத்தின் விட்டம் ஏரக்குறைய வெள்ளைப் பட்டையின் அகலத்திற்குச் சமமானது. இதில் 24 ஆரங்கள் உள்ளன. இத்தேசியக் கொடியின் வடிவமைப்பு, இந்திய நாடாளுமன்றத்தால் 1947 ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசு அவ்வப்போது வெளியிடும் சட்டத்திற்கு உட்பட்ட ஆணைகளுக்கு அப்பாற்பட்டு அடையாளச் சின்னங்கள் பெயர்கள் ஆகியவற்றிற்கான சட்டப் பகுதிகள் இந்தியத் தேசியக் கொடியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை முடிவுசெய்கின்றன. (முறையில்லாமல் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டவரைவு - 1950 (எண் 12/1950) மற்றும் தேசிய மரியாதைக்குரியவற்றை இழிவு செய்தல் தடைச் செய்யும் சட்டவரைவு - 1971 (எண் 69/1971). தேசியக் கொடிச் சட்டம் 2002, என்பது இதுதொடர்பான வழிகாட்டுதல் பயன்கள் ஆகியவற்றின் எல்லா விதிகள், நடைமுறைகள், மரபுகள், ஆணைகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்கான ஒரு முயற்சியாகும்.

தேசியக் கொடிச் சட்டம் 2002 என்பது 2002ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது. இது மற்றைய தேசிய கொடிச் சட்டங்களையெல்லாம் உள்ளடக்கியதாக இருந்தது. 2002 தேசியக் கொடிச் சட்டப் பிரிவின்படி பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், தனியார் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் முதலிவை ஆகியவை பயன்படுத்துவதில் தடையேதுமில்லை. ஆனால், அடையாளச் சின்னங்கள் மற்றும் பெயர்கள் (முறையின்றி பயன்படுத்துவதைத் தடைசெய்யும்) சட்டம் -1950, தேசிய மதியாதைக்குரியவற்றை இழிவுபடுத்துவதைத் தடைசெய்யும் சட்டம் - 1971, இவை போன்ற வேறு சட்டங்களின் அத்துமீறக்கூடாது.

தயாரிப்பு முறை
இந்தியா குடியரசு நாடாகிய பிறகு, 1951-ல் [இந்திய தரக்கட்டுப்பாட்டுத்துறை]யால் தேசியக்கொடிக்கு முதன்முதலாக அளவுமுறை நிர்ணயிக்கப்பட்டது. இவ்வளவு முறை சர்வதேச அளவுமுறைக்கு ஏற்ப மெட்ரிக் அளவுமுறையாக 1964-ல் மாற்றப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 17, 1968 இல் இவ்வளவு முறை மேம்படுத்தப்பட்டது. இவ்வளவு முறை கொடியின் நீள, அகலம், நிறங்களின் அளவு(அடர்த்தி, பளபளப்பு), துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரத்தைப்பற்றியும் விவரிக்கின்றது. கொடித்தயாரிப்பில் இவ்விகிதாச்சாரங்களை மீறுவது மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டு அபராதம் அல்லது சிறைவாசமோ அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படுகிறது.

கொடித்துணி, [காதி] என்கிற கைத்தறித் துணியில் மட்டுமே இருக்கவேண்டும். பருத்தி, பட்டு மற்றும் ஆட்டு உரோமம்(உல்லன்)இவற்றில் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியாகத்தான் இருக்கவேண்டும். கொடியின் முக்கிய மூவர்ண பாகம் காதி-பண்டிங் என்கிற நெசவாலும், பழுப்பு நிற கம்பத்தில் இணைக்கும் பாகம் காதி-டக் என்கிற நெசவு, ஆகிய இரு வகை கைத்தறித்துணியால் உருவாக்கப்பட்கிறது.

காதி என்பது சாதாரண துணி போல் இரன்டு இழைகள் கொண்டு நெய்யப்படாமல் மூன்று இழைகளால் நெய்யப்படுகிறது. இந்த வகை நெய்தல் மிகவும் அரிதான ஒன்றாகும் இந்தியாவில் பன்னிரெண்டுக்கும் குறைவான நெசவாளர்களே இதை செய்கின்றனர்

கொடியின் அளவுகள்
அளவு மி.மீ
1 6300 × 4200
2 3600 × 2400
3 2700 × 1800
4 1800 × 1200
5 1350 × 900
6 900 × 600
7 450 × 300
8 225 × 150
9 150 × 100

கொடியின் அம்ச பொருள் விளக்கம்
அசோகச் சக்கரம்

இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னர், அப்போதைய பெரும்பான்மை கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ், 1921ஆம் ஆண்டு காவி, பச்சை, வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களைக் கொண்ட கொடியைத் தன் கொடியாக ஏற்றது. காவி நிறம் இந்துத்துவத்தையும், பச்சை நிறம் இஸ்லாமியத்தையும், வெள்ளை நிறம் ஏனைய பிற சமயங்களைக் குறிக்கும் வகையில் அமைந்தன. சில சமயம், வெள்ளை நிறம், அயர்லாந்தின் கொடியைப் போல மூவண்ணக் கொடியில் உள்ள காவி நிறத்தையும் பச்சையும் குறிக்கும் இரு சமயங்களுக்கு நடுநிலை நிறமாக உணரப்பட்டது. 1930ஆம் ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸ், ஒரு சக்கரத்தைக் கொண்ட மூவண்ணக் கொடியைத் தன் கொடியாக ஏற்றது. ஆனால் இக்கொடி எச்சமயத்திற்கும் பாகுபாடற்ற ஒரு கொடியாக பொருள் கொண்டது.

விடுதலைக்குச் சில நாட்களுக்கு முன்னர், ஒரு சிறப்புக் குழுமம், சில மாறுதல்களுக்கு உட்படுத்தப் பட்ட இந்திய தேசிய காங்கிரசின் மூவண்ணக் கொடியை இந்தியர்கள் அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசிய கொடியாக ஏற்றது. முன்னிருந்த சக்கரத்திற்கு பதிலாக, அசோக சக்கரம் இக்கொடியில் பயன்பாட்டுக்கு வந்தது. வெவ்வேறு சமயங்களை உணர்த்துவதாக இருந்த எண்ணத்தை மாற்ற, பின்னாளில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்ற சர்வப்பள்ளி இராதாகிருட்டிணன் அவர்கள் புதிதாக ஏற்கப்பட்ட இந்திய தேசியக் கொடியைப் பொருள் பட இவ்வாறு கூறினார்.

சாதுக்களின் நிறமான காவி நிறம், பொருளை துயிலுற குறிப்பதாகும். நம் தலைவர்கள், பொருள் சேர்ப்பதை துயிலுண்டு, வேலையின் காரணத்திற்கு தம்மை அர்ப்பணிக்க வேண்டும். ஒளியை குறிக்கும் வகையில் நடுவில் உள்ள வெள்ளை நிறம், நம் நன்னடத்தையின் பாதைக்கு வழி காட்ட வேண்டும். பச்சை நிறம், நம் நிலத்திற்கு உள்ள உறவையும் அதிலிருந்து வளரும் செடிகளின் பாரமாக அமைந்த நம் வாழ்வையும் குறிக்கும். அசோக சக்கரமோ, கொடியின் கீழ் வேலையாற்றும் மக்களுக்கு நியாய தருவத்தின் அடிப்படையாக அமையும். மேலும் சக்கரம், சுழலை குறிக்கும் வடிவமாக அமையும். நிற்கதியில் சாவு உண்டு, சுழலில் வாழ்வு உண்டு. இந்திய நாடானது, இனிமேலும் மாற்றங்களை எதிர்க்காமல், முன்னெறிச் செல்ல வேண்டும். இச்சக்கரமானது, அமைதியான மாற்றத்தை குறிக்கும் ஒரு சின்னமாக அமையும்.

பெரும்பான்மைக் கூற்றோ தேசியக் கொடியின் காவி நிறம், தூய்மையையும் கடவுளையும் குறிக்குமாறும், வெள்ளை நிறம் அமைதியையும் உண்மையையும் குறிக்குமாறும், பச்சை நிறம், புணர்ப்பையும், செம்மையையும் குறிக்குமாறு பொருள்படும்.

வரலாறு

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான இந்திய சுதந்திர போராட்டத்தில், மக்களின் போராட்ட ஆளுமையை தகுந்தவாறு ஒருமைப்படுத்த, ஒரு கொடி தேவைப்பட்டது. 1904ஆம் ஆண்டு, சுவாமி விவேகானந்தரைக் குருவாக கொண்ட நிவேதிதா அவர்கள் முதன்முதலாக, ஒரு கொடியை உருவாக்கினார். அதுவே பின்னர் நிவேதிதாவின் கொடி என கூற்று கொண்டது. சிவப்பு வண்ணத்தில, சதுர வடிவில், மஞ்சள் நிற உள்வடிவத்தை கொண்ட பேரிடியை உணர்த்துமாறு, ஒரு 'வஜ்ர' வடிவத்தையும், வெள்ளை தாமரையையும் நடுவில் கொண்டது. மேலும் அது வங்காள மொழியில், வந்தே மாதரம் என்ற வார்த்தைகளை உருக்கொண்டது. சிவப்பு நிறம் சுதந்திரப் போராட்டத்தை குறிக்கும் வகையிலும், மஞ்சள் நிறம் வெற்றியை குறிக்கும் வகையிலும், வெள்ளை நிறம் தூய்மையை குறிக்கும் வகையிலும் அமைந்தன.
கல்கத்தா கொடி

முதல் மூவர்ணக் கொடி, 7 ஆகஸ்ட் 1906ஆம் நாளில், கல்கத்தாவின் பார்ஸி பகன் சதுரத்தில், வங்காளப் பிரிவினை எதிர்ப்பு போராட்டத்தின் போது, சிந்திர பிரசாத் போஸ் என்பவரால் கொடியேற்றப் பட்டது. அக்கொடி பிற்காலத்தில், கல்கத்தாக் கொடி என வழங்கப் பட்டது. கொடியில், நீள் வடிவில், ஆரஞ்சு, மஞ்சள், பச்சை என மூன்று பாகங்கள் இருந்தது. முதல் பாகத்தில், எட்டு, பாதி விரிந்த தாமரை பூக்களும், அடி பாகத்தில், சூரிய வடிவமும், சந்திர வடிவமும் அமைந்தன. நடு பாகத்தில், தேவனகிரி எழுத்துருவில், வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் உருக் கொண்டன.
பைக்கஜி காமா அம்மையார் ஏற்றிய கொடி, 1907

பின்னர், 22 ஆகஸ்ட் 1907ஆம் நாளில், பைக்கஜி காமா என்ற அம்மையார், ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் என்ற நகரில், மற்றுமொரு மூவர்ணக் கொடியை ஏற்றினார். அந்த கொடியில், பச்சை நிறம் மேலிலும், இளஞ்சிவப்பு நடுவிலும், சிவப்பு அடியிலும் கொண்டது. பச்சை நிறம் இசுலாமியத்தை குறிப்பதாகவும், இளஞ்சிவப்பு நிறம் இந்துத்துவத்தையும் புத்த மதத்தையும் குறிப்பதாகவும் அமைந்தன. அக்கொடி, பச்சை பாகத்தில், ஆங்கிலேயரின் கீழ் இருந்த எட்டு மாகாணங்களை குறிக்கும் வகையில், வரிசையாக எட்டு தாமரைகளை கொண்டது. நடுபாகத்தில், தேவனகிரி எழுத்துருவில், வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் எழுதப் பட்டது. அடி பாகத்தின் கொடிக் கம்பத்திற்கு அருகில் உள்ள மூலையில், ஒரு பிறைநிலாவையும், இன்னொரு மூலையில் சூரியனையும் கொண்டது. இக்கொடியை, பக்கஜி காமா அம்மையார், வீர சவார்கர், சியாம்ஜி கிருட்டின வர்மா ஆகியோர் சேர்ந்து வடிவமைத்தனர். முதலாம் உலகப் போர் தொடங்கிய பின்னர், அது போராட்ட கலகர்களின், பெர்லின் குழுமத்திற்கு பிறகு, பெர்லின் குழுமக் கொடி என பெயர் கொண்டது. முதல் உலகப் போரின் போது, மெசப்படோமியாவிலும், அமேரிக்காவின் காதர் கட்சியிலும், இக்கொடி, இந்தியாவின் சின்னமாக, நிலை கொண்டது.
1917ல் சுயாட்சி போராட்டத்தில் பயன்படுத்தப் பட்ட கொடி.

பால கங்காதர திலகர் மற்றும் அன்னி பெசண்ட் அம்மையார் சேர்ந்து தொடங்கிய சுயாட்சிப் போராட்டத்தில் ஐந்து சிவப்பு நிற நீள்வடிவங்களும், நான்கு பச்சை நிற நேர் கோல் நீள்வடிவங்களும் கொண்ட மற்றுமொரு கொடி பயன்பாட்டுக்கு வந்தது. மேல் இடது மூலையில், ஆங்கிலேய பேரரசிடம் இருந்து சுயாட்சி பெறுவதை குறிக்கும் வகையில், யூனியன் ஜாக் வடிவம் அமைந்தது. வெள்ளை நிறத்தில் பிறைநிலா வடிவமும், நட்சத்திர வடிவமும், மேல் வலது பாகத்தில் அமைந்தன. மேலும் ஏழு வெள்ளை நட்சத்திரங்கள், இந்துக்கள் புனிதமாக கருதும் சப்தரிஷி நட்சத்திர குழு அமைப்பு வடிவில் உருவாக்கப்பட்டது. இக்கொடி, அநேகமாக யூனியன் ஜாக் சின்னத்தை கொண்ட காரணத்தினால் பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெறவில்லை.
1921ஆம் ஆண்டு தற்காலிகமாக ஏற்கப்பட்ட கொடி.

ஒரு வருடம் கழித்து, 1916ல், மச்சிலிப்பட்டினத்தின் (இன்றைய ஆந்திர பிரதேசம்) பிங்கலி வெங்கய்யா அவர்கள், இந்தியர்கள் எல்லோருக்கும் பொதுவானதொரு கொடியை வடிவமைக்க முயன்றார். அவரது தளராத முயற்சிகளை கண்ட உமர் சொபானியும் எஸ்.பி.பொம்மஜியும், இந்திய தேசிய கொடி நெறி அமைப்பை தொடங்கினர். வெங்கய்யா, மகாத்மா காந்தியிடம் கொடிக்கான சம்மதத்தை கோரிய போது, மகாத்மா, இந்தியாவின் எழுச்சியையும் தாழ்ச்சியின் விடுதலையையும் குறிக்கும் வகையில் சக்கரத்தை சேர்க்குமாறு வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து, பிங்கலி வெங்கய்யா அவர்கள், சக்கரத்தை ஆதாரமாகக் கொண்டு சிவப்பு, பச்சை ஆகிய இரு வர்ணங்களை கொண்ட ஒரு கொடியை உருவாக்கினார்.

அக்கொடி, இந்திய மதங்கள் அனைத்தையும் நிலையுறுத்தவில்லை என மகாத்மா காந்தி கருதவே, புதிய கொடி ஒன்று வடிவமைக்கப் பட்டது. இக்கொடியில் வெள்ளை நிறம் மேலேயும், பச்சை நிறம் நடுவிலும், சிவப்பு நிறம் கீழேயும், வெவ்வேறு மதங்களை சமமாக குறிக்குமாறு அமைந்தன. அதில் சக்கரமோ எல்லா வர்ணங்களிலும் இடம் பெற்றன. இந்த கொடி, ஆங்கிலேய பேரரசிடம் இருந்து விடுதலைக்காக போராடிய அயர்லாந்தின் கொடிக்கு சமமாக உள்நோக்கத்தை கொண்டவாறு அனுசரிக்கப்பட்டது. முதன்முதலாக அகமதாபாத்தில் நடந்த காங்கிரசு கட்சி கூட்டத்தில் ஏற்றப்பட்ட இக்கொடி, இந்திய சுதந்திர போராட்டத்தின் மையமாக பெரிதும் பயன்படுத்தப் பட்டது.

ஆயினும் பெரும்பாலானோர், வெவ்வேறு மதங்களை உணர்த்துமாறு கொண்ட பொருளை விரும்பவில்லை. 1924ஆம் ஆண்டு கொல்கத்தாவில் குழுமிய அனைத்திந்திய சமசுகிருத குழுமம், இந்துக்களின் கடவுளான விஷ்ணுவின் கதத்தை உணர்த்தும் வகையில் காவி நிறத்தை கொடியில் சேர்க்குமாறு வலியுறுத்தியது. பின்னர், அதே வருடம், மற்ற மதத்தினரும் தத்தம் மதத்தை குறிக்க வெவ்வேறு மாற்றங்களை வலியுறுத்தினர்.
1931ல் வலியுறுத்தப்பட்ட அரக்கு நிற சக்கரத்தை கொண்ட காவிக் கொடி.

இதனை தொடர்ந்து, 2 ஏப்ரல் 1931ல் காங்கிரசு ஆட்சிக் குழு, அமைத்த ஏழு நபர்கள் அடங்கிய ஒரு கொடிக் குழு, மூன்று வர்ணங்களும் மத உணர்வுகளை தூண்டும் வகையில் அமைந்துள்ளன என்றும், அதற்கு பதிலாக, ஒரே வர்ணமாக, காவி நிறமும் அதில் சக்கரமும் இருக்குமாறு மாற்றியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால் இந்திய தேசிய காங்கிரசு அதனை ஏற்கவில்லை.
1931ஆம் ஆண்டு ஏற்கப்பட்டு, இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப் பட்ட இந்தியக் கொடி.

பின்னர், 1931 கராச்சியில் கூடிய காங்கிரசு குழு, பிங்கலி வெங்கய்யா வடிவமைத்த, காவி, வெள்ளை, பச்சை வர்ணங்களுடன் நடுவில் சக்கரத்தை கொண்ட கொடியை ஏற்றது. அதிலமைந்த வர்ணங்கள் பின்வருமாறு, காவி நிறம் தைரியத்திற்கெனவும், வெள்ளை நிறம் சத்தியம் மற்றும் அமைதிக்கெனவும், பச்சை நிறம் நம்பிக்கை மற்றும் செம்மைக்கெனவும் பொருளுணரப் பட்டன.
இரண்டாம் உலகப் போரின் போது, சுபாஸ் சந்திர போஸின் இந்திய தேசிய படை பயன்படுத்திய கொடி.

அதே சமயம், ஆசாத் ஹிந்த் என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட, சக்கரத்திற்கு பதிலாக தாவும் புலியை நடுவில் கொண்ட ஒரு கொடியை இந்திய தேசிய படை பயன்படுத்தியது. சக்கரத்திற்கு பதிலாக அமைந்த புலியின் உருவம், மகாத்மா காந்தியின் அகிம்சை வழிகளுக்கு நேர் எதிர் மாறான சுபாசு சந்திரபோசின் வழிகளை உணர்த்துவதாக அமைந்தது. இந்த கொடி தேசிய கொடியா இல்லாவிடிலும் முதல் முதலாக மணிப்பூரில், சுபாசு சந்திர போசு அவர்களால் கொடியேற்றப்பட்டது.

1947ல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், ராஜேந்திர பிரசாத் அவர்களை தலைவராகவும், மௌலானா அபுல் கலாம் ஆசாத், கே. எம். பனிக்கர், சரோஜினி நாயுடு, சி. ராஜகோபாலச்சாரி, கே. எம். முன்ஷி, மற்றும் பி. ஆர். அம்பேத்கர் ஆகியோரையும் குழுநபர்களாக கொண்ட அமைப்பு, தேசியக் கொடியாக ஒரு கொடியை நியமிக்க விவாதித்தது. 23 ஜூன் 1947 அன்று தொடங்கிய அவ்விவாதம் மூன்று வாரங்களுக்கு பிறகு, 14 ஜூலை 1947 அன்று முடிவடைந்தது. அதன் காரணமாக, அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் கொடியை சில மாற்றங்களூடன் இந்திய தேசிய கொடியாக ஏற்றது. மேலும் இந்திய தேசியக் கொடிக்கு எவ்வித மத சாயலும் இருக்கக் கூடாதென்று முடிவெடுக்கப்பட்டது. முன் இருந்த சக்கரத்திற்கு பதில், சாரனாத்தின் சாஞ்சி ஸ்தூபியில் உள்ள தர்ம சக்கரம் ஏற்கப் பட்டது. இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப் பட்ட இந்திய தேசியக் கொடி முதல் முதலாக சுதந்திர இந்தியாவில் 15 ஆகஸ்ட் 1947ஆம் நாள் கொடியேற்றப் பட்டது.

Friday, 6 August 2010

Details of Post Office VADUVUR, TIRUVARUR

Post Office: VADUVUR
Post Office Type: SUB OFFICE
District: TIRUVARUR
State: TAMIL NADU
Pin Code: 614019 (Click to see all Post Offices with same Pin Code)
Contact Address: Postmaster, Post Office VADUVUR (SUB OFFICE), TIRUVARUR, TAMIL NADU (TN), India (IN), Pin Code:- 614019

Other 12 Post Offices with Same PIN Code 614019
District THANJAVUR
KATTUR, (TN) KULAMANGALAM, (TN)
MURTHIAMBALPURAM, (TN) MUVARKOTTAI, TIRUVARUR, (TN)
NEIVASAL, (TN) RAGAVAMBALPURAM, (TN)
SADAYARKOIL, TIRUVARUR, (TN) TALAYAMANGALAM(VDR), (TN)
VADUVUR THENPATHI, TIRUVARUR, (TN) VADUVUR VADAPATHI, TIRUVARUR, (TN)
VALAMARKOTTAI, (TN) VANDAYARIRUPPU, (TN)

Other 2 Post Offices with Similar Name
VADUVUR THENPATHI,
TIRUVARUR (TN), 614019 VADUVUR VADAPATHI,
TIRUVARUR (TN), 614019

வடுவூர் & பெயர்காரணம்

இந்த ஊர் நிர்வாக வசதிக்காக தற்போது 3 ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்தும் சேர்த்து தன்னரசு நாடு என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. இந்த ஊருக்கு வடுவூர் என்ற பெயர்க்காரணமே சுவாரஸ்யமானது. சேரர் மற்றும் தொண்டை மண்டலத்தார் என பெரும் படையை எதிர்த்து கரிகால சோழன் வெற்றி கண்ட வெண்ணிப்பறந்தலைப் (தற்போது கோவில்வெண்ணி) தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது. இந்த போரில் வெற்றி கண்ட கரிகால சோழனது வீரர்கள் இந்த ஊரில் தங்கி இளைப்பாறி, விழுப்புண் ஆற்றிச் சென்றனர். வடுக்களைப் பெற்ற போர்வீரர்கள் தங்கி சென்ற ஊர் என்ற பொருளில் வடு + ஊர் = வடுவூர், அழகுமிக்க, இளமையான ஊர் எனும் பொருளில் வடிவு +ஊர் என அழைக்கப்படுகிறது. அந்த காலத்தில் மகிழ மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் மகிழங்காடு, வெகுளாரண்யம் என்றும், பாஸ்கர ஷேத்திரம், தக்ஷிண அயோத்தி, ஏகாதசி கிராமம் என பல்வேறு பெயர்களும் உண்டு என்கிறார்கள் இந்த ஊர் பற்றி ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள்.
-ஜோ.மகேஷ் மகேஷ்வரன்

Thursday, 5 August 2010

வடுவூர் பறவைகள் காப்பகம்

வடுவூர் பறவைகள் காப்பகம்

வடுவூர் பறவைகள் காப்பகம் இது தஞ்சாவூர் மாவட்டத்தில் மன்னார்குடிக்கும் தஞ்சாவூருக்குமான நெடுஞ்சாலையில் தஞ்சாவூரிலிருந்து 25கிமீ தூரத்தில் உள்ளது.
[தொகு] தண்ணீர் சேமிக்கப்பட்டு பயன் படுத்தப்படுகிறது

1999ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தப் பறவைகள் காப்பகம் உருவாக்கப்பட்டது, மேட்டூர் அணையிலிருந்து சாகுபடிக்கென திறந்து விடப்படும் தண்ணீர் இங்கு சேமிக்கப்பட்டு பயன் படுத்தப்படுகிறது, வட கிழக்கு பருவமழையின் போது இயல்பாக பெறப்படும் மழைநீரும் சேர்ந்து இங்கு பறவைகள் இறங்கி ஏற வழிவகை செய்து விடுகிறது.
[தொகு] நீர்ப் பறவைகள் வந்து செல்கின்றன

40க்கும் மேற்பட்ட நீர்ப் பறவைகள் வந்து செல்கின்றன. நவம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 200,000 பறவைகள் வந்துள்ளன. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் இங்கு செல்வதற்கு ஏற்ற காலங்கள். அப்போது அதிகளவான பறவைகள் இங்கு வரும்.

வடுவூர் பறவைகள் சரணாலயம் பற்றிய ஒரு வலைப்பதிவு

http://thekkikattan.blogspot.com/2009/11/vadoovur-birds-sanctuary.html

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்

ஜாதிகள் இருந்தாக வேண்டும் என்று எண்ணுபவர்கள் எவ்வழி உலகம் செல்கிறது என்பதை அறியாத ஏமாளிகள். காலத்தின் தாக்குதலைக் கயவரின் தாக்குதல் என்றும் பகுத்தறிவின் வேகத்தைப் பாப காரியம் என்றும் தவறாகக் கருதிடும் பக்குவமற்றவர்கள்.
*

அறிவுப் பண்ணைக்குப் பணியாற்ற முன் வருபவர்களை நாடு வரவேற்பதில்லை. நையாண்டி செய்கிறது. மதிப்பளிப்பதில்லை. தொல்லை தருகிறது. எனினும் அந்த ஒரு சிலரால்தான் நாடு முன்னேறுகிறது.
*

புரட்சி என்பது வாலிபத்தின் கூறு; பகுத்தறிவாளர் ஆயுதம். பழைமை விரும்பிகள் - புரட்டர்கள் - எதேச்சதிகாரிகள் ஆகியோருக்கு நஞ்சு. மக்களின் மகத்தான சக்தி. அதைப் பொசுக்கிவிட எவராலும் முடியாது.
*

ஏழைகளை வஞ்சிக்க ஓர் ஏற்பாடு. அதற்குப் பெயர் மதம். உழைக்கிறவனை ஒடுக்குவதற்கு ஓர் இயந்திரம் - அதற்குப் பெயர் ஜாதி. பகற் கொள்ளை அடிப்பதற்கு ஒரு திட்டம் - அதற்குப் பெயர் பூசை, சடங்கு, தட்சணை.
*

சமத்துவம், சமதர்மம் போன்ற இலட்சியங்களைப் பேசுவது சுலபம். சாதிப்பது கடினம். அந்த இலட்சியத்தின் சாயலை - முழுப்பயனைக்கூட அல்ல - சாயலைப் பெறுவதற்கே பல நாடுகளில் பயங்கரப் புரட்சிகள் நடந்திருக்கின்றன. நினைவிருக்கட்டும்.
*

மனித சமுதாயத்தின் அல்லலை, விஞ்ஞானம் எந்த அளவு குறைத்திருக்கிறது என்பது பற்றி எண்ணினால் மக்கள் வீழ்ந்து வணங்கவும் செய்வார்கள் விஞ்ஞானத்தின் முன்பு. மனித சமுதாயத்தின் வேதனையை விஞ்ஞானம் அந்த அளவுக்குக் குறைத்திருக்கிறது.
*

ஒருவரை ஒருவர் கண்டதும் முகமலர்ச்சி சிரமமின்றி ஏற்படவேண்டும். பயன் கருதி அல்ல - பாசாங்குக்கு அல்ல - அர்த்தமற்று அல்ல - கண்டதும் களிப்பு - நம்மைப்போல ஒருவன் என்ற நினைப்பிலிருந்து களிப்பு மலர வேண்டும். அந்த அகமலர்ச்சிக்குப் பெயர்தான் தோழமை.
*

ஆலமரத்துப் பிள்ளையாருக்குக் கர்ப்பூரம் வாங்கிக் கொளுத்துவதைவிட ஆரஞ்சுப் பழத்தையே கண்டிராத உன் அருமைக் குழந்தைக்கு ஓர் ஆரஞ்சு வாங்கிக் கொடுப்பது மேல் என்று கூறுகிறது திராவிட இயக்கம். கூறக்கூடாதா? கூறுவது குற்றமா?
*

ஜாதி முறையை நாம் எதிர்க்கிறோம் என்றால் பொருளாதார பேத நிலையை உண்டாக்கியதும் நிலைத்திருக்கச் செய்வதுமான கொடிய ஏற்பாட்டைத் தகர்க்கிறோம் என்று பொருள். அதாவது சமதர்மத்திற்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறோம் என்று அர்த்தம்.

தத்துவ ஞானி சாக்ரடீஸ்

கிரேக்க நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ்.(கிமு 470 – கிமு 399).கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகிறார். இவர் மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவர். இவருடைய சீடர் பிளேட்டோவும் புகழ்பெற்ற தத்துவஞானி ஆவார்.சாக்ரட்டீசிய முறை(Socratic method) அல்லது எலன்க்கோசு (elenchos) முறை என அறியப்படுகின்ற இவருடைய மெய்யியல் ஆராய்வு முறையே, மேற்கத்திய சிந்தனைகளுக்கு இவரது முக்கியமான பங்களிப்பாகும். இதற்காக, சாக்கிரட்டீசு, அறநூல் அல்லது நல்லொழுக்கத் தத்துவத்தினதும் அதனால் பொதுப்படையான தத்துவஞானத்தினதும் தந்தையும், ஊற்றுக்கண்ணுமாகக் கருதப்பட்டு வருகிறார்.

சிறிது காலம் இராணுவத்தில் பணியாற்றிய சாக்ரடீஸ் அந்தப் பணியில் ஈடுபாடு இல்லாததால் வேலையை விட்டு வெளியேறினார்.சாக்ரடீஸின் எழுத்துக்களும், சொற்பொழிவுகளும் மக்களைச் சிந்திக்க வைத்தது, செயல்களில் ஈடுபடவும் அவர்களைத் தூண்டியது.

சிறுவனாக இருந்த போதே சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இந்த வழக்கம் அவர் வளர வளர வளர்ந்தது.எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே அவருடைய வளர்ச்சிக்குக் காரணமாயின.

பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரங்களை சாக்ரடீஸ் செலவிட்டார்.ஆனால் மற்றவர்கள் சக்ரடீஸீடம் கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாகப் பதில் சொல்வதை அவர் தவிர்த்தார்.ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாக்க் கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலைக் கேட்டு, அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்களே காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ்.பிரச்சினையின் காரணத்தைத் தமது கேள்வியின் மூலம் உணரச்செய்த சாக்ரடீஸ், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் கேள்விகளைக் கேட்டார்.இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் தெளிவு பெற்றனர்; பிரச்சினையைப் புரிந்தனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். அதைப் போக்குவதற்குச் செய்ய வேண்டியவற்றையும் அவர்கள் உணர்ந்தனர்.

இதனால், ஏதென்ஸ் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கெல்லாம் சாக்ரடீஸிடம் தெளிவு கிடைக்கும் என்று நம்பினர். அவர்களின் நம்பிக்கையும் வீண் போகவில்லை.

சாக்ரடீஸின் இந்தக் கேள்வி கேட்கும் முறை ஏதென்ஸ் நகர இளைஞர்களைக் கவர்ந்தது. இளைஞர்கள் மத்தியில் சாக்ரடீஸ் எப்போதும் காட்சி தந்தார். சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருப்பது சிலருக்கு எரிச்சலைத் தந்தது.

அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுத்தனர். இதற்கு சாக்ரடீஸ் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணமாகும்.இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தனக்குப் பெருமை சேர்ப்பதற்காக சாக்ரடீஸ் தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காகவும், அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் சாக்ரடீஸ் மீது அனிடஸூம், லைகோனும், மெலிட்டஸூம் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர்.நீதிபதிகள் சாக்ரடீஸ் குற்றவாளிதான் என்று தீர்ப்புக்கூறி அவருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை சாக்ரடீஸையே அறிவிக்கும்படி அறிவித்தனர்.தாம் எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை என்றும்; தம் தாய் திருநாட்டிற்குத் தமது செயல்களின் மூலம் நன்மையே செய்ததாகவும், அதன் பொருட்டு இந்த நீதிமன்றம் நமக்குத் தண்டணைக்குப் பதிலாக பாராட்டும், பரிசும்தான் கொடுத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார் சாக்ரடீஸ்.ஆனால் தண்டனை வழங்குவதாக இந்த நீதி மன்றம் முடிவு செய்தால், அது அபராதத் தொகையாக இருக்க வேண்டும் என்றும்; அந்த அபராதத் தொகையைத் தமது நண்பர்கள் அரசுக்குச் செலுத்த தயாராக இருப்பதாகவும் நீதி மன்றத்தில் சாக்ரடீஸ் முழங்கினார்.

சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நீதிபதிகள் எதிர்பார்த்தனர்.. அதற்கு மாறாக அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலை ஊட்டியது. அதனால் நீதிபதிகள் சாக்ரடீஸூக்கு மரண தண்டனையை அறிவித்தனர்.

நீதிமன்ற விசாரணையின் போது சாக்ரடீஸ் செய்த மூன்று சொற்பொழிவுகள் அவருடைய அறிவு விசாலத்தையும் அஞ்சாமையையும், வெளிப்படுத்துவதாக அமைந்தது.

சாக்ரடீஸ் சிறையில் இருந்தபோது அவருடைய நண்பர் கிரிட்டோ என்பவர் சாக்ரடீஸைச் சந்தித்து, சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்கு ஆலோசனை கூறினார். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைத் தாம் செய்வதாகவும் கூறினார். அதற்கு,“நான் தப்பிச் செல்வது பொது மக்களின் கருத்துகளுக்கும், என் மீது தொடுக்கப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளுக்கும் நான் பணிந்து விட்டதாக ஆகிவிடும். அத்துடன் என் வாழ்நாளில் நான் கொண்டிருந்த கொள்களைகளுக்கும் எதிராக அமைந்ததாகும்.

நீதிமன்ற விசாரணையின்போது, நான் சாவைக்கூட சந்திக்க தயார்; மன்னிப்புக் கேட்க முடியாது , என்று கூறி சாக்ரடீஸ் தப்பிச்செல்ல மறுத்ததுடன், சாவை எதிர்கொள்ள மகிழ்வுடன் இருந்தார்.சாக்ரடீஸூக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நாள் வந்தது…

அவருடைய கால் விலங்குகள் அகற்றப்பட்டு, விஷம் கொடுக்க வேண்டும் என்பது நீதிபதிகளின் தீர்ப்பு.இறுதியாக சாக்ரடீஸைக் காண்பதற்கு அவருடைய நண்பர்களும், மனைவி தம் குழந்தைகளுடனும் வந்திருந்தனர்.சாக்ரடீஸின் இறுதி முடிவைக் காணச் சகிக்காது அவருடைய மனைவி அழுது துடித்தாள்.மனைவியையும், குழந்தையையும் வீட்டிற்கு அனுப்பி வைத்த பின், சாக்ரடீஸின் விலங்குகள் அகற்றப்பட்டன. மெதுவாகத் தம் கால்களை சாகரடீஸ் பிணைந்து கொண்டார்.அப்போது தாம் நண்பர்களிடம் “உடல்தான் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய சிறைச்சாலை அந்த உடலிருந்து நமது உயிர் தாமாக தப்பிவிட முடியாது. உடம்பு என்ற சிறையிலிருந்து உயிர் விடுதலையாவது பேரானந்தம்!” என்று தத்துவார்த்தமாக சாக்ரடீஸ் பேசினார்.

“மரணத்தைச் சந்திக்கும் வேளையில் அதிகமாகப் பேசக் கூடாது” என்று விஷம் கொடுக்கும் பொறுப்பில் இருந்த அதிகாரி சாக்ரடீஸிடம் சொன்னான். ஆனால் அவர் அது பற்றிக் கவலை கொள்ளாமல் நகைச்சுவையுடன் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

இறுதியாக சாக்ரடீஸ் குளித்து முடித்தார்.

“மரணத்திகுப் பின் உங்களை எப்படி சவ அடக்கம் செய்ய வேண்டும்?” என்று நண்பர்கள் சாக்ரடீஸிடம் கேட்டார்கள்.

அதற்கு, “நீங்கள் எப்படிச் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே!” என்றார் சாக்ரடீஸ்.

சிறை அதிகாரி ஒரு கோப்பை விஷத்தை சாக்ரடீஸீடம் நீட்டினார்.( hemlock poisoning.)

நண்பர்கள் எல்லாம் கண்ணீர் சிந்தியபடி சாக்ரடீஸையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ், “இனி நான் செய்ய வேண்டியது என்ன?” என்றார்.

அதற்கு, “கோப்பையில் உள்ள விஷத்தை முழுவதுமாக நீங்கள் குடிக்க வேண்டும்… குடித்து முடித்ததும் சிறைக்குள்ளேயே நீங்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும்… உங்கள் கால்கள் செயல் இழக்கும்போது படுத்துக்கொள்ள வேண்டும்” என்றான் சிறைப்பணியாளன் கவலை கொள்ளாது, கண் கலங்காமல், சிரித்த முகத்துடன் ஒரு கோப்பை விஷத்தையும் குடித்து முடித்தார் சாக்ரடீஸ். அதைக் கண்ட நண்பர்கள் அனைவரும் அழுது தீர்த்தனர்.விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ் “பெண் மக்களைப் போன்று நீங்களும் ஏன் கண்ணீர் சிந்துகிறீர்கள்?” என்று சிரித்தபடி கேட்டுவிட்டு,சாக்ரடீஸ் நடக்கத் தொடங்கினார்.சிறிது நேரம் நடந்து முடிந்ததும், அவர் மல்லாந்து படுத்துக் கொண்டார்.விஷம் கொடுத்த பணியாளன், சாக்ரடீஸின் கால்களை அமுக்கியபடி, “நான் உங்களை கால்களை அமுக்குவது உங்களுக்குத் தெரிகிறதா?” என்றான்.

“இல்லை” என்றார் சாக்ரடீஸ்.சிறிது நேரத்தில் அவர் விழிகள் மூடின! தம்மை ‘அறிஞன்’ என்று அழைப்பதை வெறுத்த சாக்ரடீஸ் என்ற அந்தப் பேரறிஞனின் ஆயுள் முடிந்தது.அவருடைய தத்துவங்களையும், போதனைகளையும் அவருடைய சீடரான பிளாட்டோ எழுதி வைத்தார். அதுதான இன்றும் சாகரடீஸை மக்கள் நெஞ்சில் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது!

ரூசோ (ஜான் ஜாக் ரூசோ - Jean-Jacques Rousseau)

“சுதந்திரம்”, “சமத்துவம்”, “சகோதரத்துவம்” என்ற தாரக மந்திரங்களை ஒரு எழுத்தாளன்தான் தன் படைப்புகளின் வழியாக உலக மக்களுக்கு விட்டுச்சென்ற
பிரெஞ்சு மெய்யியலாளரும் அறிவொளிக் கோட்பாட்டாளரும் ஆவார்
இந்தச் சிந்தனை மக்களை எழுச்சி கொள்ளச் செய்ததுடன், ஒரு புரட்சிக்கும் வித்திட்டது. அதுதான் பிரெஞ்சுப் புரட்சி!

வாழும்போது வறுமையோடு போராடினான்; எழுத்துக்களால் இறுதிக் காலத்தில் ஓரளவு பேசப்பட்டான்; மறைந்த போது சராசரி மனிதனாகக் கருதப்பட்டு, சாதாரண இடுகாட்டில் புதைக்கப்பட்டான்.

ஆனால் அவன் மறைந்து பதினாறு ஆண்டுகள் முடிந்த பின், அந்த எழுத்தாளனுக்கு ஒரு புதிய அங்கீகாரம் கிடைத்தது. புதைக்கப்பட்ட அவன் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, மீண்டும் அலங்கரிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிவகுக்க, பிரபுக்களை மட்டுமே புதைக்கப்படும் மயானத்தில் அவன் சடலம் புதைக்கப்பட்டது. உலக எழுத்தாளர்களில் இவனுக்கு மட்டுமே இந்தச் சிறப்புக் கிடைத்தது.

அவன் பெயர் ஜான் ஜாக் ரூசோ.

பிறப்பு ஜூன் 28 1712 (ஜெனீவா, சுவிட்சர்லாந்து)
இறப்பு ஜூலை 2 1778 (அகவை 66) (எர்மனன்வில்லீ, France)

ரூசோவின் தந்தை ஐசக் ரூசோ, தாய சூசான் பெர்னாட்.

இவர் பிறந்து ஒன்பதாவது நாளிலேயே இவரது தாயார் பிரசவக் கோளாறினால் இறந்துவிட்டார். கைக்கடிகார உற்பத்தியாளரான இவரது தந்தை: இங்கிலாந்து படைத்தளபதி ஒருவருக்கும், ரூஸோவின் தந்தைக்கும் தகராறு ஏற்பட்டது. அதனால் சிறை செல்ல வேண்டியதிருக்கும் என்பதை அறிந்த ரூஸோவின் தந்தை 1722 இல் நாட்டை விட்டு ஓடினார்.

ஐன்ஸ்டின்

பிறப்பு - 14-03- 1879

இறப்பு - 18-04- 1955

ஐன்ஸ்டைன் ஜெர்மனியில், வுர்ட்டெம்பர்க்(Württemberg) இலுள்ள உல்ம்( Ulm) என்னுமிடத்தில், 1879 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையின பெயர் ஹேர்மன் ஐன்ஸ்டீன் (Hermann Einstein), தாயாரின் பெயர் போலின் கோச் (Pauline Koch).

இவர் ஒரு கத்தோலிக்க ஆரம்பப் பாடசாலையில் சேர்க்கப்பட்டார்.

அத்துடன் தாயாரின் வற்புறுத்தல் காரணமாக இளமையில் வயலினும் கற்றுவந்தார். இவர் ஐந்து வயதாக இருந்தபோது, இவரது தந்தையார் இவருக்கு ஒரு சட்டைப்பையில் வைக்கக்கூடிய திசையறி கருவியொன்றைக் காட்டினார். அந்த வயதிலேயே அவர் ஒன்றுமற்ற வெளியில் ஏதோ ஒன்று காந்த ஊசியில் தாக்கம் ஏற்படுத்துவதைப் புரிந்துகொண்டார். அவர் மாதிரியுருக்களையும், இயந்திரக் கருவிகளையும், பொழுதுபோக்காகச் செய்துவந்தார். எனினும், சிறுவயதில் இவருக்கு பேசும் போது பேச்சில் தடங்கல் இருந்தது (Einstein had early speech difficulties).

இளமையில் ஐன்ஸ்டைன்

இவர் தனது 12 ஆவது அகவையிலேயே கணிதம் படிக்க ஆரம்பித்தார். இவருடைய உறவினரிருவர் அறிவியல், கணிதம் தொடர்பான நூல்களையும், ஆலோசனைகளையும் கொடுத்து, அவரை ஊக்குவித்தார்களாம்.

இவரது தந்தையாருடைய தொழிலில் நட்டம் ஏற்பட்டதனால், 1894 ல், அவரது குடும்பம் மியூனிக்கிலிருந்து, முதலில் இத்தாலியிலுள்ள மிலான்(Milan) நகருக்கும் பின் பேவியா(Pavia) என்னுமிடத்துக்கு இடம் பெயர்ந்தது. ஆனால் அவர் மியூனிக்கிலேயே பாடசாலைப் படிப்பை முடிப்பதற்காகத் தங்கியிருந்தார். பாடசாலையில் ஒரு தவணையை முடித்துக்கொண்டு குடும்பத்துடன் இணைந்துகொள்ளப் பேவியா(Pavia) சென்றார்.

பாடசாலைப் படிப்பை முடிப்பதற்காக ஐன்ஸ்டீன் சுவிட்சர்லாந்துக்கு அனுப்பப்பட்டார். 1896ல் பாடசாலைப் படிப்பை முடித்துக்கொண்டு, சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரிலுள்ள சுவிஸ் கூட்டமைப்புப் பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (Polytechnic)சேர்ந்தார்.

இந்தச் சமயத்தில் அவர் தனது ஜெர்மனி நாட்டு குடியுரிமையை விட்டு நாடற்றவரானார்.

1898ல் மிலேவா மாரிக் என்னும் உடன்கற்றுவந்த செர்பிய பெண்ணொருவரைக் கண்டு காதல் கொண்டார்

1900 இல், சுவிஸ் கூட்டமைப்புப் பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் டிப்ளோமாவைப் பெற்றுக்கொண்டார். 21 -02-1901இல் இவர் சுவிற்சர்லாந்தின் குடியுரிமையைப் பெற்றார்.

ஐன்ஸ்டின் மாணவராக இருந்த போதே, அவரது அறிவாற்றலால் கவரப்பட்டு காதலியாக மாறிய மிலேவா(Mileva Marić) என்ற பெண்ணை 06-01- 1903 இல் அவர் மணந்தார் . அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் பிறந்தது.( Hans Albert Einstein, Eduard).

பிள்ளைகள் பெற்ற மிலேவா போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன. உலக மேதையான ஐன்ஸ்டின் உள்ளத்தைப்புரிந்து கொள்ள விரும்பாத அவரது மனைவி ஐன்ஸ்டினை விட்டுப் பிரிந்தார்(Albert and Marić divorced on 14 -02- 1919).

தனக்கு ஒரு துணை வேண்டி, தம் தேவைகளை அறிந்து தாயுள்ளத்தோடு நடந்துகின்ற ஒரு பெண்ணை ஐன்ஸ்டின் தேடினார். அவருடை உறவுக்காரப் பெண்ணான எல்சா (Elsa Löwenthal)என்பவளை ஐன்ஸ்டின் மணந்தார். திருமணமான சிறிது காலத்திலேயே எல்சா மறைந்தார்.

தம் அறிவாற்றலைக் கண்டு காதலித்துத் திருமணம் செய்த மிலேவா பிரிவும், தம் உறவுக்காரப் பெண்ணான எல்சாவின் மறைவும் ஐன்ஸ்டினை யோசிக்க வைத்தது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் தமது எதிர்கால வெற்றிகளுக்குத் தடைக் கற்களாக இருப்பதை நினைத்து ஒரு முடிவுக்கு வந்தார். இனி எஞ்சிய காலத்தைத் தனியாகவே வாழ்ந்து முடிப்பது என்று ஐன்ஸ்டின் உறுதி பூண்டார்.

படிப்பு முடிந்ததும் இவருக்கு கற்பித்தல் வேலையெதுவும் கிடைக்கவில்லை. இவருடன் படித்த ஒருவரின் தந்தையார் மூலம் 1902 ல் சுவிஸ் காப்புரிமை அலுவலகத்தில் தொழில்நுட்ப உதவிப் பரிசோதகராக வேலை கிடைத்தது. அங்கே கருவிகளைப் பற்றி விளங்கிக் கொள்வதற்கு இயற்பியல் அறிவு பணியாளர் ஒருவர் தேவைப்பட்டது, அங்கே கருவிகளுக்கான காப்புரிம விண்ணப்பங்களை மதிப்பீடு செய்வதே அவரது வேலையாக இருந்தது.

இரண்டாவது உலக மகாயுத்தம ஆரம்பமாவதற்குரிய அறிகுறிகள் தெரிந்த நேரம்.. அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்( Franklin Delano Roosevelt) அந்த விஞ்ஞானியை அழைத்து, “அணுகுண்டு தயாரிக்க வேண்டும். அது உங்களால்தான் முடியும். நீங்கள் அணுகுண்டு தாயரித்துக் கொடுத்தால் அதற்குத் தேவையான உதவிகளையும் பணமும் தரத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

ரூஸ்வெல்ட் சொன்னதைக் கேட்ட அந்த விஞ்ஞானி சிரித்தார். அவருடைய சிரிப்பின் அர்த்தம் புரியாமல் ரூஸ்வெல்ட் விழித்தார்.

“அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித குல மேம்பாட்டுக்குப் பயன்பட வேண்டுமே தவிர, மனித குலத்தின் அழிவுக்குப் பயன்படுத்தக்கூடாது” என்று உறுதியாக அந்த விஞ்ஞானி ரூஸ்வெல்டுக்குப் பதில் கூறினார்.

ரூஸ்வெல்ட் வியப்போடு அந்த விஞ்ஞானியைப் பார்த்தார். மீண்டும், “எனது அறிவாற்றலை ஒரு போதும் மனித குலத்தை அழிப்பதறகுப் பயன்படுத்த மாட்டேன்; பணத்திற்காக எனது மூளையை அடகு வைக்க மாட்டேன்” என்று கூறிவிட்டு அந்த விஞ்ஞானி வெளியேறினார்.

ரூஸ்வெல்ட் வேறொரு விஞ்ஞானியை வைத்து அணுகுண்டைத் தயாரித்தார். இரண்டாவது உலக மகாயுத்தம் நடந்தபோது அந்த அணுகுண்டை ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களின் மீது அமெரிக்கா வீசியது. இந்தக் கோரச் சம்பவம் 1945ஆம் ஆண்டு நடந்தது.

ஹிரோஷிமா, நாசாகி நகரங்கள் தரைமட்டமாகின. எங்கு நோக்கினும் மரண ஓலங்கள், இந்தக் கொடுமையின் பாதிப்பிலிருந்து இன்றும் கூட அந்த நகரம் முழுதும் விடுபடவில்லை. அன்று வீசிய அணுகுண்டு கதிர்ப்புகள் இன்று பிறக்கும் குழந்தைகளையும் பாதிப்பதாகப் பல விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அந்த அணுகுண்டு ஜப்பான் நகரங்களின் மீது வீசப்பட்டதையும், அதனால் மனித குலம் பாதிக்கப்பட்டதையும் அறிந்து தேம்பித் தேம்பி அழுதார். இந்த சோகத்திலிருந்து விடுபட அவருக்குப் பலகாலம் ஆயிற்று.அந்த மனிதாபிமானமிக்க விஞ்ஞானி வேறு யாருமல்ல அவர்தான் ஐன்ஸ்டின் என்ற விஞ்ஞான மேதை.இவருடைய “பொருள் சக்தி மாற்றக் கோட்பாட்”டின் அடிப்படையில்தான் அணுகுண்டு தயாரிக்கப்படுகிறது

அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்டின் ஆணைக்கு மறுப்பு தெரிவித்த ஐன்ஸ்டின், இன்று உலகப் புகழ்வாய்ந்த மேதைகளில் ஒருவராக உருவாக்கியது.

விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோர் மத்தியில் ஐன்ஸ்டினின் தத்துவமும் புகழ்ந்து பேசப்பட்டது. 1921-ஆம் ஆண்டு ஐன்ஸ்டினை நோபல் பரிசு தேடி வந்தது.

உலகின் பல பகுதிகளுக்குச் சென்று வந்த ஐன்ஸ்டின், தமது சொந்த நாடான ஜெர்மனியிலேயே வாழ்வது என்று முடிவு செய்து, அங்கேயே தங்கினார். ஆனால் அப்போது ஜெர்மனியின் அதிபராக இருந்த ஹிட்லர், யூதர்களையும், யூத அறிவாளிகளையும் இழிவாக நடத்துவதைக் கண்டு வருந்தினார்.

இனி நாம் வாழ்வதற்கு ஜெர்மனி ஏற்ற இடமல்ல என்று ஐன்ஸ்டின் முடிவு செய்தார். அதன்பின் அவர் வாழ்க்கை அமெரிக்காவில் தொடர்ந்தது. அங்குள்ள ‘பிரின்ஸ்டன்’ என்ற பல்கலைக்கழகத்தில் ஐன்ஸ்டின் இயற்பியல்/ பெளதிகவியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.

சுமார் இருபது ஆண்டுகள் மனைவி துணைவியின்றி வாழ்ந்த ஐன்ஸ்டின், 1955 ஏப்ரல் 18-ம் நாள் அமெரிக்காவில் மறைந்தார்.

இவரால் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற சமன்பாடு:

ஜேர்மனியில் உள்ள ஐன்ஸ்டைன் குறியீடு..

திணிவு-சக்தி சமன்பாடு E = mc^2

இங்கு E = சக்தி m = திணிவு, c = வெற்றிடத்தில் ஒளியின் வேகம்

இச்சமன்பாட்டை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 1905 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 இல் வெளியிட்டார்எப்பொருளும் ஓய்வு நிலையிலோ அல்ல்து இயங்கு நிலையிலோ இருக்கும் போது அது ஒரு குறிப்பிடத்தக்க சக்தியை கொண்டிருக்கும் என்று கூறினார்.

தாமஸ் ஆல்வா எடிசன்

தாமஸ் ஆல்வா எடிசன் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசன் எழாவது பிறந்த கடைசிப் புதல்வன். தந்தையார் சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கன்; தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவள் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது செவிடாய்ப் போனது! அப்பிறவிப் பெருங் குறை அவரது பிற்கால நடையுடைப் பழக்கங்களை மிகவும் பாதித்ததோடு, அநேகப் புதுப் படைப்புக்குக் காரணமாகவும் இருந்தது! தாத்தா ஜான் எடிசன், 1776 அமெரிக்கச் சுதந்திரப் போரில் [War of Independence] பிரிட்டாஷ் பக்கம் சேர்ந்து, நாட்டை விட்டோடிக் கனடாவில் உள்ள நோவாஸ் கோசியாவில் [Nova Scotia] சரண் புகுந்தார். பிறகு மேற்திசை நோக்கிச் சென்று, கனடாவின் அண்டரியோ மாநிலத்தில் ஈரி ஏரிக் கரையில் உள்ள பாங்கம் [Bangham on Lake Erie] என்னும் ஊரில் குடியேறினார். 1837 இல் கனடாவிலும் உள்நாட்டுக் கலகம் எழவே, ஜான் குடும்பத்தோடு மறுபடியும் அமெரிக்கா நோக்கி ஓடினார்! அங்கு ஓஹையோவில் ஈரி ஏரிக் கரையின் தென் பகுதியில் மிலான் என்னும் ஊரில் குடியேறினர்.

1840 இல் தந்தை சாமுவெல் எடிசன் மிலானில் ஒரு சாதாரண மர வியாபாரத்தைத் தொடங்கினார். அது மென்மேலும் பெருகி விருத்தி யடைந்தது. பின்பு மிஸ்சிகன் போர்ட் ஹூரனில் [Port Huron, MI] கலங்கரைத் தீபக் காப்பாளராகவும் [lighthouse Keeper], கிராடியட் கோட்டை ராணுவத் தளக் [Fort Gratiot Military Post] கார்பென்ட்டராகவும் சாமுவெல் வேலை பார்த்தார். தாமஸ் எடிசன், சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலில் [Scarlet Fever] கஷ்டப்பட்டுத் தாமதமாக, எட்டரை வயதில்தான் போர்ட் ஹூரன் பள்ளிக்குச் சென்றார். மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு நாள் தாமஸ் கண்களில் கண்ணீர் சொரிய வீட்டுக்குத் திரும்பினார். 'மூளைக் கோளாறு உள்ளவன் ' என்று ஆசிரியர் திட்டியதாகத் தாயிடம் புகார் செய்தார், எடிசன்! அத்துடன் அவரது பள்ளிப் படிப்பும் முடிந்தது! பள்ளிக்கூட ஆசிரியை யான தாயிடம் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே, எடிசன் கல்வி கற்றார். இதைக் கேட்டுப் பலர் ஆச்சரியப் படலாம்! புகழ் பெற்ற இத்தாலியக் கலைஞர், லியனார்டோ டவின்ஸி, அணுக்கரு அமைப்பை விளக்கிய, டேனிஷ் விஞ்ஞானி நீல்ஸ் போஹ்ர் [Niels Bohr], கணித விஞ்ஞான நிபுணர், ஸர் ஐஸக் நியூட்டன் ஆகியோரும் சிறு வயதில் மூளைத் தளர்ச்சி [Isaac Newton] உள்ளவராகப் பள்ளியில் கருதப் பட்டார்கள்! 'எதிலும் இனி நீ உருப்படப் போவதில்லை ' என்று பள்ளித் தலைமை ஆசிரியர், சிறுவன் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை நோக்கி எச்சரிக்கை செய்தாராம்! மேதை எடிசனும், அகில விஞ்ஞானி, ஐன்ஸ்டைனைப் போல் மந்த புத்திச் சிறுவனாகத்தான் பள்ளிக் கூடத்தில் காட்சி அளித்திருக்கிறார்.
ஏழு வயதில் திடாரென எடிசனின் சிந்தனா சக்தி விரிந்து தூண்டப் பட்டது! சூழ்நிலைச் சாதனங்களின் மேல் ஆர்வம் மிகுந்து அடிப்படை ஆய்வுக் கேள்விகள் எழுந்தன. ஒன்பது வயதில் ரிச்சர்டு பார்க்கர் [Richard Parker] எழுதிய 'இயற்கைச் சோதனை வேதம் ' [Natural & Experimental Philosophy] என்ற நூலைப் படித்து முடித்தார். பதிமூன்றாம் வயதில் தாமஸ் பெயின் [Thomas Paine] எழுதிய ஆக்க நூல்களையும், சிரமத்துடன் ஐஸக் நியூட்டன் இயற்றிய 'கோட்பாடு ' [Principia] என்னும் நூலையும் ஆழ்ந்து படித்தார். தனது 21 ஆம் வயதில், மைகேல் ஃபாரடேயின் [Micheal Faraday] செய்தித்தாளில் இருந்த 'மின்சக்தியின் பயிற்சி ஆராய்ச்சிகள் ' [Experimental Researches in Electricity] பகுதியை ஒருவரி விடாது ஆழ்ந்து படித்து முடித்தார். அந்த ஞானம் அவரது வாழ்க்கையில் ஒரு பெருத்த மாறுதலை உண்டாக்கியது! செய்கை முறையில், சோதனைகள் புரிந்து படைக்கும் திறனை எடிசனுக்கு அவை அடிப்படை ஆக்கின. கணிதப் படிப்பில் லாத எடிசன், விஞ்ஞான இயற்பாடு [Theory] எதுவும் முறையாகக் கற்காத எடிசன், சோதனைகள் மூலம் மட்டிலுமே திரும்பத் திரும்ப முயன்று, ஞான யுக்தியால் பல அரிய நூதனச் சாதனங்களைப் படைத்து உலகப் புகழ் பெற்றார்.

தானாக இயங்கும் தந்திக்குறிப் பதிவுக் கருவி

1859 இல் எடிசன் தன் பன்னிரண்டாம் வயதில் பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, டெட்ராய்ட்-போர்ட் ஹூரன் [Detriot-Port Huron], ரயில் பாதையில் செய்தித் தாள் விற்கும் பையனாக வேலையில் சேர்ந்தார். அப்போது டெட்ராய்ட் சென்ட்ரல் நிலையம், தந்திப் பதிவு ஏற்பாடு மூலம், ரயில் போக்கு வரத்தைக் கண்காணிக்க முயன்று கொண்டிருந்தது. அந்த வாய்ப்பைப் பற்றிக் கொண்டு, வேலைக்கு மனுப் போட்டு, 1863 இல் டெலகிராஃப் பயிற்சியில் நுழைந்தார். தந்திச் செய்திகள் புள்ளிக் கோடுகளாகப் [Dots & Dashes] பதிவானதால், அவரது செவிட்டுத் தன்மை வேலையை எந்த விதத்திலேயும் பாதிக்கவில்லை! பதிவானப் புள்ளிக் கோடுகளை அந்த காலத்தில் ஒருவர் படித்துப் புரிந்துதான், ஆங்கி லத்தில் மாற்றிக் கையால் எழுத வேண்டும். அதே பணியை ஆறு வருடங்கள் எடிசன் அமெரிக்காவில் தெற்கு, நடுமேற்குப் பகுதிகளில், நியூ இங்கிலாந்தில், மற்றும் கனடாவில் செய்து வந்தார். அப்போது தான் வேலையைச் சீக்கிரம் செய்ய, தந்திக் கருவியைச் செப்பனிட்டு தன் முதல் ஆக்கத் திறமைக் காட்டினார், எடிசன். 1869 இல் தன் 22 ஆம் வயதில் 'இரட்டைத் தந்தி அடிப்புச் சாதனத்தைப் ' [Duplex Telegraph with Printer] பதிவுக் கருவியுடன் இணைத்து, இரண்டு செய்திகளை ஒரே சமயத்தில், ஒரே கம்பியில் அனுப்பிக் காட்டினார், எடிசன். அத்துடன் தந்தியின் மின்குறிகளைச் சுயமாக மாற்றிச் சொற்களாய்ப் பதிவு செய்யவும் அமைத்துக் காட்டினார் .

எடிசன் தந்தி வேலையை விட்டுவிட்டு, முழு நேர ஆக்கப் பணிக்கு, நியூ யார்க் நகருக்குச் சென்றார். அங்கு ஃபிராங்க் போப்புடன் [Frank Pope] கூட்டாகச் சேர்ந்து, 'எடிசன் அகிலப் பதிப்பி ' [Edison Universal Stock Printer], மற்றும் வேறு பதிக்கும் சாதனங்களையும் படைத்தார். 1870-1875 ஆண்டுகளில் நியூ ஜெர்ஸி நியூ ஆர்க், வெஸ்ட்டர்ன் யூனியனில் [Western Union] சுயமாய் இயங்கும் தந்தி [Automatic Telegraph] ஏற்பாட்டைச் செப்பனிட்டார். ரசாயன இயக்கத்தில் ஓடிய அந்தக் கருவி ஏற்பாடு, மின்குறி அனுப்புதலை [Electrical Transmission] மிகவும் விபத்துக்குள் ளாக்கியது. அதைச் சீர்ப்படுத்த முற்பட்ட எடிசன் தன், ரசாயன ஞானத்தை உயர்த்த வேண்டிய தாயிற்று. அந்த ஆராய்ச்சி விளைவில், மின்சாரப் பேனா [Electric Pen], பிரதி எடுப்பி [Mimeograph] போன்ற சாதனங்கள் உருவாகின. மேலும் அந்த அனுபவம், எடிசன் எதிர்பாரதவாறு கிராமஃபோனைக் [Phonograph] கண்டுபிடிக்கவும் ஏதுவாயிற்று.

முதல் கிராமஃபோன் கண்டுபிடிப்பு

புதிய சாதனங்களைக் கண்டு பிடிக்கும் போது, வேறு பல அரிய உபசாதனங்களும் இடையில் தோன்றின. அவற்றுள் ஒன்று 'கரி அனுப்பி ' [Carbon Transmitter] என்னும் சாதனம். 1877 இல் எதிர்பாரதவாறு, எடிசன் கண்டு பிடித்தவற்றிலே, மிக நூதன முன்னோடிச் சாதனம், கிராமஃபோன். பிரான்சின் ஆக்க மேதை, லியான் ஸ்காட் [Leon Scott] 'ஒவ்வொரு ஒலியையும் ஒரு தகடு மீது பதிவு செய்ய முடிந்தால், அவை சுருக்கெழுத்து போல் தனித்துவ உருவில் அமையும் ' என்ற கோட்பாடை ஒரு நூலில் எழுதி யிருந்தார். அதுதான் ஒலி மின்வடிவாய் எழுதும், ஒலிவரைவு [Phonography] எனப்படுவது. அக் கோட்பாடை நிரூபித்துக் காட்ட, எடிசன் ஓர் ஊசியைத் தன் கரியனுப்பியுடன் சேர்த்து, ஒலிச் சுவடுகள் பாரஃபின் [Paraffin] தாளில் பதியுமாறு செய்தார். அவர் வியக்கும்படி, ஒலிச் சுவடுகள் கண்ணுக்குத் தெரியாத வடிவில், தலை எழுத்துப் போல் கிறுக்கப் பட்டு நுணுக்க மாகத் தாளில் வரையப் பட்டிருந்தன. பிறகு ஊசியை ஒலிச் சுவடின் மீது உரசி, அதைப் ஒலிபெருக்கி மூலம் கேட்டதில், பதியப் பட்ட ஓசை மீண்டும் காதில் ஒலித்தது!


எடிசன் அடுத்து ஓர் உருளை [Cylinder] மீது தகரத் தாளைச் [Tin Foil] சுற்றி ஒலிச் சுவடைப் பதிவு செய்து காட்டினார். 1877 டிசம்பரில் அதற்கு எடிசன், தகரத்தாள் கிராமஃபோன் [Tinfoil Phonograph] என்னும் பெயரிட்டார். ஆனால் கிராமஃபோன் ஆய்வுக் கூடத்திலிருந்து வர்த்தகத் துறைக்கு வர இன்னும் பத்தாண்டுகள் ஆயின.

மின்குமிழி [Electric Bulb] மின்சக்தி ஜனனி [Generator] கண்டுபிடிப்பு

எடிசன் காலத்தில் வாயு விளக்குகள்தான் [Gas Light] வீதிக் கம்பங்களில் பயன் படுத்தப்பட்டன. ஐம்பது ஆண்டுகளாக 'மின்சார விளக்கு ' பலருக்குக் கனவாகவும், முயலும் படைப்பாளி எஞ்சினியர்களுக்குப் படு தோல்வியாகவும் இருந்து வந்தது! அப்போதுதான் விஞ்ஞானிகள் 'மின்வீச்சு விளக்கு ' [Electric Arc Lighting] சம்பந்தமாக பலவித ஆய்வுகள் செய்து வந்த காலம். 1878 ஜூலை மாதம் 29 ஆம் தேதி சூரிய கிரகணத்தின் போது, ராக்கி மலைத்தொடர் மீது சில ஆராய்ச்சிகள் செய்ய பல அமெரிக்க விஞ்ஞானிகள் சென்றிருந்தனர். கிரகணத்தின் போது 'சூரிய வெளிக்கனல் ' [Sun 's Corona] எழுப்பிய வெப்ப உஷ்ண வேறுபாட்டை அளக்க, அவர்களுக்கு ஒரு கருவி தேவையானது. எடிசன் ஒரு கரிப் பொட்டுச் [Carbon Button] சாதனத்தைப் பயன் படுத்தி 'நுண்ணுனர் மானி ' [Microtasi meter] என்னும் கருவியைச் செய்து கொடுத்தார். அக்கருவி மூலம் கம்பியில் ஓடும் மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தலாம். அம்முறையைப் பயன் படுத்தி மின்சார விளக்கு ஒன்றைத் தயாரிக்க அப்போது எடிசனுக்கு ஓர் ஆர்வம் உண்டானது.
எடிசன் மின்விளக்கு ஆராய்ச்சிக்கு, 'எடிசன் மின்சார விளக்குக் கம்பெனியை ' [Edison Electric Light Company] துவங்கிய ஜெ.பி. மார்கன் குழுவினர் முன் பணமாக $ 30,000 தொகையை அளித்தார்கள். 1878 டிசம்பரில், பிரின்ஸ்டன் பல்கலைக் கழக எம்.ஏ. விஞ்ஞானப் பட்டதாரி, 26 வயதான ஃபிரான்சிஸ் அப்டன் [Francis Upton] எடிசன் ஆய்வுக் குழுவில் சேர்ந்தார். எடிசனுக்குத் தெரியாத கணித, பெளதிக அறிவியல் நுணுக்கங்கள் யாவும், இளைஞர் ஃபிரான்சிஸ் மூலம் கிடைத்தது. மின்தடை [Resistance] மிகுதியாய் உள்ள உலோகக் கம்பி ஒன்றை மின்விளக்கிற்கு எடிசன் முதலில் உபயோகித்தார். மின்சார அணிச் சுற்றில் [Series Circuit] செல்லும் மின்னோட்டம் [Electric Current] மிகுதியாக இருந்ததால், மின் வீச்சு விளக்கு [Eletric Arc Light] ஒன்றில் பழுது ஏற்பட்டால், எல்லா விளக்கு களும் அணைந்து போயின. எடிசன் மின் விளக்குகளை இணைச் சுற்றில் [Parallel Circuit] பிணைத்து, மின்னோட்ட அளவைக் குறைத்ததால், ஒரு விளக்கில் ஏற்படும் பழுது மற்ற விளக்குகளைப் பாதிக்க வில்லை. எடிசன் குழுவினர், பிளாடினம் கம்பியைச் சுருளைச் [Platinum Filament] சூன்யக் குமிழி [Vacuum Bulb] ஒன்றில் உபயோகித்துக், கட்டுப் படுத்திய மின்னோட்டத்தில் ஒளிர வைத்து, முதல் மின்விளக்கை உண்டாக்கிக் காட்டினார்கள்.

இதற்கு இடையில் 1879 இல் எடிசன், அப்டன் இருவரும் முதல் மின்சார ஜனனியை உண்டாக்க போதிய சோதனைகள் செய்து முடித்தார்கள். யந்திர சக்தியில் ஓட்டினால் ஜனனியில் மின்னழுத்தம் [Voltage] உண்டாகி, கம்ப்ி முனையில் மின்திறம் [Electric Power] கிடைக்கிறது. எதிர்மறையாக ஜனனியின் முனைகளில், மின்னழுத்தம் செலுத்தினால், அதே சாதனம் யந்திர சக்தியைத் தரும் மின்சார மோட்டார் [Electric Motor] ஆனதை எடிசன் நிரூபித்துக் காட்டினார். இதுவும் அவரது முதல் சாதனையே!

1881 ஜனவரியில் முதல் 'விளக்கொளி மின்சார அமைப்பு ' [Incadescent Electric Power System] வர்த்தகத் துறை ஏற்பாடு, நியூ யார்க் 'ஹிந்த் & கெட்சம் ' [Hind & Ketcham] அச்சக மாளிகையில் நிர்மாணிக்குப் பட்டது. நியூ யார்க் கீழ் மன்ஹாட்டனில் அமைந்த, உலகின் முதல் வர்த்தக 'மத்திய மின்சார ஏற்பாடு ' [Central Power System], எடிசன் நேரடிப் பார்வையில் நிறுவப் பட்டது! அது 1882 செப்டம்பர் முதல் இயங்க ஆரம்ப்ித்தது. அந்த மின்விளக்கு அமைப்பு வளர்ச்சி அடைந்து, பின் பெரிய ஹோட்டல்கள், அரங்க மேடைகள், வாணிபத் துறைகள், வர்த்தகக் கடைகள் யாவற்றிலும் மின்குமிழி ஒளி வீச, ஆக்க மேதை எடிசனின் புகழ் உலகெங்கும் பரவியது.

விளக்கு எரியும் போது, சூனியமான மின்குமிழிச் [Vacuum Bulb] சுருள் கம்பியின் நேர்முனையில் [Positive Pole] ஒருவித நீல நிறவொளி [Blue Glow] சூழ்ந்து கொண்டிருந்தது. 1883 இல் எடிசன் மின்குமிழியைப் பதிவு செய்த போது, அந் நிகழ்ச்சிக்கு 'எடிசன் விளைவு ' [Edison Effect] என்று பெயர் கொடுத்தனர். பதினைந்து ஆண்டுகள் கழித்து 1998 இல் ஜே. ஜே. தாம்ஸன் [J.J. Thomson] முதன் முதல் 'எதிர்த்துகள் ' [Electron] பரமாணுவைக் கண்டுபிடித்தார். விஞ்ஞானிகள் பின்னால் எடிசன் விளைவுக்கு விளக்கம் தந்தனர். அதாவது எதிர்த்துகள் [Electrons] சூடான முனையிலிருந்து தண்மையான முனைக்கு [Cold Electrode], வெப்பவியல் வீச்சால் [Thermionic Emission] பயணமாகும் போது, நேர்முனையில் அப்படி ஒரு நீல நிறவொளி எழுகிறது! அதுவே பின்னால் 'எதிர்த்துகள் குமிழி ' [Electron Tube] தோன்ற வழி வகுத்து 'மின்னியல் தொழிற் துறைக்கு ' [Electronics Industry] அடிகோலியது.
மூவிக் காமிராக் [Movie Camera] கண்டுபிடிப்பு

போனோகிராஃபில் வெற்றி பெற்ற எடிசன், அடுத்து மூவிக் காமிரா வளர்ச்சியில் ஆழ்ந்து வேலை செய்தார். அதைப் பற்றி ஒரு சமயம் எடிசன் கூறியது: 'கற்பனையில் எனக்கு இது முன்பே உதயமானதுதான். போனோகிராஃப் எப்படிக் காதுக்கு இசை விருந்தளிக்கிறதோ, அது போல் 'நகரும் படம் ' [Movie] மனிதர் கண்ணுக்கு விருந்தளிக்கச் செய்ய முடியும். போனோகிராஃப் ஒலி நுணுக்கத்தை மூவிக் காமிரா யந்திரத்துடன் இணைத்துப் 'பேசும் படம் ' [Talkies] என்னால் தயாரிக்க முடியும் ' இந்த சிந்தனா யுக்தி எடிசனுக்கு பத்தாண்டுகளாக இருந்திருக்கிறது. 1880 இல் முதல் நகரும் படம் வெளிவரப் பொறுப்பாக இருந்தவர், எடிசனுக்கு உதவியாளராகச் சேர்ந்த, W.K.L. டிக்ஸன் [W.K.L. Dickson]. எடிசன் நகரும் படக் காமிராவை விருத்தி செய்ய, பலரது படைப்பு களைக் களவு செய்தார். தன் கீழ் பணியாற்றும் நிபுணர்களின் ஆக்கங்களையும் பயன் படுத்திக் கொண்டார்.

1888 இல் எடிசன் முதலில் படைத்த மூவிக் காமிரா, கினெட்டாஸ்கோப் [Kinetoscope]. ஆனால் படம் யாவும் அதில் சற்று மங்கலாகத்தான் தெரிந்தன. 1889 இல் பிரிட்டனில் வாழ்ந்த ஃபிரீஸ்-கிரீன் [Friese-Green] ஒருவிதப் பதிவு நாடாவைப் [Sensitized Ribbon] பயன் படுத்தி உருவப் படங்களைப் பதித்தார். அதே நாடாவை சில வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் ஜார்ஜ் ஈஸ்ட்மன் [George Eastman] உபயோகித்து ஓளிப் படங்களை அந்த நாடாவிலே எடுக்கும்படி செய்தார். முதல் முறையாக, எடிசன் கினெடாஸ்கோப் காமிராவை விருத்தி செய்து, ஐம்பது அடி நீளமுள்ள படச் சுருளை, மின்சார மோட்டார் மூலம் சுற்ற வைத்து, உருப்பெருக்கியின் [Magnifying Glass] வழியாகப் பேசும் படங்களை வெள்ளித் திரையில் காட்டிக் களிக்கச் செய்தார். அந்த மூவிக் காமிராவை எடிசன் 1891 இல் அமெரிக்காவில் பதிவு செய்தார்.

'ஒளியையும், ஒலியையும் இணைத்துப் பேசும் படத்தைத் திரையில் காட்டிச் சிறுவர், சிறுமிகளுக்குச் சிறந்த முறையில் பாடம் சொல்லிக் கொடுக்கலாம் ', என்னும் கருத்தில் உறுதியான நம்பிக்கை காட்டினார் எடிசன். 'கல்வி புகட்டுவதில் எந்த அங்கம் முக்கிய மானது ? கண்களா ? அன்றி காதுகளா ? ' என்று ஒருவர் கேட்ட போது, எடிசன் கூறினார்: 'கண்கள்தான்! ஓலியை விட, ஒளி அதி வேகம் உடையது. காதுகளை விடக் கண்கள் விரைவாகக் கற்பவை! நகரும் படங்கள் மூலம், கண்கள் கற்றுக் கொள்வது நேரடி வழி! விரைவுப் பாதை! தெளிவாய் விளக்கும் பாதை! புத்தகத்தில் சொற்களைப் படித்து அறிவதை விட, பார்வை மூலம் படிப்பது எளியது! ' 'ஒரு படம் ஆயிரம் சொற்க ளுக்குச் சமம் ' என்பதை எடிசன் எத்தனை அழகாகச் சொல்லி விட்டார்! ஒரு நிலைப் படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம் என்றால், ஓடும் படம் எத்தனை ஆயிரம் சொற்களுக்கு இணையாகும், என்பதைக் கணக்கிட முடியுமா ?

அமெரிக்க ஒளி விளக்கு அணைந்தது

ஆக்க மேதை எடிசன் தன் 84 ஆம் வயதில், 1931 அக்டோபர் 18 ஆம் தேதி நியூ ஜெர்சி வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் [President Herbert Hoover] எடிசன் உடல் அடக்கத்தின் போது அமெரிக்கா வெங்கும் தேவையான விளக்குகளைத் தவிர, மற்ற மின்விளக்கு களை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 9:59 [EST] மணிக்கு அவரது புகழுடல் அடக்க மானது. நியூ யார்க்கில் மாலை 9:59 [EST] மணிக்கு 'விடுதலை விக்கிரகத்தின் ' [Statue of Liberty] கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது! பிராட்வே விளக்குகள் ஒளி மங்கின! வீதியில் பயணப் போக்கு [traffic Signals] விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் கண்ணை மூடின! சிகாகோவில் சரியாக 8:59 மணிக்கு வீதியில் மின்சார வண்டிகள் [Street Cars] ஒரு நிமிடம் நின்றன! மின்விளக்குகள் அணைந்தன! டென்வரில் 7:59 P.M மலை நேரத்தில் விளக்குகள் ஒரு நிமிடம் கண்ணை மூடி அஞ்சலி செய்தன! கிழக்கே எடிசன் உடல் அடக்கமான சமயத்தில், மேற்கே காலிஃபோர்னியாவில் பசிஃபிக் நேரம் 6:59 P.M. மணிக்கு, சூரியனும் செவ்வானில் தன் ஒளியைக் குறைத்து இருட்கடலில் மூழ்கியது! விளக்குகளும் ஒரு நிமிடம் இமை மூடின! ஆனால் எடிசன் ஆத்மா வாகிய மின்விளக்கு இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் சுடர் விட்டு, அகில உலகுக்கும் ஒளி பாய்ச்சிக் கொண்டே இருக்கும்!

கொலம்பஸ்

கொலம்பஸின் பிறப்பு மற்றும் இளமைக்காலம் பற்றி பல்வேறு கருத்துக்கள் உள்ளன . அவர் இத்தாலியின் ஜெனோவா நகரில் 1451ல் பிறந்தார் என்று ஆய்வுகள் கூறுகின்றன .


அவருடைய தந்தை டொமினிகோ கொலம்போ ஒரு துணி வியாபாரி. 1471ல் கொலம்பஸ் ஒரு கப்பல் மூலம் ஏஜியன் கடல் பகுதியில் உள்ள கியோஸ் தீவு பகுதியைச் சுற்றி வந்தார் . இந்த கப்பலில் 2 ஆண்டுகள் வேலை பார்த்தார் .1480 ல், கொலம்பஸ் அட்லாண்டிக் கடல் வழியே தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா செல்வதற்கு திட்டமிட்டார் . அவருக்கு உதவி கிடைப்பது மிகக் கடினமாக இருந்தது .கொலம்பஸ் தன் கடல் பயணத்துக்காக போர்ச்சுக்கல் அரசை நாடினார் .


ஆனால் உதவிகள் கிடைக்கவில்லை . பின்னர் ஸ்பெயின் அரசரை கொலம்பஸ் நாடினார் . ஸ்பானிய அரசரும் அரசியும் பயணத்திற்கான செலவை ஏற்றுக்கொள்வதாக கூறினர் . 'அலைகடலின் தளபதி ' என்று பட்டம் சூட்டப்பட்டு , புதிதாகக் கண்டுபிடிக்கும் தீவுகளுக்கு அவரே ஆளுநர் என்ற உறுதிமொழியும் , வருவாயில் பெரும்பங்கை அவருக்குக் கொடுக்கவும் அரசவை ஒப்புக்கொண்டது .


ஆகஸ்ட் 3-ம் தேதி 3 கப்பல்களில் கொலம்பஸ் புறப்பட்டார் . முதலில் அவர் கேனரித்தீவுகளை அடைந்து ஒரு மாதம் தங்கினார் . முதலில் அடைந்த தீவு எது என்பதில் சர்ச்சை நீடிக்கிறது . பகாமாசில் ஒரு தீவை அடைந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது . 1492 -ம் ஆண்டு அக்டோபர் 12 -ல் கரையேறினார் . 1493 -ல் நாடு திரும்ப திட்டமிட்டார் .


புயல் காரணமாக அவர் போர்ச்சுகல்லில் உள்ள லிஸ்பனுக்கு 1493 -ம் ஆண்டு மார்ச் 4 -ம் தேதி சென்றார் . அப்போது போர்ச்சுகல்லுக்கும் , ஸ்பெயினுக்கும் உறவு மோசமாக இருந்ததால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார் . தனது பயணத்தை முடித்துக்கொண்டு மார்ச் 15 -ம் தேதி ஸ்பெயினை அடைந்தார் . ஒரு மாவீரராக வரவேற்கப்பட்டார் . அவருடைய கண்டுபிடிப்பு பற்றிய செய்தி உலகெங்கிலும் பரவியது . கொலம்பஸின் இந்த பயணம் ஐரோப்பியர்களின் அமெரிக்கக் குடியேற்றத்திற்கு அடிப்படையாகும் .2-வது பயணத்தை 1493 -ம் ஆண்டு செப்டம்பர் 24 -ல் தொடங்கினார் . 17 கப்பல்களில் , 1200 பேருடன் கிளம்பினார் . முதலில் டொமினிக்கா சென்றவர் , பின்னர் குவாடெலோப் , மோன்ட்செர்ராட் , ஆண்டிகுவா மற்றும் நேவிஸ் ஆகிய சிறிய தீவுகளைக் கண்டறிந்து பெயர் சூட்டினார் . அவர் கண்டுபிடித்த தீவுகளுக்கு அவரே ஆளுநராக நியமிக்கப்பட்டார் .


அட்லாண்டிக் கடலில் பல பயணங்களை மேற்கொண்டார் . கடல் பயணியாக இருந்த போதிலும் ஒரு மோசமான நிர்வாகியாகக் கருதப்பட்டார் .1498 -ல் 3 -ம் முறையாக ட்ரினிடாட் தீவுகளை ஜூலை 31 -ல் கண்டுபிடித்தார் . அத்தோடு தென் அமெரிக்காவின் நிலப்பகுதியையும் கண்டுபிடித்தார் .


கொலம்பஸ் தனது கடைசிப் பயணத்தில் தன் மகன் பெர்டினான்டுவையும் அழைத்துச் சென்றார் . 1504 -ல் நாடு திரும்பினார் . திரும்பச்சென்றார் . ஸ்பானிய அரசிடமிருந்து பத்து சதவீதம் லாபம் வேண்டும் எனக்கேட்டார் . ஆனால் ஸ்பானிய அரசர்இதை நிராகரித்தார் . 1506 -ம் ஆண்டு மே 20 -ல் கொலம்பஸ் காலமானார் .-

ரைட் சகோதரர்கள்

ரைட் சகோதரர்கள் யந்திர ஊர்தியில் முதலில் பறந்து நூறாண்டுகள் [1903-2003] !!!

'ரைட் சகோதர்கள் நுணுக்க அறிவாளிகள். துல்லிய யந்திரத் திறமைசாலிகள். மூலக் காரணங்களை ஆழ்ந்து ஆராயும் கூரியச் சிந்தனையாளர்கள். விடா முயற்சி மிக்க கடின உழைப்பாளிகள். ஈடிணையற்ற சோதனையாளர்கள். தொழில் நுணுக்க மேதைகள். பறக்கும் ஊர்தியைப் படைத்து இந்தப் பூமியின் வரலாற்றையே மாற்றி விட்டவர்கள் '.

சார்லஸ் டால்ஃபஸ், ஃபிரென்ச் விமானச் சரித்திரவாதி [Charles Dollfus, French Aviation Historian]

முன்னுரை:

2003 டிசம்பர் 17 ஆம் தேதி அமெரிக்கவின் வட கரோலினா கிட்டி ஹாக்கில் உள்ள கில் டெவில் கில் [Kill Devil Kill, Kitty Hawk, North Carolina] கடல்மேட்டுக் கரையில், நூறாண்டுகளுக்கு முன்பு 1903 டிசம்பர் 17 ஆம் தேதி ஆர்வில் ரைட் [Orville Wright] முதன்முதலில் பனிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து நிரூபித்த நிகழ்ச்சியை மறுமுறை அதேபோல் ஒரு மாடலைத் தயாரித்துப் பார்வையாளர்களுக்குச் செய்து காட்ட முயன்றார்கள்! அது ரைட் சகோதரர் கனவை, ஆழ்ந்த அந்தரங்க வேட்கையை மெய்ப்பித்த நிகழ்ச்சியை நினைவூட்டியதோடு, அமெரிக்க விடுதலைப் புத்துணர்ச்சியைப் புலப்படுத்துவதாகவும் தோன்றியது! சரித்திரப் புகழ்பெற்ற அந்தப் பனிரெண்டு வினாடிகள் உலக ஆகாயப் போக்குவரத்திலும், அண்டவெளிப் பயணத்திலும் மாபெரும் புரட்சியை உண்டாக்கி விட்டது! விண்வெளிப் பயணத்துக்கு விதையிட்ட சரித்திரத் தீரர்கள் ஆர்வில், வில்பர் ரைட் சகோதரர்களின் நினைவாக கிட்டி ஹாக், கில் டெவில் கில்லில் 1932 ஆம் ஆண்டு 60 அடி உயரமுள்ள கற்கோபுரம் ஒன்று 90 அடி மலை உச்சியில் கம்பீரமாக நிறுத்தப் பட்டுள்ளது.

பறக்கும் யுகத்தைத் திறந்து வைத்த படைப்பு மேதைகள்!

படைப்புக்குத் தேவை, ஆக்க உணர்வு ஒரு சதவீதம், வேர்வை சொட்டும் விடா முயற்சி தொன்னூற்றி ஒன்பது சதவீதம் என்று உலக ஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிஸன் கூறுகிறார்! படிக்காத, பட்டம் பெறாத தாமஸ் ஆல்வா எடிஸனைப் போன்ற நிபுணத்துவ உழைப்பாளிகளின் அணியில் வருபவர் ஆர்வில், வில்பர் ரைட் சகோதரர்கள். எடிஸனைப் போல் நூற்றுக் கணக்கான நூதனச் சாதனங்களைக் கண்டுபிடிக்கா வித்தாலும், பறக்கும் ஊர்தியை மட்டும் படைத்த ரைட் சகோதரரின் ஆக்கம் தரத்தில் எடிஸனின் படைப்புகளுக்கு நிகரானது! 1903 டிசம்பர் 17 ஆம் தேதி ஆகாயத்தில் பறந்த ரைட் சகோதரர்களின் ஆரம்ப வெற்றி நிகழ்ச்சியே, அறுபத்தி ஆறு ஆண்டுகள் கடந்து 1969 இல் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் அண்டவெளியில் பறந்து சந்திர மண்டலத்தில் தடம்பதிக்க அடிகோலியது! ஆர்வில், வில்பர் இருவரும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியைக் கூட முடிக்காமல், படிப்பை விட்டுத்தள்ளிச் சைக்கிள் மெக்கானிக்காகப் பணி புரிந்து வந்தவர்கள்!

முதன்முதலில் பறந்த கிட்டி ஹாக்கில் நூற்றாண்டுப் பாராட்டு விழா

2003 டிசம்பர் 17 ஆம் தேதி கிட்டி ஹாக், கில் டெவில் கில்லில் சுமார் 35,000 பேர் நூறாண்டுப் பாராட்டு விழாவைக் கொண்டாடக் கூடியிருந்தனர். 'ரைட் சகோதரர்களின் பறக்கும் விமானப் படைப்பு பரந்த இந்த உலகுக்குச் சொந்தமானது! ஆனால் அவர்கள் இருவரும் அமெரிக்காவுக்குச் சொந்தமானவர்கள் ' என்று ஆர்வில், வில்பர் ஆகியோரைப் புகழ்ந்து, கடல்கரைத் திடல் நூறாண்டு நினைவு விழாவில் உரையாற்றினார் அமெரிக்க ஜனாதிபதி புஷ். விமானியும், நியூயார்க் ராச்செஸ்டர் பொறியியற் பேராசிரியருமான கெல்வின் கோசெஸ்பெர்கர் 1903 இல் ரைட் சகோதரர் செய்த ஒற்றை எஞ்சின் இரட்டைச் சுழலி ஊர்தியின் மாடலை அக்காலப் பொருட்களில் அமைத்து, அவர்கள் முதலில் பறந்து பயின்ற முறைகளை மீண்டும் நிகழ்த்திக் காட்ட ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அம்மாடலை ஓட்டிக் காட்டுகையில் பெருமழை உண்டாகி ஏதோ பழுதுகள் ஏற்பட்டு, ஊர்தி தரை விட்டு எழுந்து பறக்க முடியாமல் முடங்கிக் கொண்டது! முதல் நிகழ்ச்சியைக் காண வந்திருந்த அனைவருக்கும், அத்தோல்வி ஏமாற்றத்தை உண்டாக்கியது. அடுத்து இரண்டாம் முறையாக மறுபடியும் அப்பணியை முயல்வதாகத் திட்டம் இருந்தது.

அடுத்து சந்திரனில் கால்வைத்த இரண்டாவது விண்வெளி விமானி பஸ் ஆல்டிரின் [Buzz Aldrin], சினிமா நடிகர் ஜான் டிரவோல்டா [John Travolta] ஆகியோர் இருவரும் பேசினார்கள். ஜனாதிபதி புஷ் அடுத்து நாசா திட்டமிடும் புதிய சந்திரப் பயணத்தை, அக்கூட்டத்தில் அறிவிக்கப் போவதாக எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் புஷ் அன்று ஏனோ அதை வெளியிட விரும்பவில்லை!

1903 டிசம்பர் 17 ஆம் தேதி முதலாக ஆர்வில் ரைட் எஞ்சின் ஊர்தியை இயக்கி 12 வினாடிகள் பூமிக்கு மேல் பறக்க முடிந்தது! அடுத்து வில்பரும், ஆர்விலும் அன்றைய தினம் மாறி மாறி நான்கு தடவைகள், பறந்து காட்டி, ஊர்தியின் பறப்பியல் திறனை நிரூபித்தார்கள். வில்பர் ரைட் முற்பட்ட மூன்றாவது இறுதி முயற்சியில், ஊர்தி 59 வினாடிகள் பறந்து 852 அடி தூரம் சென்றது! அம்மூன்று முதல் முயற்சிகளும் இருபதாம் நூற்றாண்டின் புதிய படைப்புச் சாதனையாக சரித்திரத்தில் இடம் பெறுகின்றன.

வானில் பறக்க முயன்ற முன்னோடி வல்லுநர்கள்

1783-1785 ஆண்டுகளில் பிளான்ச்சார்டு [Blanchard] போன்ற பிரென்ச் நிபுணர்கள் வாயு பலூன்களில் பறந்து காட்டினர்! 1804-1848 ஆண்டுகளில் ஜியார்ஜ் கேய்லி [George Cayley], 1842 இல் ஸாமுவெல் ஹென்ஸன் [Samuel Henson], 1894 இல் பிரிட்டிஷ் நிபுணர் ஹிராம் மாக்ஸின் [Hiram Maxin] ஆகியோரும் எஞ்சின் ஊர்தியை அமைக்க முன்னோடியாக முயன்றவர்கள். 1898 ஆம் ஆண்டு பிரேஸில் வல்லுநர் ஆல்பர்ட் ஸன்டாஸ் துமான்ட் [Alberto Santos-Dumont] எஞ்சின் இணைத்த வாயுக்கப்பலில் [Powered Airship] பறந்து சென்று பாரிஸ் ஐஃபெல் கோபுரத்தை நான்கு தடவைகள் சுற்றிக் காட்டினார்!

ஆனால் 1891 ஆம் ஆண்டில் ஜெர்மெனியின் ஆட்டோ லிலியென்தால் [Otto Lilienthal] பறவையைப் போல இறக்கைகளைக் கொண்ட ஊர்திகளில் 2000 தடவை வெற்றிகரமாகப் பறந்ததாக அறியப்படுகிறது! ஆனால் 1896 இல் விமானக் கட்டுப்பாடு சீர்குலைந்து, ஊர்தி தரையில் விழுந்து லிலியென்தால் மாண்டு விட்டார்! பிரென்ச் அமெரிக்கரான ஆக்டேவ் சனூட் [Octave Chanute] ரைட் சகோதரர் காலத்தில் (1896-1901) பறக்கும் ஊர்திகளைப் பற்றி எழுதியும், முயன்று கொண்டும் இருந்தார். ஆக்டேவ் சனூட் எழுதிய 'பறக்கும் யந்திரங்களின் வளர்ச்சி ' [Progress of Flying Machines] நூலே ரைட் சகோதரர்களுக்கு ஆரம்ப கால உதவிப் புத்தகமாக அமைந்தது. அவர்கள் சனூட்டுடன் தமது பறப்பியல் அனுபவ நுணுக்கங்களை அடிக்கடிப் பகிர்ந்து தொடர்பு கொண்டிருந்தனர்.

ஆட்டோ லிலியென்தால்தான் ரைட் சகோதரர்களின் முதற் குரு! அவர்களது விமான வேட்கைக்கு முக்கிய காரணமானவர். ஆட்டோ லிலியென்தால் எழுதிய 'பறப்பியல் பிரச்சனை, பறப்பியல் உந்து சோதனைகள் ' [The Problem of Flying & Practical Experiments in Soaring] என்னும் நூலும், ஸாமுவெல் லாங்கிலி எழுதிய [Samuel Langley] 'பறப்பியல் யந்திரவியல் சோதனைகள், வாயு வளைபோக்கு ' [Experiments in Mechanical Flight & Aerodynamics] என்னும் நூலும், அவர்கள் 200 வித இறக்கைகளைச் சோதிக்க செய்த 'புயல் குகைச் ' [Wind Tunnel] சோதனைகளுக்கு உதவின.

வான மண்டலத்தில் பல ஆண்டுகளாய்ப் பறக்க முயன்ற பல மேதைகள் தோல்வி யுற்ற போது, ரைட் சகோதரர்கள் மட்டும் முதலில் வெற்றி பெற்றதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன! முதல் முதலாக இறக்கை ஊர்திப் பறப்பியல் பயிற்சி முறையில் 'முன்னுந்தல் ' [Thrust], 'மேலெழுச்சி ' [lift], 'திசைதிருப்பி ' [Rudder] எனப்படும் 'முப்புற உந்தல் கட்டுப்பாடு ' நுணுக்கத்தைக் கையாண்டவர்கள், ரைட் சகோதரர்கள். இரண்டாவது ஊர்திக்கு முன்னுந்தல் ஆற்றலைத் தருவதற்கு ஆயில் எஞ்சினைப் புகுத்தி அதிக வேகத்தை அளித்தனர். மூன்றாவதாக 1900-1903 ஆண்டுகளில் ஆர்வில், வில்பர் இருவரும் 'புயல் குகை ' [Wind Tunnel] ஒன்றைத் தயாரித்து 200 விதமான இறக்கைகளைச் சோதித்துத் தகுதியான வாயு வளைபோக்குள்ள ஒன்றைத் தேர்ந்தெடுத்தனர்.

அமெரிக்கா வட கரோலினா கிட்டி ஹாக்கில் [Kitty Hawk, North Carolina] 1903 டிசம்பர் 17 ஆம் தேதி ஆர்வில் ரைட் 12 H.P. ஆற்றல் கொண்ட பெட்ரோல் எஞ்சின் பூட்டிய பறக்கும் ஊர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் ஆகாயத்தில் 30 mph வேகத்தில் 59 வினாடிகள் 852 அடி தூரம் பறந்து காட்டிச் சரித்திரப் புகழடைந்தார்! 1901 ஆம் ஆண்டில் மார்க்கோனி ரேடியோத் தொடர்பை முதலில் நிரூபித்துக் காட்டியபின், இருபதாம் நூற்றாண்டின் மகத்தான இரண்டாவது சாதனையாக 1903 இல் ரைட் சகோதரரின் வான ஊர்திப் பறப்பு கருதப்படுகிறது!

நவீன உலகில் விமானப் போக்குவரத்துகள் விருத்தியும் பெருக்கமும்

1904, 1905 ஆண்டுகளில் ரைட் சகோதரரின் பறக்கும் ஊர்தி பல முறையில் முற்போக்காகி மேன்மைப் படுத்தப்பட்டு, 1908 இல் அமெரிக்க ஈரோப்பிய விமானப் போக்குவரத்துகள் சீராக ஆரம்பமாயின. முதல் உலகப் போரில் [1914-1918] வானிலிருந்து குண்டு போட முதன்முதல் விமானங்கள் பயன்படுத்தப் பட்டன! 1939 முதல் சுழற்தட்டு எஞ்சின்கள் நீக்கப்பட்டு, கடந்த 50 ஆண்டுகளாக ஆற்றல் மிஞ்சிய ஜெட் எஞ்சின்கள் விமானங்களைத் இழுத்துச் செல்கின்றன! 1903 இல் ரைட் சகோதரர் ஊர்தி 600 பவுண்டு எடை கொண்டிருந்தது! தற்கால பூதவுருப் புறாவான 747 போயிங் ஜம்போ ஜெட் விமானம் 500 நபர்களை ஏற்றிக் கொண்டு, 350 டன் எடையைத் ஏந்திக் கொண்டு, மணிக்கு 580 மைல் வேகத்தில் பறந்து செல்கிறது!

ஒவ்வொரு நாளும் சுமார் 3 மில்லியன் பயணிகள் ஆகாய விமானத்தில் பறந்து செல்கிறார்கள்! 2002 ஆண்டில் மட்டும் 1.3 பில்லியன் நபர்கள் விமானங்களில் பயணம் செய்துள்ளதாகத் தெரிகிறது! அந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 4% வீதம் இப்போது மிகையாகி வருகிறது! விமானப் பயணத்தின் சிறப்பு பெருகி வரும் சமயத்தில், சென்ற 100 ஆண்டுகளில் விமானங்கள் பழுதாகி விழுந்து தகர்ந்து போய் 46,000 பேருக்கு மேற்பட்டு மரணம் அடைந்துள்ளனர்! ஆயினும் மக்கள் விமானப் பயணத்திற்குப் பயந்தது போய் அவற்றைப் புறக்கணிதாகவும் தெரியவில்லை!

கடந்த பல வருடங்களாக மணிக்கு 185 டன் எடையுடன் 1200 மைல் வேகத்தில், 140 பேர் பயணம் செய்யும் 'ஒலிமீறிய ஜெட் ' [Supersonic Jet] விமானங்களைப் பிரிட்டனும், பிரான்சும் ஈரோப்புக்கும் அமெரிக்கவுக்கும் இடையே அனுப்பி வந்தன. அவற்றில் பிரச்சனைகள், விபத்துகள் ஏற்பட்டுத் தற்போது நிரந்தரமாக நிறுத்தப் பட்டு விட்டன. 1965 இல் தயாரான அமெரிக்காவின் புதிய X-15 விமானம் பூமிக்கு மேல் 60 மைல் உயரத்தில், ஆறு மடங்கு ஒலி வேகத்தில் [Six times the Speed of Sound (Mach:6) (4380 mph)] பறந்து செல்கிறது! எதிர்காலத்தில் வரவிருக்கும் நாசாவின் ஸ்கிராம்ஜெட் விமானம் [NASA 's X-43C ScramJet Plane] 7 மடங்கு ஒலி வேகத்தில் [4800 mph] பாய்ந்து செல்லும் என்று அறியப்படுகிறது!

இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் ஒரு சாதனையாக வரலாற்றில் இடம்பெறும், சந்திர மண்டல மனிதப் பயணத்துக்கு அடிகோலியவர் ரைட் சகோதரர்கள் என்பதை நினைத்துப் பார்க்கும் போது, எல்லையிலா மகிழ்ச்சி உண்டாகிறது!

சுபாஷ் சந்திர போஸ்

நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (ஜனவரி 23, 1897 - ஆகஸ்ட் 18 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்க்கு எதிராக தாக்குதல் நடத்தியவர்.

இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. அவர் ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு சன்னியாசியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்து வரும் முகர்ஜி கமிஷன், தன் இறுதி அறிக்கையை 2005 நவம்பரில் வெளியிடும் என்று தெரிகிறது.


சுபாஷ் சந்திர போஸ் 1897 ஆம் வருடம் இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில்லுள்ள கட்டாக் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஜானகிநாத் போஸ். போஸ் ராகின்சேவ் காலேஜ் ஸ்கூல் - கட்டாக், ஸ்காடிஷ் சர்ச் ஸ்கூல், கல்கட்டா மற்றும் பிட்ஷ்வில்லியம் காலேஜ் ஆகிய இடங்களில் படித்தார். 1920 இல் இந்திய மக்கள் சேவை படிப்புக்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர் இந்தியாவிலேயே நான்காவதாக வந்தார். எனினும் ஏப்ரல் 1891 இல் மதிப்புமிக்க இந்திய மக்கள் சேவையிலிருந்து வெளியேறிய அவர் இந்திய சுதந்திர போரட்டத்தில் பங்கேற்றார்.



'ஜெய் ஹிந்த் ' என்ற அந்த வீர முழக்கத்தை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் மெய் சிலிர்த்துவிடும். அந்த முழக்கத்தை நாட்டிற்கு அளித்த மிகப்பெரும் புரட்சியாளரான சுபாஷ் சந்திர போஸ் பற்றி நினைத்தாலோ ஒவ்வொரு இந்தியனின் உடல் முறுக்கேறி இதயம் வீரத்தாலும் நாட்டுப்பற்றாலும் இந்த உலகையே வெல்லும் உறுதி படைத்ததாகிவிடும். 'எனக்கு இரத்தம் கொடுங்கள். உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன் ' என்றும் 'சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும் என்று நீங்கள் வாழ விரும்பினால் நம்மால் நிச்சயமாக வெற்றி பெற முடியாது. நமக்கு முன்னால் ஒரு நீண்ட போராட்டம் இன்னும் இருக்கிறது. இந்தியாவை வாழ வைக்க வேண்டுமென்றால் நமக்கு ஒரே ஒரு விருப்பம் மட்டும் தான் இருக்க வேண்டும். அது நாட்டிற்காக நம் உயிரையே விடுவது தான் ' என்று எந்த வித போலித்தனமும் அரசியல் உள்நோக்கமும் தன்னலமும் இல்லாமல் நாட்டின் விடுதலையே குறிக்கோளாகக் கொண்டு அறைகூவல் விடுத்து மக்களை தட்டியெழுப்பியவராயிற்றே.

மர்மம் நிறைந்த அவரது மரணம் மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி இன்றைய தேதி வரை அவரது மரணம் குறித்த எந்த ஒரு ஸ்திரமான முடிவுக்கும் வர இயலாமல் இருக்கிறது. 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதிஅவர் பயணம் செய்த விமானம் விழுந்து நொறுங்கியபோது தீக்காயங்களுடன் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது அவருக்குச் சிகிச்சை அளித்த ஜப்பானிய டாக்டரான யோஷிமி தமயோஷி கொடுத்த வாக்குமூலத்தின் படி அன்று இரவே போஸ் இறந்து விட்டார் என்று அறியப்படுகிறது. ஆனால் அவர் இறந்து விட்டார் என்பதை பலரும் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். காந்திஜியோ ' இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன் நேதாஜி எப்படி இறப்பார் ' என்ற அதீத நம்பிக்கையோடு இருந்தார். நேதாஜி ஏதோ ஒரு காரணத்திற்காக எங்கோ தலைமறைவாக இருக்கிறார் என்றும் தக்க தருணத்தில் தாய் நாட்டிற்குச் சேவை செய்ய மீண்டும் வருவார் என்றும் நம்பிக்கைக் கொண்டிருந்தார். நேதாஜியின் மரணம் குறித்த விசாரணைக் கமிஷன் அமைத்த முதல் நபர் வைஸ்ராய் வேவல். அதிகாரப்பூர்வமான அறிக்கை எதுவும் வெளியிடவில்லையென்றாலும் அந்த விசாரணையில் போஸ் இறந்து விட்டார் என்றே நம்பப் பட்டதாகத் தெரிகிறது.

இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான முதல் விசாரணைக் கமிஷன் அப்போது இரயில்வே மந்திரியாக இருந்த ஷா நவாஸ் கான் தலைமையில் நிறுவப்பட்டது. ஆனால் அதிக விசாரணை எதுவுமின்றி துரிதமாக நேதாஜி இறந்த செய்தியை ஷா ஊர்ஜிதப்படுத்தினார். அவசரத்தில் அள்ளித் தெளித்த இந்த கோலத்தால் ஷா INAவில் நேதாஜிக்கு அடுத்த கட்ட தலைவராக இருந்திருந்த போதும், அவர் ஒரு சிறந்த போர்வீரராக இருந்த போதும், அவருடைய விசாரணைத் திறனைப் பலரும் சந்தேகித்தனர். பிறகு இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருந்த போது ஜி.டி.கோஸ்லாவின் தலைமையில் இன்னொரு விசாரணைக்கமிஷன் அமைத்தார். அந்த கமிஷன் சிங்கப்பூர், பேங்க்காக், ரங்கூன் ஆகிய நாடுகளுக்குச் சென்று பலரைப் பேட்டி கண்டது. ஆனால் ஜி.டி.கோஸ்லா நேதாஜி இறந்த இடமான ஃபோர்மோசா என்ற இடத்துக்குச் செல்லாமலேயே அறிக்கையை சமர்ப்பித்ததால் அவ்விசாரணைக் குழுவையும் யாரும் நம்பவில்லை. மேலும் நேதாஜிக்கும் கோஸ்லாவிற்கும் இடையில் இணக்கமான நட்பு இருந்ததில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்த விசாரணைக்கமிஷனின் அறிக்கை நம்பகத் தன்மையை இழந்ததற்கு இன்னுமொரு காரணமும் இருந்தது. அது கோஸ்லாவிற்கும் பண்டிட் நேருவின் குடும்பத்திற்குமிடையேயான மிக நெருங்கிய நட்புறவு. நேதாஜியின் கடைசிக் காலத்தில் நேதாஜியும் நேருவும் சுமுகமான உறவைக் கொண்டிருக்கவில்லை. இந்த விஷயத்தைப் பற்றி பின்னால் விரிவாகப் பார்ப்போம். கோஸ்லாவின் அறிக்கையும் நேதாஜி இறந்த விஷயத்தை ஊர்ஜிதப்படுத்தியது. ஆனால் அதற்கு முக்கிய ஆதாரமாக டாக்டர் யோஷிமி தமயோஷியின் மருத்துவ அறிக்கையே சுட்டப்பட்டது. கோஸ்லாவின் அறிக்கை மொரார்ஜி தேசாய் உட்பட பலராலும் நிராகரிக்கப்பட்டது. பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு மூன்றாம் முறையாக ஜஸ்டிஸ் ஜே.சி.முகர்ஜியின் தலைமையில் ஒரு விசாரணைக்கமிஷன் நிறுவப்பட்டது. இன்றைக்கும் இந்த கமிஷன் பல ஆதாரங்களைச் சேகரித்து வருகிறது. இந்த முறையாவது உண்மையை வெளிக்கொணர்வார்கள் என நம்புவோம்.

1897ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி பிறந்த சுபாஷ் சந்திர போஸ் இள வயதில் விளையாட்டில் ஆர்வமின்றி மிகுந்த சங்கோஜியாக இருந்தார். கட்டாக்கில் (இன்றைய ஒரிஸ்ஸா மாநிலத்தில் உள்ள பகுதி) பிறந்த போஸ், பூரி என்ற புண்ணியஸ்தலத்திற்கு வரும் சாதுக்களாலும் யாத்திரிகர்களாலும் மிகவும் ஈர்க்கப்பட்டார். தனது பதினைந்தாவது வயதில் விவேகானந்தருடைய பேச்சுக்களையும் எழுத்துக்களையும் படித்தவர் ராமகிருஷ்ண பரமஹம்ஸராலும் மிகவும் ஈர்க்கப்பட்டார். மிகுந்த மதிநுட்பமுள்ளவரான போஸ் பள்ளியிறுதி ஆண்டில் இரண்டாவதாக வந்து கொல்கத்தாவிலுள்ள பிரெஸிடென்ஸி கல்லூரியில் சேர்ந்தார்.

1916ம் ஆண்டு ஆங்கில விரிவுரையாளரான ப்ரொஃபஸர் ஓட்டன் இந்தியர்களைத் தரக்குறைவாகப் பேசியதால் அவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். பிறகு மீண்டும் சேர்க்கப்பட்டு தத்துவத்தில் முதன்மையாகத் தேர்வு பெற்றார். அவருடைய புத்தி கூர்மையைப் புரிந்து கொண்ட அவரது தந்தையார் அவரை அரசாங்க உத்யோகத்தில் உயர் பதவியில் பார்க்க ஆசைப்பட்டு சிவில் செர்விசீல் தேர்ச்சி பெற இங்கிலாந்து அனுப்பி வைத்தார். 1920ம் ஆண்டு ஆங்கிலத்தில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று மிகச்சிறப்பாக அதில் போஸ் தேர்ச்சி பெற்றார். ஆனால் அதே சமயம் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்துவிட போஸ் மன அமைதி இழந்தார். ICSல் தேர்ச்சி பெற்றாலும் ஆங்கிலேயர்களுக்கு சேவை செய்ய மறுத்து விட்டார். அந்த நேரம் காந்திஜி ஒரு மக்கள் தலைவராக உருவெடுத்த நேரம். சுபாஷ் சந்திர போஸ் இந்தியன் நேஷனல் காங்கிரஸில் சேர்ந்து நாட்டுக்குத் தொண்டாற்றும் பொருட்டு காந்திஜியை சந்தித்தார். போஸின் பணிவான கோரிக்கையைக் கேட்டு காந்திஜி அவரை கொல்கத்தாவிலிருந்த தேஷ் பந்து சித்தரஞ்சன் தாஸிடம் அனுப்பி வைத்தார். 1921 முதல் 1925 வரைக்கும் இடைப்பட்டக் காலகட்டத்தில் கொல்கத்தாவிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் நடந்த அரசியல் போராட்டங்களில் பங்கு கொண்டு பலமுறை சிறை சென்றார். 1921ல் ப்ரின்ஸ் ஆஃப் வேல்ஸின் இந்திய வருகையை புறக்கணிக்கும் போராட்டத்தை வழிநடத்தியதால் சிறை பிடிக்கப்பட்டு பின்னர் இன்னொரு முறை தேஷ் பந்துவுடன் சிறை சென்றார். அப்போது தேஷ் பந்துவை பிற்காலத்தில் குருவாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு நேதாஜிக்குக் கிடைத்தது. தேஷ் பந்து கொல்கத்தாவின் மேயராகியவுடன் போஸ் முதன்மை ஆட்சித்துறை அதிகாரியாக பதவியேற்றார். பதவியில் இருந்து கொண்டே பல புரட்சியாளர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார். அதனால் அரசாங்கம் அவரை மறுபடியும் கைது செய்து முதலில் அலிப்பூர் ஜெயிலிலும் பின்னர் பர்மாவிலுள்ள மாண்டலே ஜெயிலிலும் அடைத்தார்கள். இந்த சிறையடைப்பு அவருக்கு, எதிர்கால நடவடிக்கைகளைப் பற்றியும் புரட்சியை நெறிப்படுத்துதலைப் பற்றியும் சிந்திக்க, வேண்டிய அவகாசம் கொடுத்தது. 1925ல் தேஷ் பந்துவின் மறைவு அவரை நிலைகுலைய வைத்தது. ஆனால் மாண்டலேயில் இருந்த இரண்டு வருடங்கள் அவருக்கு வேண்டிய ஊக்கத்தையும் மனபலத்தையும் கொடுத்தது. 1926ம் ஆண்டு முடிவில் வங்காள சட்ட சபைக்கு வேட்ப்பாளராக நியமனம் பெற்றார். மே 1927ல் அவரது உடல்நலம் கருதி அவரை சிறையிலிருந்து விடுவித்தார்கள். டிசம்பர் 1927ம் ஆண்டு ஜவஹர்லாலுடன் காங்கிரஸின் ஜெனரல் செக்ரட்டரி பதவியை ஏற்றார். பின்னர் 1928ம் ஆண்டு கொல்கத்தாவில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைச் சார்ந்த சுயாட்சி நாடாக இந்தியாவை அங்கீகரிக்க வேண்டி நிகழ்ச்சி நிரலை மோதிலால் நேரு முன் வைத்தார். இதனை இளைய தலைவர்கள் எதிர்த்தார்கள். ஜவஹர்லாலும் போஸும் இந்தியாவுக்கு முழு சுதந்திரம் கோரிப் போராடவேண்டும் என்றும் காங்கிரஸ் கமிட்டியின் கட்டம் கட்டமாக சுதந்திரம் பெறும் பிரேரணைத்திட்டத்தை ஒத்துக்கொள்ள முடியாது என்றும் கூறிவிட்டார்கள். அப்போது காந்திஜி பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு காலக் கெடு கொடுக்கலாம் என்று ஒரு யோசனையை முன்வைத்தார். அதன் படி ஒரு வருடத்திற்குள் இந்தியாவுக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தைச் சார்ந்த சுயாட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் அப்படி வழங்கத் தவறினால் காந்திஜியே முன்னின்று முழு சுதந்திரத்திற்கான சட்ட மூலத்தை தயாரித்தளிப்பார் என்றும் யோசனை வழங்கப்பட்டது. இந்த யோசனையை எல்லோரும் அங்கீகரித்தார்கள்.

ஆனால் எவ்வளவோ முயன்றும் சுயாட்சி அந்தஸ்த்து பெறமுடியவில்லை. அதன் விளைவாக அடுத்த காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் முழு சுதந்திரம் (பூர்ண ஸ்வராஜ்) வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு நேதாஜி பல முறை சிறை சென்று வந்தார். 1930ம் ஆண்டு ஜனவரி மாதம் அவரை ஊர்வலம் நடத்திய குற்றத்திற்காக மறுபடி சிறையிலடைத்த பிறகு அந்த செப்டம்பரில் விடுவிக்கப்பட்டார். அவர் இம்முறை சிறையில் இருந்த போது கொல்கத்தாவின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டு (1930 மார்ச்சில்) ஷஹீத் பகத் சிங் தூக்கிலிடப்பட்ட போது காங்கிரஸிடம் மிகுந்த வருத்தமும் கோபமும் கொண்டிருந்தார். பகத் சிங்கின் மறைவும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியாத காங்கிரஸ் தலைவர்களின் கையாலாகத்தனமும் அவரை வெகுண்டெழச் செய்தது. பகத் சிங்கின் தூக்கிலிடல் முதன் முதலாக அஹிம்சா முறையிலான போராட்டத்தில் அவரை நம்பிக்கையிழக்கச் செய்து, தற்காப்புக்கு சிறந்த வழி தாக்குதலை முதலில் தொடங்குவது தான் என்று நம்ப வைத்தது. 1932ம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். அப்போது வியன்னாவுக்குச் சென்றவர் வித்தல்தாஸ் படேல் என்ற ஒரு சுதந்திரப் போராட்ட வீரரைச் சந்தித்து அவரால் மிகவும் கவரப்பட்டார். இருவரின் சிந்தனையும் ஒரே மாதிரியாக இருந்தது. இருவருமே ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிடக்கூடாது என்று கருதினர். ஆனால் அது ஆயுதமேந்திய போராட்டத்துடன் நடைபெற வேண்டும். அப்போராட்டம் எல்லா பக்கங்களிலிருந்தும் தொடுக்கப்பட வேண்டும் என்றும் நம்பினர். அதனுடன் பிரிட்டிஷுக்கு எதிரான நாடுகளுடன் ஒன்றிணைந்து போராடினால் தான் வெற்றிக்கு வழி வகுக்க முடியும் என்பதையும் புரிந்து கொண்டனர்.
1933ம் ஆண்டு வித்தல்தாஸின் மறைவுக்குப் பிறகு போஸின் ஒரே குறிக்கோள் மற்ற நாட்டவர்களிடம் இந்திய மக்கள் படும் துன்பங்களையும் சுதந்திரத்திற்கான நியாயங்களையும் பரப்புவதே. 1934ம் ஆண்டு நவம்பர் மாதம் 'The Indian Struggle ' என்ற புத்தகத்தை எழுதி பதிப்பித்தார். 1932 முதல் 1936ம் ஆண்டுக்கு இடைப்பட்டக் காலகட்டத்தில் ஜெர்மனியின் ஃபெல்டர் (ஹிட்லரையும் சந்தித்ததாக ஒரு கூற்று இருக்கிறது), இத்தாலியின் முஸ்ஸோலினி, ஐயர்லாந்தின் டி வலேரா, ஃப்ரான்ஸின் ரோமா ரோல்லண்ட் ஆகியோரைச் சந்தித்தார். ஐயர்லாந்தின் டி வலேராவால் கவரப்பட்டு பின்னர் தன்னுடைய புரட்சியின் வடிவத்தை ஐரிஷ் புரட்சிக் குழுவான ஸின் ஃபைன் (Sinn Fein)ஐ மாதிரியாகக் கொண்டு அமைத்தார். 1936ம் ஆண்டு நாடு திரும்பியவரை மீண்டும் கைது செய்து 1937ம் ஆண்டு மார்ச் மாதம் விடுதலை செய்தார்கள். இதற்கிடையில் சுபாஷ் சந்திர போஸ் நாடறிந்த புகழ் வாய்ந்த தலைவராக உருவெடுத்துவிட்டார். காந்திஜியே அவரைக் காங்கிரஸுக்கு பிரெஸிடெண்ட்டாக தலைமை ஏற்குமாறு அழைப்பு விடுத்தார். அவ்வழைப்பை ஏற்று ஹரிப்பூர் மாநாட்டிற்கு தலைமை வகித்தார். அப்போது ஷாந்தி நிகேதனில் ரபீந்திரநாத் தாகூரால் 'தேஷ் நாயக் ' என்று பட்டமளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

நேதாஜி முஸ்ஸோலினியை சந்தித்ததை வைஸ்ராய் விரும்பவில்லை என்பதை காந்திஜி அறிந்து கொண்டார். காந்திஜியின் எண்ணப்படி சுதந்திரம் பேச்சு வார்த்தைகள் மூலமே பெறக்கூடிய ஒன்று. அதனால் இந்தியன் நேஷனலின் அடுத்த தேர்தலில் நேதாஜி மறுபடியும் போட்டியிட்ட போது காந்திஜி அவரை ஆதரிக்காதது மட்டுமின்றி அவருக்கு எதிராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் ஜவஹர்லால் நேரு இருவரையும் போட்டியிடுமாறு பணித்தார். ஆனால் இருவருமே மறுத்துவிட்டதால் சீதாராமையாவை நிறுத்தினார். தேர்தலின் முடிவுகளோ காந்திஜிக்குப் பெருத்த ஏமாற்றமாய் இருந்தது. அவர் மிகவும் கோபமடைந்து 'இதை எனது தனிப்பட்ட தோல்வியாகவே நான் கருதுகிறேன் ' என்று அறிக்கை விட்டார். அதன் பிறகு காந்திஜி ராஜ்கோட்டுக்குச் சென்று தனது உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். கடைசியில் கொல்கத்தா கூட்டத்தில் நேதாஜியை காங்கிரஸில் இருந்து மூன்று வருடங்கள் தடை செய்ய முடிவு செய்யப்பட்டது. இத்தடைக்கான முடிவு நேதாஜிக்கு நேரு மற்றும் தாகூர் ஆகியோரது ஆதரவு இருந்தும் எடுக்கப்பட்டுவிட்டது. அந்த நேரத்தில் இரண்டாம் உலகப்போர் மூள, போஸ் எதிர்ப்பார்த்தபடி பிரிட்டிஷ் வைஸ்ராய் இந்தியத் தலைவர்கள் எவரையும் கலந்தாலோசிக்காமல் இந்தியாவை உலகப்போரில் பங்கு கொள்ளும் நாடு என்று அறிவித்து விட்டார். அதை எதிர்த்து ஆட்சியில் இருந்த எல்லா காங்கிரஸ் அரசுகளும் ராஜினாமா செய்துவிட்டன. இதையடுத்து 1940ம் ஆண்டு போஸ் சாவர்கரை பாம்பேயில் சந்தித்த போது அவர் போஸிடம் சிறு சிறு காரணங்களுக்காகப் போராடிச் சிறை சென்று பெருமதிப்புள்ள நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மேலும் ஜப்பானில் இருந்த ராஷ் பெஹாரி போஸின் அறிவுரைப்படி சுபாஷ் சந்திர போஸ் இந்தியாவை விட்டு யாரும் அறியா வண்ணம் ஜப்பானுக்கோ அல்லது ஜெர்மனிக்கோ சென்று விடவேண்டும் என்றும் அங்கிருந்து கொண்டு இந்திய போர்க் கைதிகளை ஒருங்கிணைத்து ஒரு ராணுவத்தை ஏற்படுத்தலாம் என்றும் கூறினார். (ராணுவத்தை அமைக்கும்படி சாவர்கர் அறிவுருத்தியதை அறுதியிட்டுக் கூறமுடியவில்லை). ஆனால் நேதாஜியோ இந்தியாவை விட்டுச் செல்லாமல் அப்பாவி இந்திய வீரர்களை போரில் ஈடுபடுத்துவதைக் கண்டித்தும் இந்திய மக்களின் வரிப்பணத்தையும் மற்ற செல்வங்களையும் போருக்காக செலவழிப்பதைக் கண்டித்தும் போராட்டம் நடத்தினார். அப்போராட்டத்திற்கு மக்களின் பேராதரவும் இருந்தது. இதனால் பயந்த ஆங்கிலேய அரசு அவரை மீண்டும் சிறையிலடைத்தது. இதை எதிர்த்து சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்ட நேதாஜியின் உடல்நலம் உண்ணாவிரதத்தின் 11வது நாள் அன்று மோசமடைந்தது. சிறையில் அவருக்கு ஏதேனும் ஆகிவிட்டால் மக்கள் பொங்கி எழுந்து விடுவார்கள் என்று உணர்ந்த பிரிட்டிஷ் அரசு அவரை வீட்டுக்காவலுக்கு மாற்றுமாறு உத்தரவு பிறப்பித்தது. போஸ் 1941ம் வருடம் ஒரு முஸ்லீம் மத போதகரைப்போல் வேடமணிந்து அவ்வீட்டுக்காவலில் இருந்து தப்பினார். பின்பு காபூலில் தென்பட்ட அவர் மீண்டும் தலைமறைவாகி, 'ஆர்லேண்டோ மஸ்ஸோட்டா ' என்ற பெயரில் போலி ஆவணங்களுடன் முதலில் ரஷ்யாவிற்குச் சென்றவர் மார்ச் 28ம் தேதி பெர்லினை அடைந்தார்.

ஜெர்மனியின் உதவியோடு ஒரு ராணுவப்பிரிவை ஏற்படுத்தியவர் ஒரு வானொலி நிலையத்தையும் நிறுவி, அவ்வானொலி வழி இந்தியர்களை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுமாறு தூண்டினார். நேதாஜி தப்பியோடி பெர்லினிலிருந்து வானொலி மூலம் ஒலிபரப்பியது மக்களை மிகவும் ஆவேசத்துடன் போராட ஊக்குவித்தது. பிறகு ரோமிலும் பாரீஸிலும் இந்திய மையங்களை நிறுவினார். அப்போது ராஷ் பெஹாரி போஸ் மற்ற தேசபக்தர்களின் துணையோடு இந்தியப் போர்க்கைதிகளைக் கொண்டு ஒரு ராணுவம் அமைத்து விட்டதாகவும் அதைத் தலைமை தாங்கி இந்தியாவை ஆளும் பிரிட்டிஷ் படையுடன் மோதுமாறும் அழைத்தார். அந்த அழைப்பை ஏற்று ஒரு ஜெர்மானிய கப்பலில் மிக ஆபத்தான கடற்பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் வந்தடைந்தார். அங்கு வந்தவர் ராணுவத்திற்குத் தலைமை ஏற்றார்.

பின்னர் ஜப்பானியர்களின் உதவியோடு ஒரு தற்காலிக இந்திய அரசை அமைத்து, அந்த ராணுவத்திற்கு இந்தியன் நேஷனல் ஆர்மி என்ற பெயரையும் சூட்டினார். மந்திரி சபை ஒன்றை அமைத்துக் கிழக்கில் வாழும் இந்தியர்களிடமிருந்தும் ஜப்பானிய அரசாங்கத்திடமிருந்தும் நிதியுதவி பெற்று அரசாங்கத்தையும் ராணுவத்தையும் நடத்தினார். ஜப்பானிய அரசு அவருக்கு 11 இருக்கைகள் கொண்ட ஒரு விமானத்தையும் கொடுத்து உதவியது. மகளிர் ராணுவத்தையும் நிறுவி அதற்கு ராணி ஜான்ஸி ரெஜிமெண்ட் என்று பெயர் சூட்டினார். அந்த இரு ராணுவப்படைகளையும் கொண்டு இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் துருப்புகளை விரட்டியடிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். ஆனால் அவர் விருப்பத்திற்கு பேரிடியாகப் போரில் ஜப்பான் வீழ்ச்சியடைந்தது. அதனால் INAவைச் சேர்ந்த வீரர்கள் பல இன்னல்களுக்கு ஆளானார்கள். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பானியர்கள் சரணடைவதற்கானப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்த போது INAவின் எதிர்காலம் குறித்துப் பேசுவதற்காக நேதாஜி ஜப்பான் சென்றார். பேங்க்காக்கிலிருந்து கிளம்பிய விமானம் ஃபோர்மோசா என்ற இடத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு மீண்டும் கிளம்பியபோது விபத்து ஏற்பட்டது.
காந்திஜியின் அஹிம்சா வழிக்கு நேர் எதிரான வழியை நேதாஜி பின்பற்றினாலும் இருவரும் ஒருவருக்கொருவர் அதிகப் பாசத்துடன் பழகி வந்தனர். ஆனால் காங்கிரஸின் பிரெஸிடெண்ட் தேர்தலில் சீதாராமய்யா தோல்வியுற்றதில் கோபமடைந்த காந்திஜி நேதாஜி தன் பதவியைத் துறக்கக் காரணமாயிருந்து விட்டார். மாகாத்மாவும் சில நேரங்களில் சாதாரண மனிதன் தான் போலும்.

1939ம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக நேதாஜி காந்திஜியிடம் ஒரு நாடு தழுவிய போராட்டம் நடத்துமாறு கேட்டுக்கொண்ட போது, காந்திஜி நாட்டில் பரவலான வன்முறை வெடித்து விடும் என்று காரணம் காட்டி மறுத்து விட்டார். அப்போது நேதாஜியின் நண்பர்கள் அவரே ஏன் அந்தப் போராட்டத்தைத் தொடங்கக்கூடாது என்று வினவ அதற்கு நேதாஜி 'நான் அழைத்தால் 20 லட்சம் மக்கள் என் பின்னே வரக்கூடும். ஆனால் காந்திஜி அழைத்தாலோ 20 கோடி மக்கள் திரண்டு வருவார்கள் ' என்றாராம்.

பின்னர் ஒரு முறை 'நான் எல்லோருடைய நம்பிக்கையையும் பெற்று இந்தியாவின் தலைசிறந்த மனிதனான காந்திஜியின் நம்பிக்கையை மட்டும் பெறவில்லையென்றால் அதைவிட மிகப் பெரிய சோகம் வேறொன்றுமில்லை ' என்று கூறினாராம். 1939ம் ஆண்டிற்குப் பிறகு காந்திஜியும் நேதாஜியும் சந்தித்துக்கொள்ளவேயில்லை.

சமீபத்தில் (பிப்ரவரி 2005) ஜஸ்டிஸ் முகர்ஜி கமிஷனிடம் தாய்வான் அதிகாரிகள் நேதாஜி இறந்ததாகச் சொல்லப்படும் தேதியில் எந்த ஒரு விமான விபத்தும் நடக்கவில்லை என்று தெரிவித்து இருக்கின்றனர். மேலும் அவர்கள் 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தாய்பேயில் நிகழவில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். இச்செய்தி நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்றும் அவர் மரணத்தில் மர்மம் இருக்கக்கூடும் என்றும் அதனால் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி வருபவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்து இருக்கிறது.

ரஷ்யாவிலும் பிரிட்டனிலும் இருக்கும் ஆவணக்காப்பகத்திலிருந்து இப்போது பல திடுக்கிடும் தகவல்களைச் சேகரித்திருக்கிறார்கள். இந்திய அரசாங்கம் கூறி வந்துள்ளபடி நேதாஜி 1945ம் ஆண்டு விமான விபத்தில் இறக்கவில்லை என்று தெரிய வருகிறது. இத்தகவல்களைத் திரட்டியவர்கள் புராபி ரே, ஹரி வாசுதேவன் மற்றும் ஷோபன்லால் குப்தா ஆகிய மூன்று ஆராய்ச்சியாளர்கள். இந்த மர்மத்தின் முடிச்சு இன்னும் இறுகும் போலத்தான் இருக்கிறது. அடையாளம் காண முடியாத நபர்களால் இந்த மூன்று ஆராய்ச்சியாளர்களும் மிரட்டப்பட்டதால் அவர்கள் 2004ம் ஆண்டு ஜூன் மாதம் தங்கள் ஆராய்ச்சியைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். பின்னர் தங்கள் ஆராய்ச்சியின் முடிவுகளை முகர்ஜி கமிஷனிடம் சமர்ப்பிக்கப் போவதாகவும் அதனால் பத்திரிக்கையாளர்களுக்கு இப்போதைக்கு வெளியிட முடியாது என்றும் மறுத்து விட்டனர்.

இதில் முக்கியமாக இரண்டு விஷயங்கள் வெளி வந்திருப்பதாகத் தெரிகிறது :

1. ஜோசெஃப் ஸ்டாலின் தனது பாதுகாப்பு மந்திரியுடனும் வெளியுறவுத்துறை அமைச்சருடனும் நடத்திய ஆலோசனை பற்றியது

2. இந்தியாவில் இருந்த சோவியத் உளவாளி ஒருவர் அனுப்பிய அறிக்கை.

இவை இரண்டுமே 1946ம் ஆண்டு (அதாவது நேதாஜி இறந்து விட்டார் என்று செய்தி வந்து ஒரு வருடத்திற்குப் பிறகு) நடந்திருக்கிறது. ஸ்டாலின் தன் சகாக்களுடன் இந்தியாவில் கம்யூனிசத்தை தழைக்கச் செய்வது பற்றியும் அதில் சுபாஷ் சந்திர போஸின் பங்கு பற்றியுமே ஆலோசனை நடத்தியதாகத் தெரிய வந்திருக்கிறது. மேலும் பிரிட்டிஷ் ஆவணங்கள்படி நேதாஜி சென்ற விமான விபத்து நடப்பதற்கு முதல் நாள் போஸ் சோவியத் நாட்டிற்குத் தப்பிச்செல்ல விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்டிருக்கிறது. இன்னுமொரு அறிக்கையில் அந்த விமான விபத்தே ஒரு சூழ்ச்சி என்றும் அது திட்டமிடப்பட்டக் கட்டுக்கதை என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு மேலும் ஆதாரமாக ஜப்பானிய நாளிதழ் ஒன்று 1945ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி இதழில் போஸ் டோக்கியோ வழியாக சோவியத் யூனியனுக்குச் செல்வதாக செய்தி வெளியிட்டிருந்தது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 23ம் தேதி அன்று முகர்ஜி கமிஷன் அந்த மூன்று ஆராய்ச்சியாளர்களை அவர்களிடமுள்ள எல்லா ஆவணங்களையும் அதன் மொழிபெயர்ப்புகளையும் சமர்ப்பிக்குமாறு பணித்தது. இதற்கிடையில் இந்திய உள்துறை அமைச்சு போஸ் உடலை எரித்த சாம்பலைப் பற்றிய ஃபைலையும் அவருக்கு பாரத ரத்னா பட்டம் வழங்கியது பற்றிய ஃபைலையும் கமிஷனிடம் கொடுக்க மறுத்து விட்டது. அந்த ஃபைல்களை வெளியிட்டால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என்ற காரணத்தைக் காட்டி அது மறுத்துவிட்டது. இது நேதாஜியைப் பற்றி வேறெந்த விவரமும் வெளியே வந்து விடக்கூடாது என்ற உள்நோக்கத்தோடு திட்டமிடப்பட்டச் செயல் என்று கூறுகின்றனர். அவரைப் பற்றிய மேல் விவரங்கள் வெளியே தெரிந்து விட்டால், நேதாஜிக்கு நேரு இழைத்த வஞ்சகச் செயல்களும் மக்களுக்குத் தெரிந்துவிடும் என்று சம்பந்தப்பட்டவர்கள் அஞ்சுவதாலேயே சூழ்ச்சிகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இதற்கு முந்தைய கோஸ்லா கமிஷனிடம் விசாரணையின் போது அப்போதிருந்த இந்திரா காந்தியின் அரசு நேதாஜி-நேரு சம்பந்தப்பட்டப் பல கோப்புகள் காணாமல் போய்விட்டன என்றும் மற்ற கோப்புகளை அழித்து விட்டார்கள் என்று கூறியிருந்தது. உண்மையில் நேதாஜி சம்பந்தப்பட்ட எல்லாக் கோப்புகளுமே ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த போது அவரது நேர் கண்காணிப்பில் தான் இருந்தது என்றும் நேருவின் காரியதரிசியாக இருந்த மொஹமத் யூனுஸ் தான் அக்கோப்புக்களை கையாண்டு வந்தார் என்றும் அறியப்படுகிறது.

பிரிட்டிஷ் உளவுத்துறையின் அறிக்கை ஒன்று நேதாஜி ரஷ்யாவிற்குத் தப்பிச் செல்லுமுன் நேருவுக்கு ரகசிய கடிதம் ஒன்றை அனுப்பியதாகக் கூறுகிறது. இதைக் கோஸ்லா கமிஷன் முன்பு ஷ்யாம்லால் ஜெயின் என்பவர் உறுதிபடுத்தியுள்ளார். அவர் கூற்றுப்படி நேரு தன்னை 1945ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 அல்லது 27ம் தேதியன்று கடிதங்களைத் தட்டெழுத்துச் செய்யக் கூப்பிட்டனுப்பினார் என்றும் அப்போது கையால் எழுதப்பட்ட ஒரு கடிதத்தை நான்கு நகல்கள் எடுக்குமாறு கூறினார் என்றும் சொல்லியிருக்கிறார். அந்தக் கடிதத்தில் போஸ் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி சைகானிலிருந்து விமானத்தில் மஞ்சூரியாவிற்குச் சென்று விட்டதாகவும் அங்கிருந்து ஒரு ஜீப்பில் மற்ற நால்வர்களுடன் ரஷ்யாவை நோக்கிச் சென்று விட்டதாகவும் இருந்தது என்று கூறியிருக்கிறார். மேலும் அந்தக் கடிதத்தில் இருந்ததாக அவர் ஞாபகப்படுத்திக் கூறிய விஷயங்கள் - 'போஸுடன் சென்ற அந்த நால்வரில் ஒருவர் ஜப்பானியரான ஜெனரல் ஷிடை. மூன்று மணி நேரம் கழித்துத் திரும்பிய அந்த ஜீப் போஸ் வந்த விமான ஓட்டியிடம் தகவல் தெரிவித்தவுடன் விமானம் டோக்கியோவுக்குச் சென்று விட்டது '.

அதற்குப்பிறகு ஜெயின், நேரு சொல்லச் சொல்ல ஒரு கடிதத்தைத் தட்டெழுதியிருக்கிறார். அக்கடிதம் பிரிட்டிஷ் பிரதம மந்திரி அட்லிக்கு எழுதியது என்று அவரே கூறியிருக்கிறார். அக்கடிதத்தில் நேரு கீழ்கண்டவாறு எழுதச் சொன்னார் என்று ஜெயின் கோஸ்லா கமிஷனிடம் தெரிவித்திருந்தார் :

'டியர் மிஸ்டர். அட்லி,

உங்கள் போர்க்கைதியான சுபாஷ் சந்திர போஸை ரஷ்ய எல்லைக்குள் நுழைய ஸ்டாலின் அனுமதித்ததாக நம்பத்தகுந்தவர்களிடமிருந்து நான் அறிகிறேன். இது ரஷ்யர்களுடைய நம்பிக்கைத் துரோகம். ரஷ்யா பிரிட்டனுக்கு நேச நாடாக இருப்பதால் இதை அவர்கள் அனுமதித்திருக்கக்கூடாது. தயவு செய்து ஆவன செய்யவும்.

இப்படிக்கு உண்மையான,

ஜவஹர்லால் நேரு '

இதை பாராளுமன்ற உறுப்பினர் சாமர் குஹா அவையில் வெளிப்படுத்தியபோது அவரைப் பலவாறும் ஏசினார்கள். நேருவின் குடும்பத்திற்கு களங்கம் கற்பிக்கச் செய்த சூழ்ச்சி என்று குஹாவைச் சாடினார்கள். ஆனால் பிற்பாடு சேகரித்தத் தகவல்களின் அடிப்படையில் நேருவுக்கு இந்த விஷயத்தில் இருந்த பங்கு சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஊர்ஜிதமாகியிருக்கிறது என்று நம்பப்படுகிறது. அவ்வாறு ஊர்ஜிதமான விஷயங்கள் :

பிரிட்டிஷ் உளவுத்துறை நேதாஜியிடமிருந்து நேருவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது என்பதை உறுதி செய்துள்ளது. அதையே ஷ்யாம்லால் ஜெயினும் உறுதி படுத்தியுள்ளார்.

நேதாஜி ரஷ்யாவிற்குத் தப்பிச்செல்ல உடந்தையாக இருந்த கர்னல் தடா என்பவர் 1951ம் ஆண்டு எஸ்.ஏ ஐயரிடம் ஜப்பானியர்கள் நேதாஜி மஞ்சூரியா வழியாக ரஷ்யாவிற்குச் செல்ல ஏற்பாடுகள் செய்வதாக ஒத்துக்கொண்டார்கள் என்று கூறியுள்ளார்.

ஜெயின் கூற்றை கோஸ்லா கமிஷன் மறுக்கவோ அல்லது அவர் சொல்வது பொய் என்று கூறவோ இல்லை.

பிரதமரின் நேர் கண்காணிப்பில் இருக்கும் கோப்புகள் தொலைந்து விட்டதாகவும் அழிக்கப்பட்டு விட்டதாகவும் அரசு தரப்பில் கூறியது எதையோ மறைப்பதற்கான ஆயத்தமாகவே இருக்கக் கூடும்.

நேரு சிங்கப்பூருக்கு வருகை தந்த போது பிரிட்டிஷ் அட்மிரல் அவரிடம் கூறிய அறிவுரை. இதை நேருவுடன் சென்ற ஜன்மபூமி நாளிதழின் ஆசிரியர் அம்ரித்லால் சேத் சரத் சந்திர போஸிடம் கூறியுள்ளார். அந்த அறிவுரைப்படி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் சாகவில்லையென்றும், நேதாஜியைப்பற்றி தொடர்ந்து உயர்வாகப் பேசிக்கொண்டிருந்தால் அவர் திரும்பியவுடன் சுதந்திர இந்தியாவை அவருக்கே விட்டுக் கொடுக்கும்படியாகிவிடும் என்றும் அதனால் INAவை இந்திய ராணுவத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. முதல் நாள் இறந்த INA வீரர்களின் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய நேரு, அட்மிரலிடம் பேசிய பிறகு மறு நாள் INA சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மறுத்து விட்டதாகத் தெரிகிறது.

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய பிறகு நேரு நேதாஜியைப்பற்றி எங்குமே பேசவில்லை. அடுத்த பத்து ஆண்டு காலத்தில், நேரு பிரதமர் ஆனபிறகும் கூட நேதாஜியின் பெயரைக் கூட அவர் சொன்னதில்லை.

1950 வரை ஆல் இந்தியா ரேடியோவில் நேதாஜி பற்றிய சிறப்புப் பார்வையோ அல்லது அவரது பிறந்த நாள் பற்றிய அறிவிப்போ ஒரு நிமிடத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டிருந்ததாக ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

நேரு பிரதமராக பதவியேற்ற பிறகு முந்தைய (பிரிட்டிஷ்) வேவல் அரசுக்கு பிரிட்டிஷ் உளவுத்துறை அனுப்பிய ரகசிய அறிக்கைகளின் நகல்களைப் பெற்றுக்கொண்டார். அவ்வறிக்கைகளில் நேதாஜி ரஷ்யாவிற்குச் சென்று விட்டார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் நேருவோ இந்தியாவின் பிரதமராக ரஷ்ய அரசாங்கத்திடம் அவ்வறிக்கைகளைப் பற்றி அதிகாரப்பூர்வமாகப் பேசவேயில்லை. மேலும் நேதாஜியின் மறைவு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை தொடர்ந்து நிராகரித்து வந்திருக்கிறார். பின்பு அவர் அமைத்த ஷா நவாஸ் கான் கமிஷன் கூட 'ராதா பெனோட் பால் ' தலைமையின் கீழ் அதிகாரப்பூர்வமற்ற விசாரணையை நடத்த விடக்கூடாது என்ற நோக்குடன் அமைக்கப்பட்ட ஒரு கண் துடைப்பே என்பது ஊர்ஜிதமாகியதாகக் கூறப்படுகிறது.

நேதாஜியின் மறைவு குறித்து நம்பவே முடியாத அளவுக்கு வெளியாகி இருக்கும் உண்மைகளும் திடுக்கிடவைக்கும் தகவல்களும், பொய்யாகப் பிரசாரப் படுத்தப்பட்ட அவரது மறைவும் இந்திய மக்களைப் பொருத்தவரை மிக மிக முக்கியமான விஷயங்கள். நேதாஜியின் மறைவு பற்றிய முகர்ஜி கமிஷனின் உண்மைக் கண்டுபிடிப்புகள் பற்றிய அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிடுவது இன்றியமையாதது. அதைப் பற்றி அறிந்து கொள்வது ஒவ்வொரு இந்தியனின் தார்மீக உரிமையும் ஆகும். இது நடக்குமா ? பொறுத்திருந்துப் பார்ப்போம். கெடுவை நீட்டிக்கவில்லையென்றால் முகர்ஜி கமிஷனின் காலக்கெடு மே மாதத்துடன் முடிவடைகிறது.