Tuesday, 1 March 2011

பச்சைப் பசேல் என்று காட்சி கொடுக்கும் ஆறு!

பொதுவாக வயல்கள்தான் பச்சைப் பசேல் என்று காட்சி அளிக்கின்றன.

ஆனால் கனடாவில் உள்ள ஆறு ஒன்று திடீர் என்று பச்சை நிறமாக மாறி காட்சி கொடுக்க்கின்றது.

கடந்த வருட இறுதியில் இருந்து இம்மாற்றம் நேர்ந்து உள்ளது.

காரணம் என்ன என்று தெரியவில்லை.

ஆனால் இது ஒரு இயற்கையான மாற்றம் என்று கூறப்படுகின்றது.

இந்த ஆற்றின் பெயர் Goldstream River என்பது.

Goldstream Park இல் அமைந்து உள்ளது.

உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளையும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்து இழுக்கின்றது.

பார்ப்பவர்களின் கண்களை நம்ப முடியவில்லைத்தான்.

நீங்கள் இங்கு புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை காணலாம்










கோழிகளுக்கு அடித்திருக்கும் இராஜயோகம், உல்லாசமாக தங்க விசேட ஹோட்டல்

அமெரிக்காவில் உதயம் ஆகி உள்ளது கோழிகளை தங்க வைக்கும் ஹோட்டல்.

கோழிகள் தங்க என்று முதன் முதல் உலகில் அமைக்கப்பட்ட வித்தியாசமான ஹோட்டல் இது.

மனிதர்களுக்கு பதிலாக கோழிகள் தங்க வைக்கப்படுவது இதன் விசேடம்.

கோழிகளை வளர்ப்பவர்கள் வீட்டை விட்டு தூரச் செல்கின்றபோது கோழிகளை இங்கு பத்திரமாக தங்க வைத்து விட்டு செல்ல முடியும்.

கோழிகளுக்கு என்று விசேட அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கோழிகள் அமர்ந்து இருந்து சாப்பிட கதிரைகள் ஒழுங்கு பண்ணப்பட்டு உள்ளன. கோழிகளுக்கு தேவையான உணவு, குடி பானங்கள் ஆகியனவும் தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுகின்றன.



தங்குமிட கட்டணம் 02 பவுண்டுகள் வரை.

மக்களின் மகத்தான வரவேற்பை இப்புதிய ஹோட்டல் பெற்று உள்ளது.








இந்தியச் சிறுவனுக்கு நெஞ்சில் கால்



இந்தியாவின் Buxar, Bihar என்ற இடத்தில் வாழும் 8வயது நிரம்பிய தீபக் குமார் பஸவான் என்ற சிறுவனுக்கே இந்த விசித்திரமான உடல் காணப்படுகிறது.

சிறுவனின் நெஞ்சுப்பகுதியில் இருந்து மேலதிகமாக இரு கால்கள் வெளியே வந்து காணப்படுகிறது. அதனுடன் சிறியதாக இரு கைகளும் காணப்படுவது இன்னும் அதிர்ச்சியை தோற்றுவிக்கின்றது.

நெஞ்சில் காணப்படும் மேலதிகமான அந்த உடல் சிறுவன் நடக்கின்ற போழுதெல்லாம் பெரும் சுமையை தோற்றுவிக்கின்றது.

இந்த சிறுவனின் இந்நிலமை தொடர்பில் வைத்திய ரீதியாக அதனை அகற்ற பெற்றோர் பெரும் விருப்பப்பட்ட போதிலும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் அவனுடைய பெற்றோருக்கு அது எட்டாக்கனியாகவே காணப்படுகிறது.

நாளாந்த வருமானமாக வெறும் 200ரூபாய்கள் மட்டுமே பெறக்கூடிய எம்மால் சிறுவனுக்கு ஏற்பட்டிருக்கும் மேலதிக உடலை அகற்ற எவ்வாறு வைத்தியரை நாடுவது என கவலை தெரிவித்துள்ளனர்.

உலகின் மிகப் பெரிய "குடும்பஸ்தன்' ஜியோனா சானா: 39 மனைவிகள்; 94 குழந்தைகள்

பலதார மணம் தடை செய்யப்பட்டுள்ளது என்றாலும், உலகிலேயே அதிகமான மனைவிகளை கொண்டு, பெரிய குடும்பமாக வாழ்பவர் என்ற பெருமையை, ஒரு இந்தியரே பெற்றுள்ளார். வடகிழக்கு மாநிலமான மிசோரமைச் சேர்ந்த ஜியோனா சானா என்ற, "இளைஞர்' தான், 39 மனைவிகளுடன், பெரிய குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.

விலைவாசி விண்ணை முட்டும் இந்த காலகட்டத்தில், ஒரு மனைவி, இரண்டு குழந்தைகளை வைத்து குடும்பம் நடத்துவது என்பதே, இமாலய சாதனை. ஆனால், அந்த காலத்தில் மன்னர்களும், பிரபுக்களும் ஏராளமான மனைவிகளை கொண்டிருந்தனர். ராமாயணத்தில், தசரத சக்ரவர்த்தி, 60 ஆயிரம் மனைவியருடன் வாழ்ந்தார் என்று கூறப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, ஒருவனுக்கு ஒருத்தி என்பது சட்டமாக்கப்பட்டது. குறிப்பிட்ட சில சமூகங்களை தவிர்த்து, இச்சட்டம் கடுமையாக பின்பற்றப்படுகிறது. வடகிழக்கு மாநிலமான மிசோரமைச் சேர்ந்த ஜியோனா சானா என்பவர், 39 மனைவிகளுடன் வாழ்ந்து, உலகின் மிகப் பெரிய குடும்பத்தை கொண்டவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 39 மனைவிகள் மூலம் 94 குழந்தைகளை பெற்றுள்ளார். தற்போது இவர் வீட்டில், 14 மருமகள்களும், 33 பேரக் குழந்தைகளும் உள்ளனர். தனது பெரிய குடும்பத்தை பராமரிப்பதற்காக, தனது சொந்த கிராமத்தில், 100 அறைகள் கொண்ட ஒரு மாளிகையை அவர் கட்டினார்.
இந்நிலையில், தனது குடும்பத்தினரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று விரும்பிய ஜியோனா சானா, தனது அடுத்த திருமணத்திற்காக பெண் பார்க்கும் படலத்தை துவக்கியுள்ளார். தன்னைச் சுற்றி வரும் பல பெண்களில் இருந்து ஒருவரை அவர் தேர்ந்தெடுக்க உள்ளதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். தற்போது 67 வயதான ஜியோனா சானா, உள்ளூர் பெண்களை தவிர்த்து, அமெரிக்கா சென்று, அங்கு ஒரு பெண்ணை பார்த்து மணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளார். திருமணத்தில் அதிக நாட்டம் கொண்ட ஜியோனா சானா, தனது மனைவிகளுக்கு அறைகளை ஒதுக்குவதில் கவனமாக இருக்கிறார். இளம் மனைவிகளை, தனது பிரத்யேக படுக்கை அறைக்கு பக்கத்தில் உள்ள அறைகளிலும், வயதான மனைவிகளை, தனது மாளிகையின் ஒதுக்குப் புறங்களில் அமைக்கப்பட்டுள்ள மற்ற அறைகளிலும் தங்க வைத்துள்ளார். "நான் கடவுளின் சிறப்புக் குழந்தை. அதனால் தான், என்னை கவனித்துக் கொள்வதற்காக ஏராளமான சொந்தங்களை எனக்கு கொடுத்துள்ளார். நான், 39 மனைவிகளின் கணவன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த வகையில் நான் அதிர்ஷ்டக்காரன்' என்று கூறியுள்ளார், "காதல் மன்னன்' ஜியோனா சானா.










அமெரிக்காவில் இறந்தவர் மேயராக தேர்ந்து எடுக்கப்பட்ட வினோதம்

அமெரிக்காவில் டென்னசி மாநிலத்தில் உள்ளது ட்ரேசி சிட்டி. 1,652 பேர் மட்டும் வசிக்கும் இந்த நகரில் மேயர் தேர்தல் நடந்தது. இதில் இப்போதைய மேயர் பார்பரா ப்ராக்கை எதிர்த்து கேரி கியரி உள்பட 3 பேர் போட்டியிட்டனர். அவர் கடந்த மாதம் மாரடைப்பால் கேரி கியரி மரணம் அடைந்தார். தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்ட பிறகு அவர் மரணம் அடைந்ததால், ஓட்டுச்சீட்டில் அவர் பெயர் நீக்கப்படவில்லை.

தேர்தல் நடந்தது. வாக்களித்த மக்களில் பெரும்பாலானவர்கள் கேரி கியரிக்கு ஓட்டுப்போட்டு அவரை மேயராக தேர்ந்து எடுத்து இருந்தனர். அவர் 2-வது இடம் பெற்றவரை விட அவர் 3 மடங்கு ஓட்டுக்கள் அதிகம் பெற்று இருந்தார். இதுகுறித்து அவரது மனைவி சூசன் கூறுகையில், இது எனக்கு ஆச்சரியத்தை தரவில்லை. அவர் மரணம் அடைந்த அன்று அனுதாபம் தெரிவிக்க வந்தவர்கள், அவர் இறந்து விட்டால் என்ன நாங்கள் அவருக்கு தான் ஓட்டுப்போடுவோம் என்று கூறினார்கள் என்று தெரிவித்தார்.

கியரி மரணம் அடைந்தபோது அவருக்கு வயது 55. அவர் இறந்து விட்டார் என்பது எங்களுக்கு தெரியும். இப்போதைய மேயர் பார்பராவை எதிர்த்து தான் நாங்கள் இறந்து போன கியரிக்கு ஓட்டுப்போட்டோம் என்று அந்த நகரவாசி கிறிஸ் ரோஜர்ஸ் தெரிவித்தார். இப்போதைய மேயர் பார்பரா கூறுகையில், இறந்து போன ஒருவருக்கு ஒட்டுப்போட்டு ஜெயிக்க வைத்து இருப்பது எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது என்று குறிப்பிட்டார். இறந்துபோன ஒருவரை தேர்ந்து எடுத்ததால், மேயர் பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு கவுன்சிலர்கள் ஓட்டுப்போட்டு தங்களில் ஒருவரை தேர்ந்து எடுத்து மேயராக பதவியில் அமர்த்துவார்கள்.

உலகின் மிகவும் காரமான மிளகாய்

கும்பிரியாவை சேந்த ஜெரால்ட் ஃபவ்லர் என்னும் விவசாயி, உலகின் மிகவும் காரமான மிளகாயை விளைவித்து சாதனைப் படைத்துள்ளார். சுமார் ஐந்து ஆண்டுகளாக மிள்காய் செய்கையில் ஈடுபட்டு வரும் ஜெரலாட் மிகவும் காரமான மூன்று மிளகாய் வகைகளை கலவை செய்து இந்த மிகவும் காரமான மிளகாயை உருவாக்கி விளைவித்துள்ளார். காரத்தைக் கணிக்ககூடிய ஸ்கோவில் அளவில் இந்த மிளகாயின் காரம் 1,359,000 அளவு வந்ததைப் பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இந்த மிளகாயில் capsaicin என்னும் உட்பொருள் இருப்பது இதன் காரத்தை அதிகரிக்கச் செய்துள்ளதாம். இந்த மிளகாய் செம காரமாக இருப்பதாக அதை சும்மா இல்லாமல் ருசிப் பார்த்த சில சுற்றுலாப் பயணிகள் கூறினர்..

நம்ப முடியவில்லை, ஆனால்! இது உண்மை



இது உண்மையிலும் உண்மை. ”யாய்” என்ற இதழிலிருந்து...

அமெரிக்கக் குடியரசுத் தலைவர்களான ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் கென்னடிக்கும் உள்ள ஓர் அதிசய, அரிதான ஒற்றுமையான நிகழ்வுகளை ஒப்பு நோக்கினால் யாருக்குத்தான் ஆச்சர்யமாக இராது!

· ஆப்ரகாம் லிங்கன் காங்கிரசில் தேர்வானது - 1846ல்

· கென்னடி காங்கிரசில் தேர்வானது - 1946ல்

· லிங்கன் அதிபரானது - 1860ல்

· கென்னடி அதிபரானது - 1960ல்
· ஆங்கிலத்தின் லிங்கன், கென்னடி இருவருக்கும் ஏழு எழுத்துக்கள்

· இரண்டு பேருமே சிவில் உரிமையில் முனைப்புடன் இருந்தனர்

· இருவருமெ சுடப்பட்டது வெள்ளிக்கிழமையன்று

· இருவருமே தலையில் குண்டுபாய்ந்து இறந்தனர்

· இருவரையமே தலா ஒரே ஒரு குண்டுதான் சுட்டு வீழ்த்தியது; அதாவது கொலையாளிகள் ஒருமுறைதான் சுட்டனர்

· இருவருமே சதித்திட்டத்தால் கொலை செய்யப்பட்டனர் என்ற வதந்தி நிலவியது

· இருவருமே அந்நாட்டின் தெற்குப் பகுதியைச் சார்ந்தவர்கள்

· அதேபோல் அதற்குப் பின் வந்தவர்களும் தெற்குப் பகுதியைச் சார்ந்தவர்கள்

· ஆண்ட்ரூ ஜான்சன் 1808-ஆம் ஆண்டு பிறந்தவர்

· லிண்டன் ஜான்சன் 1908-ஆம் ஆண்டு பிறந்தவர்

· லிங்கனைச் சுட்டுக்கொன்ற ஜான் வில்கிஸ் பூத் 1839-ஆம் ஆண்டு பிறந்தவன்

· கென்னடியைச் சுட்டுக்கொன்ற லீ ஹார்வி ஆஸ்வால்ட் 1939-ஆம் ஆண்டு பிறந்தவன்

· இருவரின் ஆங்கிலப் பெயரெழுத்துக்களும் 15 எழுத்துக்களைக் கொண்டவை

· பூத், லிங்கனைச் சுட்டபின் அரங்கிலிருந்து சேமிப்புக் கிடங்கை நோக்கி ஓடும்போது பிடிபட்டான்

· கென்னடியைச் சுட்டபின் சேமிப்புக் கிடங்கிலிருந்து அரங்கத்தை நாடி ஓடியபோது பிடிபட்டான்

· லிங்கன் கொலை பற்றி ஜான் என்பவர் மட்டுமே எழுதினார்

· கென்னடி கொலையை ஆப்ரகாம் என்பவர் மட்டும் படப்பதிவு செய்தார்

· லிங்கன் சுடப்படும் ஒருவாரத்திற்கு முன் மன்றோ மேரிலேண்டில் தன் நண்பர்களுடன் இருந்தார்

· கென்னடி தனது பெண் நண்பரான மர்லின் மன்றோவடன் இருந்தார்

· லிங்கனின் மகன் “டாட்“ன் இறுதிச்சடங்கு 16-7-1871-லும், கென்னடியின் மகன் JUNIOR கென்னடியின் இறுதிச் சடங்கு 16-7-1999-லும் நடந்த்து

· அதிகாரப்பூர்வமற்ற மற்றுமொரு ஒற்றுமை

· லிங்கனின் உதவியாளர் பெயர் கென்னடி

· கென்னடியின் உதவியாளர் பெயர் லிங்கன்.

இந்த ஒற்றுமையை என்னவென்று சொல்வது?

”யாய்” என்ற இதழிலிருந்து...

ராஜ நாகங்கள்- ரேய ஹன்டர்

இவர் பெயர் ரேய ஹன்டர், இவர் பாம்பு பிடிபதிலும் அதை பத்தி ஆராய்சிகள் நடத்துவதிலும் ஆர்வம் உடையவர். இவர் பாம்பு கடிக்கு அவசர சிகிச்சை அளிப்பதில் திறமை வாயந்தவர்.

14 அடி ராஜ நாகம்

12  அடி ராஜ நாகம்

லியுசிஸ்டிக் மோனோகிளேட் ராஜ நாகம்

இந்தியன் ராஜ நாகம்

மஞ்சள் தொப்பி ராஜ நாகம்

ரெட் ராஜ நாகம்

குழந்தை ரெட் ராஜ நாகம்

12  அடி ராஜ நாகம் நிகழ்படம்
இவர் பலமுறை பாம்பு கடி வாங்கி இருக்கிறார். இருந்தும் அவருக்கு பாம்புகளின் மேல் உள்ள ஆர்வம் குறைய வில்லை.
ராக் இரட்டேல் பாம்பு கடித்தபின் ஐ.சி.யு இருக்கும் புகைப்படம்
நன்றி : ரேய ஹன்டர் மற்றும் அவர் இணையதளத்துக்கும்

நண்பர்களை மரபணு தான் தேர்வு செய்யும்: ஆய்வுத் தகவல்


[Image: 500x_dna-art.jpg]

 

னக்கு உரிய நண்பர் யாராக இருக்க வேண்டும் என்பதை ஒருவரது மரபணு தான் தீர்மானிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிந்துள்ளது.

மனிதர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட குணநலன்கள், தனிப்பட்ட பழக்க வழக்கங்களை கொண்டுள்ளனர். அவர்களின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் ஒழுக்கம் சார்ந்த இயல்புகளை அவனது மரபணு தீர்மானிப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அதே போன்று ஒருவர் தனக்கு ஏற்ற நண்பர்கள் யார் என்பதை தேர்வு செய்ய வேண்டும் என்பதை அவரது மரபணு தான் தீர்மானிப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

மரபியல் பண்பு அல்லது மரபணு வகைகளின்படி குறிப்பிட்ட ஆறு மரபணுக்கள் தங்களுக்கு ஏற்ற நண்பன் யார் என்பதை தீர்மானிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இளம் வயதில் எதிர் பாலினத்தவரிடம் ஏற்படும் ஆர்வம் அல்லது இனக்கவர்ச்சியைப் போன்றும், இனம் இனத்தோடு சேரும் என்பது போன்றும், இந்த மரபணுக்கள் தங்களுக்கு ஏற்ற நண்பர்கள் இவர் தான் என்று அடையாளம் காணுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.