ஒக்டோபஸ்சின் மூளையில் சராசரியாக 300பில்லியன் நியூரோன்கள் உள்ளன.
நத்தைகள் 15 வருடங்களுக்கும் அதிகமாக வாழக்கூடியவையாகும்.
ராஜ நாகத்தின் விஷம் மிகவும் அபாயகரமானதாகும். ராஜ நாகத்தின், 1கிராம் விஷமானது 150 பேரைக் கொல்லக்கூடியதாகும்.
சுண்டெலிகளின் இதயத்துடிப்பு நிமிடத்துக்கு 650 தடவைகளாகும்.
மின்மினிப்பூச்சிகளில், ஆண் மின்மினிப்பூச்சிகளே பறக்ககூடியவையாகும்.
பூனைக்குட்டிகள் பிறக்கும்போது குருடாகவும், செவிடாகவும் காணப்படும்.
உலகில் மிகச்சிறிய கிளி இனமாக பிக்மி (Pygmy) கிளிகள் விளங்குகின்றன. இந்த இன கிளிகளின் சராசரி நீளம் 8சென்ரி மீற்றர்கள் ஆகும்.
இறைச்சியினை உண்ணுகின்ற ஒரே கிளி இனமாக அவுஸ்திரேலியாவின் கியா இன கிளிகள் விளங்குகின்றன.
குதிரைகள், எலிகள் ஆகியனவற்றினால் வாந்தியெடுக்க முடியாது. இதன் காரணத்தினால்தான் எலிகளுக்கு விஷம் வைத்து அவற்றின் தொல்லையினை கட்டுப்படுத்த முடிகின்றது.
உலகில் மிகப்பலமான ஒலியினை(188 டெசிபல்கள்) வெளிப்படுத்துகின்ற உயிரினம் நீலத்திமிங்கிலங்களாகும். இவற்றின் ஒலியினை 800கிலோமீற்றருக்கும் அப்பாலும் உணரமுடியுமாம்.
Google+.