எஸ்கிமோ
எஸ்கிமோக்கள் எனப்படுவோர் வடதுருவப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள். எஸ்கிமோ என்றால் அவர்கள் மொழியில் இறைச்சியை பச்சையாகச் சாப்பிடுபவர்கள் என்று பொருள். இவர்களில் இனூயிட் (Inuit) எனப்படுவோர் வடக்கு அலாஸ்கா, வட கனடா, கிறீன்லாந்து வரை காணப்படுகின்றனர். யூப்பிக் (Yupic) எனப்படுவோர் மேற்கு அலாஸ்காவிலும் சைபீரியாவின் வடகிழக்கு முனையிலும் வாழ்கின்றனர். இவர்களை விட அலாஸ்காவின் அலூசியன் தீவுகளிலும், ரஷ்யாவின் கம்சாத்கா கிராயிலும் வாழும் உனாங்கா எனப்படும் அலூட் மக்கள் மூன்றாவது வகையான எஸ்கிமோக்கள்.
எஸ்கிமோக்கள் குள்ளமாகவும், குட்டையான கால்களையும் உடையவர்கள். குளிர்காலத்தில் இவர்கள் இக்லூ என்றழைக்கப்படும் பனிக்கட்டிகளினால் ஆன வீடுகளில் வசிக்கின்றனர். கோடைகாலத்தில் மிருகங்களின் தோலால் ஆன கூடாரங்களில் வாழ்கின்றனர்.
எஸ்கிமோ என்ற ஆங்கிலச்சொல் ஆர்க்டிக் பகுதிச் செவ்விந்தியர்களின் மொழியில் இருந்து வந்தது. இச்சொல்லுக்கு பச்சை இறைச்சியை தின்பவர்கள் என்பது பொருள். எஸ்கிமோக்களிடம் ஒரு விசித்திர பழக்கம் இருந்து வருகிறது. அதிகப்படியாகக் குழந்தை பிறந்தால் அதை அவர்கள் கொன்று விடுவார்களாம். அதிலும் பெண் குழந்தை பிறந்தால் உடனடியாக கொலை தான். பிறந்த குழந்தையை பனிக்கட்டியில் வைத்து விடுவார்களாம். குழந்தை பனியில் விறைத்து இறந்து விடுமாம். அதிகப்படியான குழந்தைகளை தங்கள் கடவுள் விரும்புவதில்லை என்பது இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்.
|