வடுவூர் பறவைகள் காப்பகம் இது தஞ்சாவூர் மாவட்டத்தில்
மன்னார்குடிக்கும் தஞ்சாவூருக்குமான நெடுஞ்சாலையில் தஞ்சாவூரிலிருந்து 25கிமீ தூரத்தில் உள்ளது.
தண்ணீர் சேமிக்கப்பட்டு பயன் படுத்தப்படுகிறது
1999ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தப் பறவைகள் காப்பகம் உருவாக்கப்பட்டது,
மேட்டூர் அணையிலிருந்து சாகுபடிக்கென திறந்து விடப்படும் தண்ணீர் இங்கு சேமிக்கப்பட்டு பயன் படுத்தப்படுகிறது, வட கிழக்கு பருவமழையின் போது இயல்பாக பெறப்படும் மழைநீரும் சேர்ந்து இங்கு பறவைகள் இறங்கி ஏற வழிவகை செய்து விடுகிறது.
நீர்ப் பறவைகள் வந்து செல்கின்றன
40க்கும் மேற்பட்ட நீர்ப் பறவைகள் வந்து செல்கின்றன. நவம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 200,000 பறவைகள் வந்துள்ளன. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் இங்கு செல்வதற்கு ஏற்ற காலங்கள். அப்போது அதிகளவான பறவைகள் இங்கு வரும்.