Saturday 14 August 2010

உருளும் டயர்களை உருவாக்கியவர்

ரப்பர் டயர்கள் இல்லாமல் இன்றைய உலகப் போக்குவரத்து இல்லை. விண்ணில் பறக்கும் விமானங்கள் முதல், தரையில் ஓடும் இரு சக்கர வாகனங்கள், பேருந்துகள், பலசரக்கு வாகனங்கள் வரை டயர்களே அவற்றின் கால்கள்.



ரப்பரை வல்கனைசிங் மூலம் தயாரித் தால், அதனை எத்தனை அதிகமான வெப்பத் திலும் உருகாமல் வைத்திருக்கலாம் என்று முதலில் நிரூபித்தவர், அமெரிக்கரான சார்லஸ் குட் இயர்.


வல்கனைஸ்டு ரப்பர் பிறந்ததே யதேச்சை யாகத்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?


சிறுவயது முதல் ரப்பர் மீது ஆர்வம் கொண்டிருந்த சார்லஸ்குட் இயர், அதில் ஏதாவது சோதனைகள் செய்து கொண்டே இருந்தார். ரப்பரை எரிப்பது, பலவித பொருள்களைச் சேர்ப்பது என்று விதவிதமாகச் சோதனை செய்து பார்த்துக் கொண்டிருந்தார். ரப்பரை தீயில் இடும்போது எழும் துர்நாற்றம் தாங்கவில்லை என்று அக்கம்பக்கத்தினர் காவல் துறையில் புகார் செய்ய, காவல் துறையினர் அவரைத் துரத்திய கதையும் நடந்தது.


பின்னர் நியூயார்க் சென்ற குட் இயர், அங்கு ஒரு வாடகை அறையில் தனது பரி சோதனையைத் தொடர்ந்தார்.


ஒருநாள், ரப்பரையும் கந்தகத்தையும் கலந்து குட் இயர் ஆய்வு செய்து கொண் டிருந்தபோது அது சிதறி, எதிர்பாராமல் பக்கத்தில் இருந்த சூடான அடுப்பின் மீது சிதறிவிட்டது. பின்னர் அதை குட்- இயர் யதேச்சையாக எடுத்துப் பார்த்தபோது, ரப்பர் அதற்குரிய பிசுபிசுப்பான தன்மை இல்லாமல், ஒட்டாமல், மிருதுவாகவும், வளைந்து கொடுக்கும்தன்மை கொண்டதாகவும் இருந்தது. எந்தக் கடும் வெப்பத்திலும், குளிரிலும் அந்த ரப்பர் இந்தத் தன்மையை இழக்கவில்லை.


குட் இயரின் இந்தக் கண்டுபிடிப்பு ஒரு புதிய புரட்சியாக அமைந்தது. தனது கண்டுபிடிப்பால் குட் இயர் பெருஞ்செல்வம் சேர்த்தபோதும் பலரின் சூழ்ச்சிகளால் கடைசியில் எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்து, கடனாளியாகவே இறந்தார்.