Friday, 10 September 2010

செண்டினலியர்.




               இன்றுவரை எந்தச்சீர்திருத்தத்திற்கும் தன்னை உட்படுத்திக் கொள்ளாது கற்கால மாந்தர்களாக, வெளியுலகின் தொடர்போ,வெளியுலகத்தினரின் உதவியோ இன்றி ஒரு இனம் வாழ்கிறதென்றால் அது இவர்களாகத்தான் இருக்க முடியும்.இவர்கள் மிகவும் கொடூர குணமுடையவர்கள். இவர்கள் வாழும் வட செண்டினல் தீவை யாரும் நெருங்குவதில்லை. கரிய நிறம்,நல்ல உயரம்,நீண்ட கூந்தல்,ஆடையற்ற மேனி இது இவர்களின் அடையாளம்.பெண்கள் இடையில் இழை, தலைகளை உடையாய் உடுத்துகிறார்கள்.இவர்கள் சீரான உடல் வாகுடையவர்கள். வேட்டையாடுவது இவர்கள் தொழில்.இவர்களுடன் யாரும் உறவு வைத்துகொள்ள இயலாமையால் இவர்களைப்பற்றி அதிகம் தெரியவில்லை.60 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள வட செண்டினல் தீவில் வாழும் இவர்களின் மொத்த மக்கள் தொகை 80 பேர் என்று தீவு நிர்வாகச்செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இது ஒரு ஊகச்செய்தியாக இருக்கலாம்.ஏனெனில் ஒருவரும் போக இயலாத இந்தத் தீவில் இவர்களைப்பற்றிய செய்திகளை வெளியுலகம் அறிந்து கொள்வது கடினம்.