Friday, 10 September 2010

ஷோம்பென்




                 மாநக்காவரம் என்னும் பெரிய நிக்கோபார் தீவின் இருண்ட காடுகளுக்குள் வாழும் இவர்கள் நீக்ரீட்டோ இனம் போலன்றி சற்று வெளுப்பான நிறத்தில் இருக்கிறார்கள். திடமான உடற்கட்டுடன் சுமார் 150 செ. மீ. முதல் 160 செ. மீ வரை உயரம் உள்ளவர்கள். 55 கிலோ சராசரி எடை கொன்ட இவர்களின் பட்டுபோன்ற, நீண்ட, அடர்த்தியான தலைமுடி தோள்களில் அலை மோதும்.பாக்கு சுவைக்கும் பழக்கத்தால் காவியேறிய பற்கள். தினமும் குளிக்கும் விருப்புடையவர்கள்.இவர்களில் ஆண்கள் இடுப்பில் துணியால் ஆன கோமனமும் பெண்கள் இடையில் துணியும் அணிகிறார்கள். இரு பாலரும் மேனியை மூடுவதில்லை. பெண்கள் காதுகளில் கனமான, கூர்மையான குழைகளை அணிகிறார்கள்.

                இவர்கள் ஆடும் சாமியாட்டத்தை ' தமுழியர் ஆட்டம்' என்று சொல்கிறார்கள்.எல்லா வகையான உணவுகளுடன் தாழங்காயும் உண்பர்.முதலைகளுக்குப் பயந்து பரண்கள் மீது வீடு கட்டி வாழும் இவர்கள் தோற்றத்தில் திராவிடர்களைப்போன்று உள்ளனர். இவர்களின் பழக்க வழக்கங்கள் நம்மை ஒத்துக்காணப்படுவதால் இவர்கள் 11ம் நூற்றாண்டில் 2ம் ராஜேந்திர   சோழ மன்னன் விட்டுச்சென்ற தமிழர்களின் வாரிசுகளாக இருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இவர்களின் மொழியில் தமிழ்ச்சொற்களும் காணப்படுகிறது என்கிறார்கள். திரு பழ.நெடுமாறன் ஐயா அவர்களின் தமிழன் இழந்த மண் என்ற நூலில்                            அந்தமான்,நிகோபார்,சுமத்ரா,கம்போடியா,சிங்கப்பூர்,மலேசியா,மற்றும் இந்தோனேஷியா வரை தமிழர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததாக ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் கூறியுள்ளார்.