Tuesday, 31 August 2010

மனிதப் பெண் காந்தம்


மாபெரும் மனிதப் பெண் காந்தமாக இருந்து வருகின்றார் பிரித்தானியாவில் லண்டனின் வட பகுதியில் வாழ்ந்து வரும் 50 வயது உடைய Brenda Allison.


இவருடைய தோலில் இரும்புப் பொருட்கள் ஒட்டிக் கொள்கின்றன. காந்தத் தன்மை இல்லாத உலோகங்களும் இவரின் தோலில் ஒட்டி விடுகின்றன.
 
பாலர் பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே இவரது தோலின் அதிசய சக்தியை அவதானிக்க முடிந்தது என்று கூறுகின்றார்.அதாவது மின்சார பொருட்களில் இவரது தோல் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்ததைச் சிறுவயது முதலே அவதானித்து இருக்கின்றார்.

இருப்பினும் உலோகங்களை ஈர்க்கும் சக்தி அவரின் உடலுக்கு உண்டு என்று இவ்வருட ஆரம்பத்தில்தான் தெரிய வந்திருக்கின்றது. உலகில் ஏற்கனவே பலரும் இவ்வாறான காந்த சக்தி அவர்களுக்கு உண்டு என்று உரிமை கோரி வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.