Thursday 9 September 2010

ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனங்கள்


“ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனங்களை” சந்தித்துதான் இன் றைய உலக ஒழுங்கு உருவாக்கம் பெற்றுள்ளது. இந்த சுதந்திரப் பிரகட னங்களில் அனைத்துலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையும் நிராகரிக் கப்பட்டவையும் உள்ளன. அதேபோல் அனைத்துலக ஆதரவுக்காக காத் திருக்கும் பிரகடனங்களும் உள்ளன.
ஒரு தலைபட்சமான பிரகடனங்களுக்குப் பின்னரும் கூட அடிமை நாடு களாகவும் போரை நடத்த வேண்டியதான நிலையிலும் கூட பல நாடு கள் இருந்துள்ளன. இருந்தும் வருகின்றன.
அவைகளைப் பற்றிய ஒரு பார்வை:
ஐ.நாவின் பிறப்பின் முன் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனங்கள்
ஸ்கொட்லாந்து
1320 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசரான முதலாம் எட்வர்ட்டின் நீதி யற்ற தாக்குதல்களிலிருந்து தற்காத்துக்கொள்ள ஸ்கொட்லாந்து சுதந் திரப் பிரகடனத்தை வெளியிட்டது. அந்தப் பிரகடனத்தைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே அப்போதைய 22 ஆம் பாப்பரசர் ஜோன் அனுசர ணையாளராக செயற்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்கொட்லாந்தின் மீதான பிரித்தானியாவின் உரிமை கோரல் கள் கைவிடப்பட்டு 1328 ஆம் ஆண்டு பிரித்தானிய பேரரசர் மூன்றாம் எட்வர்டினால் ஏற்கப்பட்டது.
லத்தீன் அமெரிக்க நாடுகளின் சுதந்திரப் பிரகடனங்கள்
1800களின் தொடக்கத்தில் பிரெஞ்சுப் புரட்சி மற்றும் அமெரிக்கப்   புரட்சிக்கான யுத்தங்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளில் விடுதலைச்   சிந்தனைக்கு வித்திட்டன.
1810 மே 25 ஆம் நாள் ஸ்பெய்னின் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிரெஞ்சுப் படையணிகள்இ இராணுவ அதிகாரிகளைக் கொண்ட அரசாங்கத்தை அமைத்தது. அதனில் இணைந்து கொள்ளுமாறு இதர ஸ்பெய்ன் கொலனி நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்தது.
அப்போதைய ஸ்பெய்ன் காலனி நாடுகளாக லத்தீன் அமெரிக்க நாடுகள் இருந்தன. பிரெஞ்சினது கோரிக்கையை நிராகரித்த பராகுவே 1811 ஆம் ஆண்டு “ஒருதலைபட்ச சுதந்திரப் பிரகடனத்தை” அறிவித்தது.
1816 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் நாள் அர்ஜெண்டினா சுதந்திரப் பிரகட னம் வெளியிட்டது. அர்ஜெண்டினாவின் சுதந்திரப் பிரகடனத்தை 9 ஆண் டுகள் கழித்து 1825 ஆம் ஆண்டு பிரித்தானியா உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தது.
1822 ஆம் ஆண்டு போர்த்துக்கலின் ஆதிக்கத்திலிருந்த பிரேசில் தனது சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது.
1825 ஆம் ஆண்டு பொலிவியா தனது சுதந்திரப் பிரகடனத்தை தானே அறிவித்தது.
1828 ஆம் ஆண்டு அர்ஜெண்டினா- பிரேசில் யுத்தத்துக்குப் பின்னர் உருகுவேயும் தன்னை சுதந்திர நாடாகப் பிரடகனம் செய்தது.
மத்திய அமெரிக்க நாடுகள்
ஐக்கிய அமெரிக்க நாடுகள் உருவானதைத் தொடர்ந்து 1823 ஆம் ஆண்டு மத்திய அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இக்கூட்டமைப்பில் கோஸ்ரா ரிக்கா, எல் சல்வடோர், கௌதமாலா, ஹோண்டுராஸ், நிக்கரகுவா ஆகிய நாடுகள் உறுப்பு நாடுகளாக இருந் தன. ஆனால் இக்கூட்டமைப்பிலிருந்து 1838 ஆம் ஆண்டில் நிக்கரகுவா தானே பிரிந்து செல்வதாக அறிவித்தது.  அதனைத் தொடர்ந்து ஹோண் டுராஸ் மற்றும் கோஸ்ரா,  ரிக்கா ஆகிய நாடுகளும் பிரிந்து சென்றன.
இதனால் மத்திய அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு அக்கூட்டமைப்பு 1840 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது. எல்சவடோவர் நாடு தன்னை தானே சுதந்திர நாடாக 1841 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அறிவித்துக் கொண்டது.
எஸ்தோனியா
எஸ்தோனிய தேசிய இன மக்கள் வரலாறு நெடுகிலும் தங்களது சுய நிர்ணய உரிமையை மாறி மாறி அமைந்த வரலாற்றுப் பேரரசுகளிடம் இழந்திருந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரஸ்யப் பேரரசின் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டு இருந்தது எஸ்தோனியா. 1917 ஆம் ஆண்டு ரஸ்யப் புரட்சி நடந்தது. அதன் பின்னர் ரஸ்ய இராணுவத்துக்கு எதிராக ஜேர்மன் வெற்றி பெற்ற நிலையில் எஸ்தோனியாவின் மூத்த குடிமக் கள் “எஸ்தோனியா சுதந்திரப் பிரகடனத்தை 1918 ஆம் ஆண்டு பெப்ரு வரி 24 ஆம் நாள் வெளியிட்டனர். அந்தப் பிரகடனம் “எஸ்தோனிய” தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை உலகுக்கு அறிவித்தது. சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்ட பின்னர்,  சுதந்திரத்துக்கான போரை 2 ஆண்டு காலம் எஸ்தோனியா நடத்தியது. 1920 ஆம் ஆண்டு ரஸ்யாவுக்கு எதி ரான சுதந்திரத்துக்கான எஸ்தோனியாவின் யுத்தம் வெற்றியடைந்தது. எஸ்தோனியாவின் இந்த சுதந்திர வரலாறு நீடித்ததாக இல்லை. 1940 ஆம் ஆண்டு சோவியத் ரஸ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டது. 1990-களின் இறுதியில் சோவியத் ரஸ்யா உடைந்து நொறுங்கிய போது தனது சுதந் திர காற்றை எஸ்தோனியா சுவாசித்தது. இருப்பினும் 1918 ஆம் ஆண்டு எஸ்தோனிய வெளியிட்ட “ஒருதலைபட்ச சுதந்திரப் பிரகடனம்தான்” அந்நாட்டின் வரலாற்றில் சுதந்திர பிரகடன ஆவணமாக இடம்பெற்றுள்ளது.
பின்லாந்து
எஸ்தோனியாவைப் போலவே 1917 ஆம் ஆண்டு ரஸ்யப் புரட்சியைத் தொடர்ந்து பின்லாந்தும் தனது சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. 1917 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் நாள் பின்லாந்தின் நாடாளுமன்றம் பின்லாந்தின் சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்தது. அப்பிரகடனத்தை சோவியத்தின் உயர் நிர்வாகப் அமைப்பும் ஜேர்மனியும் ஸ்காண்டி நேவிய நாடுகளும் டிசம்பர் 22 ஆம் நாளே அங்கீகரித்தது.
கினியா பிசாவு
மேற்கு ஆப்பிரிக்காவில் போர்த்துகேய காலனி நாடாக இருந்த கினியா பிசாவு என்கிற நாடு. இதன் மொத்த மக்கள் தொகை 14 இலட்சம் பேர் தான். போர்த்துக்கேயர்களின் அடிமை வர்த்தகத்துக்கான நாடாக இருந்த அந்நாட்டில் 1956 ஆம் ஆண்டு முதல் சுதந்திரத்துக்கான ஆயுதக் குழு உருவானது.  அந்நாட்டின் சுதந்திரப் போருக்கு கியூபா உதவியது.
1973 ஆம் ஆண்டு விடுதலைக்காகப் போராடிய ஆயுதக் குழுவின் கட்டுப் பாட்டில் அந்நாட்டின் பெரும்பகுதி பகுதிகள் வந்தன.   அதனைத் தொடர்ந்து 1973 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 24 ஆம் நாள் ஒரு தலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனத்தை அந்நாடு வெளியிட்டது.
1973 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் 93-க்கு 7 என்ற வாக்குகளில்  சுதந்திரப் பிரகடனம் அங்கீகரிக்கப்பட்டது.
ஹெய்ட்டி
பிரெஞ்சு கொலனியின் கீழ் இருந்த ஹெய்ட்டியானது 1804 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாள் தனது சுதந்திரப் பிரகடனத்தை தானே வெளியிட் டது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே முதலாவது நாடாக சுதந்திரத் தைப் பிரகடனம் செய்தது ஹெய்ட்டி ஆனால் 1915 ஆம் ஆண்டு முதல் 1934 ஆம் ஆண்டு வரை சுதந்திர நாடாக இருந்த ஹெய்ட்டியை ஆக்கி ரமித்து அரசாட்சி செய்தது அமெரிக்கா அதன் பின்னர் சுதந்திர நாடாக இயங்கி வருகிறது.
அமெரிக்கா
1776 ஆம் ஆண்டு யூலை 4ஆம் நாள் வட அமெரிக்காவில் பிரித்தானி யாவுடன் அரசியல் தொடர்புகளை வைத்திருந்த 13 கொலனி நாடுகளை ஒருங்கிணைந்து சுதந்திரப் பிரகடனம் வெளியிடப்பட்டது. அமெரிக்கா வின் சுதந்திரப் பிரகடனத்திற்கு இடப்பட்டிருந்த தலைப்பு “13 ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஏகமனதான பிரகடனம்” என்பதாகும். இன்றளவும் அந்த ஜூலை 4 தான் அமெரிக்காவின் சுதந்திர நாளாக கடைப்பிடிக்கப் படுகிறது. அந்த சுதந்திர நாள் பிரகடனத்தை உருவாக்கியவர்கள், தோமஸ் ஜெப்பர்சன், ஜோன் ஆதம்ஸ், பெஞ்சமின் பிராங்களின் ஆகியோராவர்.
இந்தோனேசியா
இந்தோனேசியாவை நெதர்லாந்து ஆக்கிரமித்து டச்சு கிழக்கு இந்திய காலனியை ஏற்படுத்தியது. 20 ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவுக்குள் ஜப்பான் அத்துமீறி நுழைந்து கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து டச்சு ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற அந்தக் காலத்தில் ஹிரோசிமா-நாகசாமி மீது தாக்குதல் நடத்தப்பட்டு ஜப்பான் சரணடைந்த இரண்டே நாட்களில் 1945 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்தோனேசியாவின் தேசியவாதத் தலைவர் சுகர்னோ சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்து அரச தலைவரானார்.   அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனப் பாணியில் இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டது.
இதே காலகட்டத்தில் நெதர்லாந்து மீளவும் இந்தோனேசியாவை ஆக்கிரமிக்க முயற்சித்தது. இதனால் ஆயுத மற்றும் இராஜதந்திர மோதல்கள் ஏற்பட்டன. இது 1949 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்து இந்தோனேசியாவின் சுதந்திரப் பிரகடனத்தை அங்கீகரித்தது.
கொரியா
ஜப்பானிய கொலனி ஆதிக்கத்தின் கீழ் கொரியா இருந்த காலத்தில் கொரிய தேசியம் என்பது ஒடுக்குமுறைக்குள்ளானது. கொரிய மொழி, கலாச்சாரம் சிதைக்கப்பட்டன. கொரியாவின் கலாச்சார சொத்துக்கள் ஜப்பானால் சூறையாடப்பட்டன. 1900-களின் தொடக்கத்தில் கொரிய விடுதலை இயக்கங்கள் வீச்சோடு எழுந்தன. 1919 ஆம் ஆண்டு அமெரிக்காவின் உட்ரோ உல்சன், பாரிஸ் அமைதி மாநாட்டில் சுயநிர்ணய உரிமை தொடர்பாக ஆற்றிய உரையானது கொரிய மாணவர்கள் மத்தியில் விடுதலைக் கிளர்ச்சியைத் தீவிரமாக்கியது. அத்தகைய எழுச்சிகளுடன் மார்ச் 1 இயக்கம் என்ற இயக்கமும் தீவிரமாக களத்தில் இறங்கியது. மார்ச் 1919 ஆம் நாள் கொரியாவின் 33 தேசியவாதிகள் “ஒருதலைபட்ச சுதந்திரப் பிரகடனத்தை” வெளியிட்டனர். 12 மாதங்களில் இந்த போராட்டத்தை ஜப்பானிய ஆதிக்க அரசு ஒடுக்கியது. இந்தப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி 1இ500 ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. 20 இலட்சம் கொரியர்கள் இவற்றில் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் ஏறத்தாழ 7இ500 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 45 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சுதந்திரப் பிரகடனமே கொரியாவின் விடுதலைக்கும் வித்திட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
லிதுவேனியா
ஜேர்மனிய துருப்புக்கள் தனது நாட்டில் நிலை கொண்டிருந்தபோதும் 1918 ஆம் ஆண்டு லிதுவேனியா சுதந்திர நாடாக பிரகடனம் வெளியிட்டு ஜனநாயக கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தியது. அதன் பின்னர் லிதுவேனியா சோவியத் ஒன்றியத்தில் இணைக்கப்பட்டது. 1990-களில் சோவியத் ஒன்ரியம் வீழ்ந்தபோது சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேறி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்ட முதலாவது நாடு லிதுவேனியாவாகும்.  பிரகடனத்துக்குப் பின்னர் கெரில்லா யுத்தம் நடத்திய பிலிப்பைன்ஸ்
1898 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் நாள் ஸ்பெய்னின் கொலனி ஆதிக் கத்துக்கு எதிராக பிலிப்பைன்ஸ் சுதந்திரப் பிரடகனத்தை வெளியிட் டது.   ஆனால் பிலிப்பைன்சின் ஆக்கிரமிப்பாளர்களான அமெரிக்காவும், ஸ்பெயினும் இதனை ஏற்க மறுத்தன.  1898 ஆம் ஆண்டு ஜூன் 23 முதல் செப்ரம்பர் 10 வரை முதலாவது தேர்தல்கள் நடத்தப்பட்டன.
பிலிப்பைன்சின் அரச தலைவராக அகுனல்டோ தெரிவு செய்யப்பட்டார். முதலாவது பிலிப்பைன்ஸ் குடியரசானது 1899 ஆம் ஆண்டு அமைக்கப் பட்டது. இதனிடையே அமெரிக்காவுக்கும் ஸ்பெய்னுக்கும் இடையேயான ஒப்பந்தம் ஒன்றின் மூலம் ஸ்பெய்ன் வெளியேறிவிட பிலிப்பைன்சில் அமெரிக்கா நின்றது.  1899 ஆம் ஆண்டு அமெரிக்காவும் பிலிப்பைன்ஸ் குடியரசுக்கும் இடையே யுத்தம் வெடித்தது.
இந்த யுத்தத்தின் போது இடைக்கால உத்தியாக பிலிப்பைன்ஸ் அரச தலைவர் அகுனல்டோ, கெரில்லாப் போர் முறையை கடைப்பிடிக்க தெரிவு செய்தார். அமெரிக்க இராணுவத்துக்கு பெரும் சேதம் ஏற்படுத் தப்பட்டது. 1901 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் அரச தலைவர் அகுனல்டோ,  சில துரோகிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.  அதன் பின்னர் 1901 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் நாள் அமெரிக்காவின் அரசாட்சியை ஏற்பதாகவும் தனது படையினரின் ஆயுதங்களை ஒப்படைப்பதாகவும் அகுனல்டோ அறிவித்தார். அதன் பின்னரும் பிலிப்பைன்ஸ் விடுதலைக்கான யுத்தம் நடைபெற்றது.
1935 ஆம் ஆண்டு பிலிப்பைன்சுக்கு அரைவாசி சுயாட்சி உரிமை அளித்த அமெரிக்காஇ 1946 ஆம் ஆண்டு முழு சுதந்திரம் அளித்தது. 1898 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுதந்திரப் பிரகடனம் ஏற்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் மக்கள் இன்றளவும் சுதந்திரப் பிரகடன நாளை “கொடி நாளாக” கடைப்பிடித்து வருகின்றனர்.
ஐ.நா. பிறப்பின் பின்னர் வியட்நாம்
1887 இல் தென்கிழக்கு ஆசியாவில் இன்றைய வியட்நாம், கம்போடியா, லாவோஸ் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து பிரெஞ்ச் இந்தோசீனா என்கிற ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின் போது இந்தோசீனத்தில் இருந்த டொன்கின் பகுதியை ஜப்பான் பயன்படுத்த பிரான்ஸ் அனுமதிக்கத்தது. இதனைத் தொடர்ந்து ஒட்டுமொத்த இந்தோசீன ஒன்றிய ஆளுகையை ஜப்பான் கைப்பற்றியது. 1945 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசப்படும் நாள் வரை இந்த ஆதிக்கம் நீடித்தது.
இந்நிலையில் 1945 ஆம் ஆண்டு செப்ரம்பர் 2 ஆம் நாள் வியட்நாமிய விடுதலைப் பிரகடனத்தை ஹோசிமின் வெளியிட்டார்.   இதனைத் தொடர்ந்து பிரெஞ்சுப் படையினருக்கும் வியட்நாமியர்களுக்கும் இடையே மோதல் உருவானது.
1946 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் நாள் பிரெஞ்சு ஒன்றியம் மற்றும் இந்தோ-சீன கூட்டமைப்பில் வியட்நாம் ஒரு சுயாட்சி பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டது. வட வியட்நாமில் நிலைகொண்டிருந்த சீன இராணுவத்தை வெளியேற்றும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சீனப் படை வெளியேறிய உடன் மோதல் மூண்டது. ஹோசிமின் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் தப்பினார்.
1950 ஆம் ஆண்டு மீண்டும் வியட்நாமிய விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டார்.  அதே ஆண்டுகளில் ரஸ்யாவின் ஸ்டாலின் மற்றும் சீனாவின் மாவோவை ஹோசிமின் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் சோவியத் ரஸ்யா மற்றும் சீனாவினால் வியட்நாம் அங்கீகரிக்கப்பட்டது.
கெரில்லாப் போர் முறை மூலம் பிரெஞ்சுப் படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வட வியட்நாமிலிருந்து பிரெஞ்சுப் படைகள் வெளியேற வியட்நாமிய குடியரசுப் பிரகடனம் செய்யப்பட்டது. தென் வியட்நாமில் பிரெஞ்சு, பிரித்தானியா மற்றும் அமெரிக்கப் படைகள் நிலை கொண்டிருந்தன. 1954 ஆம் ஆண்டு அப்பிராந்தியத்திலிருந்து பிரெஞ்சுப் படைகள் வெளியேற அமெரிக்காவின் தலையீடு தொடங்கியது. அதுவே வியட்நாம் போருக்கும் வழிவகுத்தது.
இஸ்ரேல்
1947 ம் ஆண்டு பலஸ்தீனை இரண்டாகப் பிரித்து இஸ்ரேலை உருவாக்க அனைத்துலக நாடுகள் தீவிரம் காட்டின. இதனை அரபு லீக் எதிர்த்த நிலையில் 1948 ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் இஸ்ரேல், ஒருதலைபட்ச பிரகடனத்தை அறிவித்தது. இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்ட 11 ஆவது நிமிடத்தில் அமெரிக்கா இப்பிரகடனத்தை அங்கீகரித்தது. அதனைத் தொடர்ந்து கௌதமாலா, நிக்கரகுவா, உருகுவே ஆகிய நாடுகள் அங்கீகரித்தது. மே 17 ஆம் நாள் சோவியத் ரஸ்யா, இஸ்ரேலை அங்கீகரித்ததது. அதன் பின்னர் பல நாடுகள் இஸ்ரேலை அங்கீகரித்தன.
பலஸ்தீனம்
1988 ஆம் ஆண்டு பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் சட்டவாக்க அமைப்பான பலஸ்தீன தேசிய சபையானது பலஸ்தீன சுதந்திரப் பிரகடனத்தை ஒருதலைபட்சாக “அல்ஜைரில்” வெளியிட்டது. மேலும் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் எந்த ஒரு பலஸ்தீன பிரதேசமும் இருக்கவில்லை. பலஸ்தீனப் பகுதிகளில் “ஒரு நடைமுறை அரசாங்கத்தை” அது கொண்டிருக்கவில்லை. தொடக்கத்தில் பலஸ்தீனத்தை ஐ.நா. அங்கீகரிக்கவில்லை. ஆனால் அரபு நாடுகள் அங்கீகரித்தன. பலஸ்தீன அரசாங்கத்தை அங்கீகரிக்காத போதும் ஓஸ்லோ ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் பலஸ்தீன நிர்வாக சபையுடன் இராஜதந்திர உறவுகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் ஹமாஸ் இயக்கம்,  ஜனநாயக முறைப்படியான தேர்தலில் பலஸ்தீனத்தில் வெற்றி பெற்ற போதும் பல்வேறு நாடுகள் அதனை அங்கீகரிக்க மறுத்தன. நிதி உதவிகள் நிறுத்தப்பட்டன. ஹமாசின் ஆட்சியும் கவிழ்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிழக்குத் திமோர்
போர்த்துக்கலின் காலனி நாடாக இருந்த கிழக்குத் திமோர் “1975 ஆம் ஆண்டு நவம்பர் 28″ ஆம் நாள் தன்னைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்தது. அந்தப் பிரகடனத்தை மூன்றாம் உலக நாடுகளின் மார்க்சிய- லெனிய அரசுகள் அங்கீகரித்தன. மக்கள் சீனம் அங்கீகரித்தது. அவுஸ்திரேலியா, போர்த்துக்கல்,  இந்தோனேசியா ஆகியவை அங்கீகரிக்கவில்லை.
அதே நேரத்தில் இந்தோனேசியாவினால் அந்நாடு ஆக்கிரமிக்கப்பட்டு அந்நாட்டினது ஒரு மாகாணமாக கிழக்குத் திமோர் மாற்றப்பட்டது.
ஆனால் கிழக்குத் திமோர் மக்கள் இரு தசாப்த காலமாக விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். 1999 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 30 ஆம் நாள் கிழக்குத் திமோரில் ஐ.நா. மேற்பார்வையில், இந்தோனேசியாவிலிருந்து கிழக்குத் திமோர் பிரிவது குறித்த மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெருவாரியான மக்கள், கிழக்கு திமோரின் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு மே 20 ஆம் நாள் கிழக்குத் திமோரை ஒரு தனிநாடாக அனைத்துலகம் ஏற்றுக் கொண்டது.
அங்கீகாரத்துக்கு காத்திருக்கும் பிரகடனங்கள்
சோமாலிலாந்த்
அனைத்துலகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சோமாலியாவின் தெற்குப் பகுதியில் ஏடன் கடற்பரப்பையொட்டி சோமாலிலாந்த் என்ற பெயரில் “நிழல் அல்லது நடைமுறை சுதந்திரக் குடியரசு” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
1991 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாள் சோமாலியாவிலிருந்து சோமாலிலாந்த் சுதந்திரமடைந்ததாக அந்நாட்டு மக்கள் பிரகடனம் செய்தனர். இதனை அனைத்துலக சமூகமோ பிற நாடுகளோ இதுவரை அங்கீகரிக்கவில்லை.
இதனது எல்லைகளாக மேற்குப் பகுதியில் டிஜிபௌட்டி, தென்பகுதியில் எத்தியோப்பியா, கிழக்கில் சோமாலியா என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மொத்த மக்கள் தொகை 3.5 மில்லியனாகும்.
1884 ஆம் ஆண்டில் சோமாலிலாந்த்இ பிரித்தானியாவின் ஆக்கிரமிப்புக்குள்ளானது. 1898 ஆம் ஆண்டு வரை பிரித்தானிய இந்தியாவில் சோமாலிலாந்த் நிர்வகிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் 1905 ஆம் ஆண்டு கொலனி அலுவலகம் அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டது.
1960 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் நாள் பிரித்தானியாவிடமிருந்து சோமாலிலாந்த் சுதந்திரமடைந்தது. ஆனால் 5 நாட்களுக்குப் பின்னர் 1960 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் நாள் இத்தாலியின் ஆக்கிரமிப்பு சோமாலிலாந்தில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதுவும் பிரித்தானிய சோமாலிலாந்துடன் இணைக்கப்பட்டு இன்றைய சோமாலியா நாடு உருவாக்கப்பட்டது.
இப்புதிய சோமாலியாவில் தமது இன மக்களினது அபிலாசைகள் நிறைவேற்றப்படவில்லை என்று முன்னைய பிரித்தானிய சோமாலிலாந்த் மக்கள் போர்க்கொடி உயர்த்திடினர். இதனால் 1980-களில் சோமாலியாவில் உள்நாட்டு யுத்தம் வெடித்தது. 1991 ஆம் ஆண்டு சோமாலிலாந்த் காங்கிரஸ்இ சோமாலியாவிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது.
1994 ஆம் ஆண்டு சோமாலிலாந்த் மத்திய வங்கி உருவாக்கப்பட்டது.
சோமாலிலாந்தின் தேசியக் கொடி 1997 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
2001 ஆம் ஆண்டு மே 31 ஆம் நாளில் சோமாலிலாந்த் அரசியல் யாப்பானது மக்களின் வாக்கெடுப்பின் மூலம் ஏற்கப்பட்டது.
சோமாலிலாந்த் அரசியல் யாப்பின்படி,  சோமாலிய மொழி உத்தியோகப்பூர்வ மொழியாகும். பாடசாலைகளிலும் மசூதிகளிலும் அரபி மொழி பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் ஆங்கில மொழி கற்பிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, இத்தாலி மற்றும் எத்தியோப்பியாவில் அறிவிக்கப்படாத தூதரகங்களையும் சோமாலிலாந்த் உருவாக்கியுள்ளது. 20-க்கும் மேற்பட்ட அமைச்சுப் பொறுப்புக்கள் உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்படாத நடைமுறை அரசாங்கம் இயங்கி வருகிறது.
பெல்ஜியம், கானா,  தென்னாபிரிக்கா,  சுவீடன்,  ருவாண்டா,  நோர்வே,  கென்யா,  அயர்லாந்து ஆகிய நாடுகளிடனும் சோமாலிலாந்த் அரசியல் உறவுகளைப் பேணி வருகிறது.
2007 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் நாள் சோமாலிலாந்துடன் இணைந்து செயற்படுவது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் சோமாலிலாந்த் சென்றனர்.
அதேபோல் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் 2007 ஆம் ஆண்டு ஜனவரி 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் சோமாலிலாந்துக்கு பயணம் மேற்கொண்டனர்.
எத்தியோப்பியாவின் பிரதமர்இ 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சோமாலிலாந்த் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அரா தலைவர் ககினைச் சந்தித்து உரையாடினார்.
சோமாலிலாந்த்தை ஆப்பிரிக்க ஒன்றியம் அங்கீகரிக்க மறுக்கும் நிலையில் எத்தியோப்பியா, சோமாலிலாந்துக்கான அங்கீகாரத்துக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தென் கமரூன்
கமரூன் கூட்டமைப்பில் 1961 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 1 ஆம் நாள் தென்கமரூன் இணைக்கப்பட்டது. தென்கமரூனானது ஆங்கில மொழி பேசுவோரையும் இதர பகுதிகள் பிரெஞ்சு மொழி பேசுவோரையும் கொண்டதாக இருந்தது.
இந்நிலையில் 1972 ஆம் ஆண்டு மே 21 ஆம் நாள் வாக்கெடுப்பின் மூலம் கமரூன் கூட்டமைப்பு “ஒற்றையாட்சி” முறைக்கு மாறியது. தென் கமரூன் பிரதேசம் சுயாட்சியை இழந்தது. கமரூன் குடியரசினது வடமேற்கு மற்றும் தென்மேற்கு மாகாணங்களாக தென்கமரூன் மாற்றமடைந்தது. மேலதிக சுயாட்சி கோரிக்கையை தென்கமரூன் பிரதேசத்தின் முன்வைத்து போராடினர். 1961 ஆம் ஆண்டு கூட்டமைப்பு முறை மீள உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் கமரூன் நாட்டிலிருந்து 1994 ஆம் ஆண்டு தென்கமரூன் பிரதேசம் விடுதலை கோரியது. அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31 ஆம் நாள் தென்கமரூன் மக்கள் ஒன்றியத்தினால் அம்பஜானியா குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையைப் போன்ற விடுதலைக்குப் போராடும் அல்லது அங்கீகாரத்துக்குக் காத்திருக்கும் நாடுகளினது ஒன்றியமான யு.என்.பி.ஓவில் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் தென்கமரூன் உறுப்பு நாடாக இருந்து வருகிறது.
இதேபோல் செச்சன்யா,  புண்ட்லாந்து,  நாகர்னோ கராபக், தென் ஒசீட்டியா,  அப்கைசியா மற்றும் டிரான்ஸ்னிஸ்திரியா ஆகிய பிரதேசங்களும் 1990 ஆம் ஆண்டு முதல் தங்களது தன்னிச்சையாக தமது சுதந்திர நாட்டுப் பிரகடனங்களை வெளியிட்டுள்ளன.
தோல்வியில் முடிந்த சுதந்திரப் பிரகடனங்கள்
அமெரிக்க பிரதேசத்தில் உள்ள கரோலினாவானது 1712 ஆம் ஆண்டு இரண்டு தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளாகப் பிரிந்தன.
1776 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாள் தெற்கு கரோலினா,  பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்து தனக்கான சுய அரசாங்கத்தை அமைத்தது. 1788 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 8 ஆவது மாகாணங்களில் ஒன்றாக அது இணைந்தது.
இருப்பினும் 1860 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் நாள், அமெரிக்கக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதாக தெற்கு கரோலினா சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க உள்நாட்டு யுத்தம் உருவானது. அதன் பின்னர் அமெரிக்கக் கூட்டமைப்பிலேயே தொடர்ந்து நீடித்து வருகிறது.
குடியேற்றப்பட்ட வெள்ளை இனத்தவரின் “ரொடீசியா” பிரகடனம்
- பிரித்தானிய தென்னாப்பிரிக்க நிறுவனத்தின் உரிமையாளரான சீசில் ரொட் என்பவர், ஆப்பிரிக்காவின் ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியாவில் ஒப்பந்தம் செய்து கொண்டு தங்கங்களை வெட்டி எடுக்கும் உரிமை பெற்றார்.
சீசில் ரொட் மேலதிகமாக வெள்ளை இனத்தவரை ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியாவில் குடியேற்றினார். இதனால் 1893 இல் யுத்தம் ஏற்பட்டது.
ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியாவின் பெரும் பகுதிகளை ரொட்,  தனது சொந்த கூலிப்படையின் துணையுடன் கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்து ஜாம்பியா சீசில் ரொட்டின் பெயரால் வடக்கு ரொடீசியாகவும், ஜிம்பாப்வே தெற்கு ரொடீசியாகவும் மாறின. இரண்டு ரொடீசியாக்களுமே 1911 ஆம் ஆண்டு வரை தனித்தே இயங்கின.
1923 ஆம் ஆண்டு ஆண்டு பிரித்தானியாவின் செல்வாக்கு உட்பட்ட பகுதியில் அமைந்த சுயாட்சி அரசாங்கமாக தெற்கு ரொடீசியாவை பிரித்தானிய தென்னாப்பிரிக்க நிறுவனம் மாற்றியது. 1924 ஆம் ஆண்டு வடக்கு ரொடிசீயாவின் நிர்வாகத்தை பிரித்தானிய அரசாங்கத்திடம் பிரித்தானிய தென்னாப்பிரிக்க நிறுவனம் ஒப்படைத்தது.
1930 ஆம் ஆண்டு வெள்ளை இனத்தவரின் மேலாதிக்க ஆட்சி நிலை நிறுத்தப்பட்டது. முறைசார் வர்த்தகங்கள் மற்றும் தொழில்களில் ஈடுபட்ட பூர்வகுடி கறுப்பின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆகையால் தங்களது சொந்த மண்ணில் வெள்ளை இனத்தவர்களுக்கு உரிமையாக்கிக் கொள்ளப்பட்ட பண்ணைகளிலும் தங்கச் சுரங்கங்களிலும் தொழிற்சாலைகளிலும் வேலை பார்த்தாக வேண்டிய நிலைக்கு பூர்வகுடி கறுப்பின மக்கள் தள்ளப்பட்டனர்.
1953 ஆம் ஆண்டு தெற்கு ரொடீசிய கொலனித்துவ சுயாட்சி அரசாங்கம் மற்றும்  பிரித்தானிய நிர்வாகத்தின் கீழாக வடக்கு ரொடீசியா  மற்றும் நியஸலாந்த் (தற்போதைய மலாவி) ஆகிய இணைக்கப்பட்டு ரொடீசியக் கூட்டரசு உருவாக்கப்பட்டது.
தொடர்ந்தும் பூர்வகுடி கறுப்பின மக்கள் ஒடுக்குமுறைக்குள்ளாகினர். ஜிம்பாப்வே ஆப்பிரிக்க மக்கள் ஒன்றியம்,  சிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம் ஆகியவை பூர்வகுடி கறுப்பின மக்களுக்காகப் போரடின. அப் போது சிம்பாப்வே பூர்வகுடி கறுப்பின மக்களின் விடுதலை இயக்கங் களைத் தடை செய்த தெற்கு ரொடீசிய நிர்வாகம்,  அதன் தலைவர்களை சிறையிலடைத்தது.
1960-களில் ஆப்பிரிக்காவிலிருந்த பிரித்தானிய கொலனி நாடுகள் விடுதலை பெற்றன. இதனால் ரொடீசியக் கூட்டரசு கலைந்தது.
1963 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் பிரித்தானிய நிர்வாகத்தின் கீழி ருந்த வடக்கு ரொடீசியாவான ஷாம்பியா விடுதலை பெற்றது. நியாஸ லாந்த் என்ற மலாவியும் விடுதலை பெற்றது.
இந்நிலையில் தெற்கு ரொடீசியாவின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த இயான் சிமித், பிரித்தானியாவிடம் தெற்கு ரொடீசியாவுக்கான விடுதலை யைக் கோரினார். ஆனால் பிரித்தானிய அரசாங்கமோ, பூர்வகுடி கறுப் பின பெரும்பான்மையினரின் ஆட்சி ஒப்படைக்கின்றபோதுதான் சுதந் திரம் பற்றி பரிசீலிக்க முடியும் என்று அறிவித்தது.
இதனால் குடியேற்றப்பட்ட வெள்ளை இன மக்களின் சார்பில் 1965 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாள் தெற்கு ரொடீசியா ஒருதலைபட்சமான சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. இயான் ஸ்மித் தன்னை பிரதம ராக அறிவித்தார். ரொடீசியாவின் இந்தப் பிரகடனத்துக்கு முன்னோடிப் பிரகடனமாக அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தை ஸ்மித் சுட்டிக் காட்டினார்.
ஆனால் ஐக்கிய நாடுகள் சபையும் பொதுநலவாய சபையும் இதனை எதிர்த்தன. அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க மறுத்தது. ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றில் முதல் முறையாக ரொடீசியா மீது 1968 ஆம் ஆண்டு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. இதனிடையே தடை செய் யப்பட்ட இயக்கங்கள், கெரில்லா யுத்தங்களைத் தொடங்கின.
தென்னாப்பிரிக்க நாடு, ரொடீசியா மீது கரிசனை காட்டியபோதும் அங் கீகரிக்க வில்லை. 1979 ஆம் ஆண்டு நோர்வேயில் இருந்த தனது மக னின் திருமணத்தில் பங்கேற்க தெற்கு ரொடீசியாவின் பிரதமராக அறி வித்துக் கொண்ட ஸ்மித்துக்கு நோர்வே அரசாங்கம் அனுமதி அளிக்க வும் மறுத்தது. ஒருதலைபட்சமான சுதந்திரப் பிரகடனத்துக்கு பின்னர் அனைத்துலகத்திலிருந்து தெற்கு ரொடீசியா தனிமைப்படுத்தப்பட்டதாக மாறியது. அனைத்துலக நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் முயற்சி யில் 1979 ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன் பின்னர் 1980 ஆம் ஆண்டு இனப்பாகுபாடற்ற தேர்தல் நடத்த தெற்கு ரொடீசிய அரச தலைவராக இருந்த ஸ்மித் ஒப்புக் கொண்டார். 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்மித்தின் நிறவெறி அரசாங்கத்தை பூர்வகுடி கறுப்பின மக்கள் தூக்கியெறிந்தனர். ஜிம்பாப்வே ஆப்பிரிக்கர் கள் தேசிய ஒன்றியத்தின் தலைவர் முகாபே வெற்றி பெற்று தொடர்ந் தும் ஆட்சியில் உள்ளார். தெற்கு ரொடீசியா,மீண்டும் ஜிம்பாப்வே என்ற பெயர் மாற்றம் அடைந்தது.
கடங்கா
கொங்கோ ஜனநாயகக் குடியரசின் தென் மாகாணம் கடங்கா என்பதா கும். கொங்கோ அரசாங்கமாகனது கடங்காவுக்கு 1960 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேலதிக சுதந்திரத்துக்கான அனுமதியை அளித்தது. அதனைத் தொடர்ந்து கடங்கா,  தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. இதற்கு பெல்ஜியம் ஆதரவளித்தது. இதனிடையே 1961 ஆம் ஆண்டு கொங்கோவின் பிரதமர் லூமூமாம்பா படுகொலை செய்யப் பட்டார். லூமூமாம்பாவின் மரணத்தைத் தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்புச் சபை கூட்டப்பட்டது. 1962 ஆம் ஆண்டு ஐ.நா. படை, கடங்கா மீது தாக்கு தல் நடத்தியது. 1963 ஆம் ஆண்டு கடங்காவின் தனிநாட்டுப் பிரகட னத்தை ஐ.நா. முடிவுக்கு கொண்டு வந்தது.
மினெர்வா
1852 ஆம் ஆண்டு பசிபிக் பிராந்தியத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நாடு மினெர்வா. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா இத்தீவை ஆக்கிரமித்திருந்தது. 1972 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் நாள் தன்னை ஒரு சுதந்திர நாடாக மினெர்வா பிரகடனம் செய்தது. சொந்தப் பணத்தை யும் அது உருவாக்கியது. மினெர்வாவின் சுதந்திரப் பிரடகனம் குறித்து அண்டை நாடுகளான அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, டொங்கா, பிஜி உள்ளிட்டவை விவாதித்தன. இந்நிலையில் 1972 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் நாள்,  டொங்கா நாட்டு மக்களின் மீன்பிடித்தளமாக மினெர்வா இருப்பதாகவும் மினெர்வா மீது தமது நாட்டுக்கே உரிமை இருப்பதாக வும் வர்த்தமானி அறிவித்தலை டொங்கா அரசாங்கம் வெளியிட்டது. தற்போது வரை மினெர்வா விடுதலைப் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
வடக்கு சைப்ரசின் துருக்கிய குடியரசு
பிரித்தானிய காலனி ஆதிக்கத்திலிருந்து சைப்ரஸ் 1960 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 16 ஆம் நாள் விடுதலை பெற்றது. அந்நாட்டில் கிரேக்க சைப்பீரி யர்கள் 80 விழுக்காட்டினரும் துருக்கிய சைப்ரீயர்கள் 18 விழுக்காடும் உள்ளனர்.
1963 ஆம் ஆண்டு அந்நாட்டு முதலாவது அரச தலைவர் ஆர்ச்பிசம் மகாரியஸ்  13 அரசியல் யாப்பு திருத்தங்களை பரிந்துரைத்தார். ஆனால் இத்திருத்தங்களை துருக்கிய சைபீரியர்கள் நிராகரித்தனர். இதனைத் தொடர்ந்து சைப்ரஸ் அரசாங்கத்துக்கும் சைப்பீரிய துருக்கியர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படை 1965 ஆம் ஆண்டு அங்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் சைப்ரஸ் மீது 1974 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் நாள் துருக்கி தாக்குதல் நடத்தியது. 1960 ஆம் ஆண்டைய அரசியலமைப்பு முறையை மீள நடைமுறைப்படுத்த துருக்கி அழுத்தம் கொடுத்து இத் தாக்குதலை நடத்தியது. அதன் பின்னர் ஜெனீவாவில் அமைதிப் பேச்சுக் கள் நடத்தப்பட்டன. அப்பேச்சுக்கள் தோல்வியடைய சைப்ரசுக்குள் துருக் கியப் படை உள்நுழைந்தது. 37 விழுக்காட்டு பிரதேசத்தை துருக்கி ஆக்கி ரமிக்க இலட்சக்கணக்கான கிரீக் சைப்பீரியர்கள் அகதிகளாக இடம் பெயர்ந்தனர்.
இந்நிலையில் 1983 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் நாள் வடக்கு சைப் ரசில் துருக்கிய குடியரசுப் பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் 541 ஆம் தீர்மானத்தின்படி 1983 ஆம் ஆண்டு நவம்பர் 18 இல் இந்தப் பிரகடனம் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டது. மேலும் வடக்கு சைப்ரசிலிருந்து துருக்கிய படைகள் வெளியேற வேண்டும் என் றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. துருக்கி மட்டுமே அந்நாட்டை அங்கீகரித் தது. சைப்ரஸ் நாட்டை குறிப்பிடுகையில் “கிரீக் சைப்ரஸ் நிர்வாகப் பகுதி” என்றே இன்றளவும் துருக்கி குறிப்பிட்டு வருகிறது.
நாகலாந்து
இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள நாகலாந்துக்கு பிரித்தானி யார்கள் 1832 ஆம் ஆண்டு சென்றனர். அதுவரை எதுவித அன்னிய தலையீடு இல்லாமல் சுதந்திர நாடாக நாகா பிரதேசம் இருந்து வந்தது. பிரித்தானிய இந்திய நிர்வாகத்தில் கூட நாகாலாந்து இணைக்கப்பட வில்லை.
1947 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலை பெற்றது. அதற்கு முன்னர் 1947 ஆம் ஆண்டு ஜுலை 19ஆம் நாள் இந்திய விடுத லைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் ஒருவரான காந்தியை நாகா குழுவினர் நேரில் சந்தித்துப் பேசினர். நாகா தேசிய இனமக்கள் சுதந்திரமாக வாழ்வதற்குரிய உரிமை படைத்தவர்கள் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கையை காந்தியார் வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து 1947 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14 ஆம் நாள் நாகலாந்து சுதந்திர நாடாக தன்னைப் பிரகடனம் செய்தது.
1947 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்துக்கும் சுதந்திர நாகலாந்து நாட் டின் தேசிய சபைக்கும் இடையே 9 அம்ச ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத் தானது. அதில் நாகா மக்களின் சுயநிர்ணய உரிமையை இந்தியா அங்கீ கரித்தது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை இந்தியா பின்னர் நிராகரித்து இந் திய அரசியல் யாப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
இந்திய அரசியல் யாப்பை ஏற்க மறுத்த நாகலாந்துக்கு இந்திய ஒன்றி யத்தில் இணையுமாறு பகிரங்க அழைப்பையும் இந்தியா விடுத்தது.
இந்நிலையில் 1951 ஆம் ஆண்டு மே 16 ஆம் நாள் நாகாலந்து தேசிய சபையானது பொதுமக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தியது. 99.9 விழுக்காடு நாகா தேசிய இனமக்கள்,  இறைமையுள்ள நாகா சுதந்திர அரசாங்கத்துக்காகவே வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பு விடயம் ஐக் கிய நாடுகள் சபைக்கும் தெரிவிக்கப்பட்டது. மேலும் நாகாலாந்து தனி நாட்டு அரசாங்கமும் இராணுவம் உருவாக்கப்பட்டது.  ஆனால் 1960-களில் நாகாலந்தை இந்தியா ஆக்கிரமித்து தனது மாநிலங்களில் ஒன் றாக்கிக் கொண்டது.  நாகாலாந்தின் சுய நிர்ணய உரிமைக்கான விடுத லைப் போராட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.  1993 ஆம் ஆண்டு ஐ.நா. சபையைப் போன்ற அங்கீகரிக்கப்படாத நாடுகளின் ஒன்றி யத்தில் நாகா விடுதலை அமைப்பான நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் இணைந்து கொண்டது.