Tuesday, 31 August 2010

வினோத பழக்கங்கள்

பிரபலமான சிலருக்கு வினோத பழக்கங்கள் இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கின்றோம்.இதோ சில பிரபல வினோதங்கள்.

பிரபல விஞ்ஞானி ஜன்ஸ்டீன் குளிக்கும் போது குளியல் அறைக் கதவை தாழ் இடாமல்தான் குளிப்பார்.

துப்பறியும் தந்தை எனப் புகழப்படுபவர் எட்கார் ஆலன்போ.இவரது செல்லப்பறவை இவரது தோளின் மேல் அமர்ந்தபடி இருந்தால் தான் கதை எழுதும் ஆர்வம் அவருக்கு ஏற்படுமாம்.


நாத்தானியல் ஹாதார்ன் என்ற அமெரிக்க எழுத்தாளர் தன் மனைவியிடம் இருந்து கடிதம் வந்தால் முதலில் கையை நன்கு சுத்தமாக கழுவி விட்டுத்தான் கடிதத்தை பிரிப்பாராம் .

வில்லியம் மேக்விஸ் தாக்கரே எனும் எழுத்தாளர் ' வானிட்டி பேர் ' நாவல் மூலம் அகில உலகப் புகழ் பெற்றார்.இந்த நாவலை எந்த வீட்டிலிருந்து எழுதினாரோ அந்தவீ ட்டைக் கடக்கும் போதெல்லாம் தன் தொப்பியை எடுத்துவிட்டு அந்த வீட்டுக்கு தலை வணங்குவார்.

முதன் முதலில் ஆங்கில அகராதியைத் தயாரித்த டாக்டர் சாமுவேல் ஜோன்சானுக்கு பார்வையாளர்கள் தொல்லைப் படுத்துவார்கள் என்ற பயம் எப்போதும் உண்டு.அதனால் அவர் எழுதும்போது மரத்தின் மேல் உட்கார்ந்து கொள்வாராம்.

நெப்போலியனை வெண்று உலகப் புகழ் பெற்ற வேசிண்டன் பிரபு நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதில் தீவிரமானவர்.அதனால் எப்போதும் தனது சட்டைப் பையில் ஆறு கடிகாரங்களை வைத்திருப்பாராம்.