Tuesday, 31 August 2010

பெண்ணாக மாறி மனைவியை மகளாக தத்தெடுத்த பொலிஸ் உயரதிகாரி!!

பொலிஸ் உயரதிகாரியொருவர் பெண்ணாக மாறி தனது மனைவியை மகளாக தத்தெடுத்துக் கொண்ட விசித்திர சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. உத்தர பிரதேசத்திலுள்ள லக்னோ நகரில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நாயகமாக பணியாற்றிய டிக்கி பண்டா என்ற மேற்படி நபர், இம்மாத ஆரம்பத்தில் திடீரென பெண்களின் ஆடையை அணிந்து வந்து தான் பெண்ணாக மாறி விட்டதாக அறிவிப்புச் செய்தார்.

இந்நிலையில் அவரது மனைவி வீணாவின் உறவினர்கள், டிக்கி பண்டா பெண்ணாக மாறியதாக அறிவித்து வீணாவை நிர்க்கதிக்கு உள்ளாக்கி விட்டதாக வழக்குத் தாக்கல் செய்தனர். நீதிமன்ற வழக்கு விசாரணைகளின் போது ஆஜராகிய டிக்கி பண்டா, பெண்ணாக மாறிய தனக்கும் தனது மனைவிக்குமிடையே கணவன் மனைவி பந்தம் தொடர்வது சாத்தியமில்லை என்பதால் வீணாவை தனது மகளாக தத்தெடுத்துக் கொள்வதாகக் கூறினார்.

அத்துடன் வீணாவுக்கு மாத பராமரிப்பு செலவாக 300 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணத்தையும் வழங்க அவர் இணக்கம் தெவித்துள்ளார்