Tuesday, 31 August 2010

விஷப்பாம்புகளுடன் 114 நாட்கள் வசித்து சாதனை

லண்டன் : கொடிய விஷப்பாம்புகளுடன் 114 நாட்கள் தங்கியிருந்து இங்கிலாந்தைச் சேர்ந்தவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இது குறித்து தி சன் எனும் பத்திரிகையில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: இங்கிலாந்தைச் சேர்ந்த டேவிட்ஜோன்ஸ் (45) என்பவர் ஒரு தச்சுத்தொழிலாளி. இவர் 5 மீ நீளமும், 4 மீ அகலமும் கொண்ட ஒரு சிறிய மரப்பெட்டியினை உருவாக்கினார். அதில் ராஜநாகம், கருநாகம், சாரைப்பாம்பு, பச்சைப்பாம்பு , 27-க்கும் மேற்பட்ட சிறிய ரக பாம்புகள் உள்ளிட்ட பல்வேறு இன வகையினைச் சேர்ந்த கொடிய விஷப்பாம்புகளை அடைத்து அதனுள் கடந்த மே மாதம் உள்ளே சென்றார். தொடர்ந்து மூன்று மாதங்கள் (114 நாட்கள் )தங்கியிருந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், திரில்லான அனுபவமாகஇருந்தது. வாழ்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்தேன். மேலும் சில விஷப்பாம்புகள் எனது உடல் மேல் ஊர்நது வரும் போது நான் சற்றும் உடலை அசைக்காமல் அப்படியே சில மணிநேரம் இருந்துள்ளேன். அதனால் அவைகள் என்னை கடிக்கவில்லை. அசைத்திருந்தால் கடித்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கு முன்பு இவரது சாதனையை தென்னாப்பிரிக்காவின் நேட்டிசுவார்ட் கடந்த 2009-ம் ஆண்டு 113 நாட்கள் தங்கியிருந்ததே மிகப்பெரிய சாதனையாக இருந்தது. அதனை டேவிட்ஜோன்ஸ் முறியடித்துள்ளார்.