Pygmy marmoset: தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில், கம்போடியா, மற்றும் பெரு நாட்டில் காணப்படும் இந்தவகையான குரங்குகள்தான் உலகிலே மிகசிறிய குரங்கினம் ஆகும். இவை சுமார் 11 -15 cm உயரமே வளரும், வாலின் நீளம் சுமார் 17 - 22 cm மற்றும் இதனுடைய எடை 120 கிராம், இவை பிறக்கும் பொது 15 கிராம் எடையே இருக்கும். இவற்றின் ஆயுள்காலம் 11 முதல் 15 வருடங்கள் ஆகும். கொசுறு: பிறக்கும் போது பெரும்பாலும் குட்டிகள் இரட்டை பிறவியாக (Twins) தான் இருக்கும்.


2. Pygmy Rabbit: வட அமெரிக்காவில் காணப்படும் இந்தவகையான முயல்கள்தான் உலகின் மிகசிறியவகையாகும். நன்கு வளர்ந்த ஒரு முயலின் எடை 400 கிராம் தான் இருக்கும், உடலின் நீளம் சுமார் 24 முதல் 29 cm தான்.


2. Pygmy Rabbit: வட அமெரிக்காவில் காணப்படும் இந்தவகையான முயல்கள்தான் உலகின் மிகசிறியவகையாகும். நன்கு வளர்ந்த ஒரு முயலின் எடை 400 கிராம் தான் இருக்கும், உடலின் நீளம் சுமார் 24 முதல் 29 cm தான்.





5. Thumbelina: இதுதான் உலகத்தின் மிக சிறிய குதிரை இதன் எடை 27 கிலோகிராம்தான். குள்ள குதிரையின் உயரம் 17 இன்ச் தான். (பார்த்தா பாவமா இல்ல.....)

6. Paedocypris: இந்தோனிசியாவில் உள்ள சுமத்ரா தீவுகளில் காணப்படும் இந்த மீன்கள் தான் உலகிலே மிகசிறியதாகும் அதுமட்டும்மல்ல முதுகுஎலும்பு (vertebrate) உள்ள உயிரினங்களிலே இதுதான் மிகசிறியதாம். இதன் நீளம் சும்மா 7.9 mm தான் (1cm கூட இல்லை -ஆச்சிரியமா! இருக்கா)


7. Brazilian Gold frog: பிரேசில் நாட்டின் தென்பகுதியில் காணப்படும் இந்தவகை தவளைகள் தான் உலகிலே மிகசிறிய தவளை இனமாகும். Izecksonh's Toad என்றும் அழைக்கப்படுகிறது. இவை சுமார் 9.8 mm உடையது. (இதுகூட 1 cm விட சிறியதுதான்)

8. Thread snake: தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் சில ஆசிய நாடுகளில் இவ்வகை பாம்புகள் காணபடுகின்றன. இவைதான் உலகிலே மிகசிறிய பாம்பினமாகும். இதன் அதிகபட்ச நீளம் 4.25 இன்ச் தான்.

9. Philippine Bamboo bat: இவைதான் உலகிலேயே மிகசிறிய வவ்வால் இனமாகும். நீளமும் 4cm எடையும் 1.5 கிராம் உடையது. இதன் இறக்கையின் நீளம் 15 cm.
