Monday, 30 August 2010

இன்டர்நெட் மூலமாக ஒருவரின் முகத்தினை அடையாளம் காணும் புதிய சாப்ட்வேர்

இன்டர்நெட் வாயிலாக ஒருவரின் உருவத்தினை அடையாளம் காணும் புதிய சாப்ட்வேர் விரைவில் அறிமுகமாக உள்ளது. தகவல் தொழில்நுட்ப புரட்சியின் ஒரு பகுதியான பேஸ்.காம் என்ற இணையதளம் புதிய சாப்ட்வேர் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இதில் முகம் தெரியாத எந்த ஒரு நபரையும் எளிதில் அடையாளம் காணலாம்.

இது குறித்து பேஸ்.காம் தலைமை நிர்வாகி கில்ஹிர்ஸ்கி கூறியதாவது : இத்தகைய புதிய சாப்ட்வேர் தொழில்நுட்பத்தினை எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் பயன்படுத்தலாம். பூகம்பம், நிலச்சரிவு போன்ற பேரிடர் காலங்களில் மனிதர்கள் முகம் தெரியாமல் இறந்து போனால் அவர்களை இத்தகைய நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அடையாளர் காணலாம். இதனை சர்வேதேச செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகள் பயன்படுத்த தொடங்கியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.